For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இப்படியெல்லாமா பிரச்சனை வரும்?

தென்னாப்ரிகாவின் கேப் டவுன் நகர் தான் உலகிலேயே தண்ணீர் பயன்படுத்தாத முதல் நகரம் என்ற பெயரை பெறப்போகிறது. ஏப்ரல் மாதத்திலிருந்து அங்கு சுத்தமாக தண்ணீர் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

|

இன்று உலக தண்ணீர் தினம். எதற்காக இந்த தினம் இதற்கெல்லாம் ஒரு தினமா? இந்த தினத்தை எப்படி அனுசரிப்பது அல்லது எப்படி கொண்டாவது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் பொது ஜனங்கள் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை.

அடுத்த மாதத்திலிருந்து தண்ணீர் பயன்படுத்த தடை, ஏனென்றால் நாட்டில் சுத்தமாக தண்ணீர் இருப்பு இல்லை, மழை இல்லாத காரணத்தினால் நீர் ஆதாரங்கள் எல்லாமே வரண்டு கிடக்கிறது. அதனால் தான் இந்த அறிவிப்பு என்கிறார்கள்.

என்றைக்காவது இந்த நிலையை யோசித்திருக்கிறோமா? போர்ல தண்ணீ வர்லையா லாரி தண்ணீ யூஸ் பண்லாம்.குடிக்கிறது கார்ப்பரேஷன் வாட்டர் வர்லயா? கேன் வாட்டர் வாங்கிக்கலாம் ப்யூரிஃபையர் யூஸ் பண்லாம் என்று மாற்று வழிகளை நாம் வைத்திருப்போம். ஆனால் அப்படி எந்த மாற்று வழிக்கும் வழியில்லை என்றால் என்ன செய்வது? தண்ணீருக்கு எங்கே போவது.....

இப்படியொரு நிலைமை எல்லாம் நமக்கு வராது. என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கேப் டவுன் நகரின் கதையை தெரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து அங்கே தண்ணீர் முற்றிலுமாக பயன்படுத்த தடை. உலகளவில் தண்ணீர் இல்லாத நகரம் என்ற பெரும் பெயரை வாங்கியிருக்கிறது கேப் டவுன். அங்கு வாழக்கூடிய சுமார் நான்கு கோடி மக்களும் வேறு இடத்தை நோக்கி குடிபெயர துவங்கியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நகரம் :

நகரம் :

அடுக்கடுக்கான மலைகள், ஆப்ரிக்கன் பென்குயின்,கடல் என சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரக்கூடிய நகரமாக கேப் டவுன் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் உலகளவில் மிகத் தீவிரமான தண்ணீர் பஞ்சம் கொண்ட நகரம் என்ற பெயரையும் வாங்கியிருக்கிறது.

Image Courtesy

மார்ச் இறுதி :

மார்ச் இறுதி :

அவர்களின் கணக்குப் படி மார்ச் இறுதியிலேயே கையிருப்பு தண்ணீர் தீர்ந்திடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்கு மழைப்பொழிவு மிக குறைவாக இருந்த காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதாம்.

ஒரு பக்கம் நீராதாரம் குறைந்து கொண்டேயிருக்க இன்னொரு பக்கம் மக்களின் ஜனத்தொகை பெருகியிருக்கிறது.

Image Courtesy

திட்டங்கள் :

திட்டங்கள் :

நிலைமை கை மீறி போவதை அறிந்த அரசாங்கம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவு நீரை சுத்தீகரிக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை வகுத்துப் பார்த்தது. அதோடு தண்ணீரை பயன்படுத்த சட்டத்தை கடுமையாக்கினார்கள். நகரில் வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு 87 லிட்டர் மட்டுமே தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றார்கள்.

Image Courtesy

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெட் அணி :

வாகனங்களை தண்ணீரால் கழுவுவது,நீச்சல் குளங்களை பயன்படுத்துவது ஆகியவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அதோடு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்கே விளையாடச் சென்ற போது விளையாடி முடித்ததும் ஷவரில் நீங்கள் இரண்டு நிமிடங்கள் மட்டுமே குளிக்க முடியும் என்று அதற்கும் கட்டுப்பாடு விதித்தார்கள்.

Image Courtesy

காரணம் :

காரணம் :

ஒரு பக்கம் இப்படி தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருந்த நேரத்திலும் தண்ணீர் இருப்பு தாறுமாறாக குறைந்திருக்கிறது. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வதற்குள் நிலைமை கை மீறிச் சென்று விட்டது.

ஜெர்மனைச் சேர்ந்த நிறுவனமொன்று அங்கு முகாமிட்டு தண்ணீர் பஞ்சத்திற்கான காரணத்தை ஆராய்ந்தது.

Image Courtesy

அதிர்ச்சித் தகவல்கள் :

அதிர்ச்சித் தகவல்கள் :

அவர்கள் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் தாறுமாறு ரகம். கிட்டத்தட்ட 80 சதவீத தண்ணீர் குழாய்களில் ஏற்பட்டிற்கும் விரிசல்களினால் லீக்கேஜ் ஆகியிருக்கிறது. அதைவிட அவர்களின் பராமரிப்பு இல்லாத நீர் தேக்கங்கள் மற்றும் வசதி குறைவான கட்டமைப்பு வசதிகளால் ஐம்பது சதவீத நீரை இழந்திருக்கிறார்கள் என்றார்கள்.

Image Courtesy

 ஸ்மார்ட் மீட்டர் :

ஸ்மார்ட் மீட்டர் :

பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாட்டர் மேனேஜ்மெண்ட் என்று சொல்லி கேப் டவுனுக்கு படையெடுத்தன. அவற்றில் ஃபிரஞ்சு நிறுவனம் ஒன்று, தண்ணீரை பயன்படுத்தவென்று ஸ்மார்ட் மீட்டரை அறிமுகப்படுத்தியது.

அதாவது நகரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டினரும் இதனை வாங்கி பொருத்திக் கொள்ள இணைய வசதியுடன் ஆன்லைன் மூலமாகவே அந்த வீட்டிற்கு எவ்வளவு தண்ணீர் செலவழிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். தண்ணீர் கொடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை கூட செய்திடலாம்.

Image Courtesy

வாட்டர் க்ரெடிட் :

வாட்டர் க்ரெடிட் :

இந்த திட்டம் முதலில் மிகவும் பின் தங்கிய மக்களின் வீடுகளில் பயன்படுத்தி சோதனையிடப்பட்டது. இதிலேயே ‘வாட்டர் க்ரெடிட்' என்றும் கொண்டுவந்தார்கள். இதனை நீங்கள் மொபைல் போன் மூலமாகவே இதனை அக்சஸ் செய்திடலாம். தண்ணீர் பற்றாகுறை இருந்தால் வாட்டர் க்ரெடிட் வசதி மூலமாக நீங்கள் டாப் அப் செய்ய வேண்டும். அந்த கட்டணத்திற்கு ஏற்ப உங்கள் வீட்டிற்கு மட்டும் தண்ணீர் வழங்கப்படும்.

போதியளவு பணம் இல்லையென்றால் அந்தமீட்டர் காண்பித்து கொடுக்க உங்கள் வீட்டிற்கு வருகிற தண்ணீரை கட் செய்து விடுவார்கள்.

Image Courtesy

தண்ணீர் மேலாண்மை :

தண்ணீர் மேலாண்மை :

இந்த நிறுவனங்கள், எங்கே லீக்கேஜ் ஆகிறது என்பதை கண்டுபிடிக்க ட்ரோன் மற்றும் சேட்டிலைட் எல்லாம் பயன்படுத்தினார்கள். தண்ணீர் மேலாண்மை மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தண்ணீர் கிடைக்க புதிய வழி எல்லாம் ஆராயப்பட்டது. காற்றிலிருந்து நீரெடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

Image Courtesy

கைமீறிச் சென்று விட்டது :

கைமீறிச் சென்று விட்டது :

ஓரளவிற்கு தான் இவையெல்லாம் கைகொடுக்கும். அதாவது போதுமானவளவு தண்ணீர் இருக்க, அதனை கையாள மட்டுமே இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் பயன்படுகிறது. தண்ணீரே இல்லாத போது இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்திட முடியும்?

Image Courtesy

வாட்டர் ஏடிஎம் :

வாட்டர் ஏடிஎம் :

அதன் பிறகு வாட்டர் ஏடிஎம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதாவது எந்த வீட்டிற்கும் தண்ணீர் வராது. பொதுஇடத்தில் கட்டணத்தை செலுத்தி தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கும் ஏடிஎம் கார்டு போலவே வாட்டர் கார்டு கொடுக்கப்பட்டது.

Image Courtesy

சலுகைகள் :

சலுகைகள் :

அப்படி தண்ணீர் எடுக்க நகர் முழுவதும் 200 பாயிண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. கிட்டதட்ட ரேஷன் முறை இது. இங்கே ஒரு நாளைக்கு 25 லிட்டர் தண்ணீர் மட்டும் வழங்கப்படும் என்றார்கள். குளிக்க, துவைக்க, பாத்திரம் கழுவ,குடிக்க என எல்லாவற்றிற்கும் இந்த தண்ணீரைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தண்ணீரை பயன்படுத்தும் அளவுகோலில் சில சலுகைகள் வழங்கப்பட்டன.

Image Courtesy

அரசியல் காரணம் :

அரசியல் காரணம் :

இதற்கு சில அரசியல் காரணங்களும் சொல்லப்படுகிறது. கேப் டவுன் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கே டெமாக்ரடிக் அலையன்ஸ் என்ற கட்சி ஆட்சி செய்கிறது. ஆனால் பிற பகுதிகளில் ஆஃப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

Image Courtesy

அணை :

அணை :

கடுமையான வறுமை, தண்ணீர் பஞ்சம், நோய்கள், பணப் பற்றாகுறை, மருத்துவ வசதி இல்லாமை, என நாலாபுறமும் பெரும அவஸ்தைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேப் டவுண்டுக்கு தண்ணீர் கிடைக்ககூடிய முக்கிய ஆதாரம் அணைக்கட்டு தான். அவற்றிலேயே தண்ணீர் சொற்பமாகத்தான் இருக்கிறது.

Image Courtesy

75 சதவீத வீடுகள் :

75 சதவீத வீடுகள் :

இந்த நிலையில் தான் ஏப்ரல் பதினைந்தாம் தேதி முதல் முற்றிலுமாக தண்ணீர் இல்லாத நகரமாக கேப் டவுன் உருவெடுக்கப்போகிறது. நகரில் இருக்கும் 75 சதவீத வீடுகளுக்கு முற்றிலும் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Methods Followed By Cape Town To Avoid Water Scarcity

Methods Followed By Cape Town To Avoid Water Scarcity
Story first published: Thursday, March 22, 2018, 17:00 [IST]
Desktop Bottom Promotion