எந்த ராசிக்காரர்கள் எந்த கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் அவர்களை நோக்கி வரும்?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும் ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர்.

அதில் ஜோதிடர்கள் ஒருவரை நோக்கி அதிர்ஷ்டம் வர வேண்டுமானால், அவர்களது ராசிக்கு ஏற்ற கற்களை மோதிரங்களாக அணிந்து கொள்ள கூறுவர். இப்படி ஒருவர் ராசிக்கு ஏற்ப அதிர்ஷ்ட கற்களை அணிந்து கொண்டால், அந்த ராசிக்காரர்களை ஆளும் கிரகம் அல்லது அதிபதியின் பலம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Lucky Gemstones For Each Zodiac Sign

ஒருவரது ராசியில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால், அதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் காண்பதோடு, நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் மற்றும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்களது ராசிக்கேற்ப ராசிக்கற்களை அணிந்து கொண்டால், அதிர்ஷ்ட காற்றை நம் மீது வீசச் செய்யலாம். அதோடு பலவீனமாக இருக்கும் கிரகங்களுக்கு அடிக்கடி பூஜை செய்து வணங்க வேண்டியதும் அவசியம்.

உங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்த மாதிரியான கற்கள் அணிவது நல்லது என தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ராசிகளில் முதல் ராசி மேஷம். இந்த ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : வைரம் - வைரம் உங்களது சிந்தனையை தெளிவுப்படுத்தும். வைரக் கற்களைக் கொண்டு ஒருவர் மோதிரம் அணிந்தால், அது ஒருவரது குழப்பமான மனநிலையைத் தடுத்து, எப்போதும் தெளிவான மனநிலையில் வைத்துக் கொள்ளும். மேலும் வைரம் நிதி நிலைமையை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

காளை அடையாளத்தைக் கொண்ட இரண்டாம் ராசியான ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : மரகதம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு மரகதம் பாதுகாப்பான கல்லாத கருதப்டுகிறது. இது ஒருவரது சுய மரியாதைக்கு உற்சாகத்தை வழங்கும் ஊக்கத்தை அளிக்கிறது. இது ஒருவரது படைப்புத் திறனை மேம்படுத்தும்.

மிதுனம்

மிதுனம்

இரட்டையர்களை அடையாளமாக கொண்ட மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன் ஆகும்.

அதிர்ஷ்ட கல்: ரத்தின கல் வகை - இந்த கல் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும். இந்த கல் நல்ல ஆரோக்கியத்தை குறிக்கிறது மற்றும் இது அதிர்ஷ்டத்தை வழங்கும் மிகச்சிறந்த கல்லாக கருதப்படுகிறது. இந்த கல் உணர்ச்சிகளின் சமநிலை மற்றும் ஒற்றுமை உணர்வு கொண்டுவருகிறது.

கடகம்

கடகம்

நண்டு அடையாளத்தைக் கொண்ட கடக ராசிக்காரர்களின் அதிபதி சந்திரன் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : மூன்ஸ்டோன் - கடக ராசிக்காரர்கள் சற்று மந்தமான மனநிலையில் இருப்பவர்கள். இந்த ராசிக்கல்லை மோதிரமாக அணிந்திருந்தால், அது அவர்களது மனநிலையை மேம்படுத்துவதோடு, ஒரு தெளிவான மனநிலையைக் கொடுக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிங்கத்தை அடையாளமாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரியன் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : ரூபி கல் - சிம்ம ராசிக்காரர்கள் ரூபி கற்களை அணிந்தால், அது பெருந்தன்மையை அதிகரிக்கும் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும். இந்த கல் சிம்ம ராசிக்காரர்களின் ஆற்றலை பெருக்குவதோடு, வாழ்வின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, விழிப்புணர்வுடன் இருக்கச் செய்யும்.

கன்னி

கன்னி

கன்னியை அடையாளமாக கொண்ட கன்னி ராசிக்காரர்களின் அதிபதி புதன் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : நீல மாணிக்கம் - இந்த கல் ஒருவரது மனதை ஒருமைப்படுத்தும் நிலையை அதிகரிக்க உதவுவதோடு, எந்த ஒரு விஷயத்தாலும் மனதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கும். மேலும் இது ஒருவரது கனவுகளை மேம்படுத்துகிறது. மேலும் இந்த கல் ஒருவரை மன அழுத்தம் அல்லது மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.

துலாம்

துலாம்

தராசை அடையாளமாக கொண்ட துலாம் ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : பெரிடாட்/ பச்சை நிற கல் - இந்த கல் ஒருவரை அமைதியாகவும், பொறுமையுடனும் இருக்க உதவும். மேலும் இந்த கல் ஒருவரது கனவுகளை நிறைவேற்றுவதற்காக கவனத்தை செலுத்த உதவும். மேலும் இந்த கல் தெளிவாகவும், சரியாகவும் முடிவு எடுக்கச் செய்யும்.

விருச்சிகம்

விருச்சிகம்

தேளை அடையாளமாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய் ஆகும்.

அதிர்ஷ்ட கல் : கார்னெட் / அடர் சிவப்பு நிற கல் - காதல் மற்றும் ஆரோக்கியத்திற்கான கல் தான் கார்னெட். இது ஒருவரைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க உதவும். மேலும் இந்த கல் ஒருவருக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். கார்னெட் கல் ஒருவரை மன இறுக்கம் மற்றும் துக்கத்தில் இருந்து விடுவிக்கும்.

தனுசு

தனுசு

பாதி குதிரை மற்றும் பாதி மனிதனை அடையாளமாக கொண்ட தனுசு ராசிக்காரர்களின் அதிபதி குரு ஆகும்.

அதிர்ஷ்ட கல்: நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் - இந்த வகை கல் ஒருவரது கனவுகளை நினைவாக்க பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக இந்த கல் ஒருவரது லட்சியத்தை நல்ல வழியில் அடைய உதவிப் புரியும்.

மகரம்

மகரம்

ஆடு அடையாளத்தைக் கொண்ட மகர ராசிக்காரர்களின் அதிபதி சனி ஆகும்.

அதிர்ஷ்ட கல் : புஷ்பராகம் - இந்த கல் நல்ல அறிவாற்றல், சந்தோஷம், அதிர்ஷ்டம் போன்றவற்றை வழங்கும். இந்த கல்லை மோதிரமாக அணிந்து கொள்வதன் மூலம், ஒருவரது ஆசையை அடையும் நம்பிக்கை மேம்படும். முக்கியமாக இந்த கல் உறவுகளை உறுதிப்படுத்தி நல்வழிப்படுத்தும்.

கும்பம்

கும்பம்

தண்ணீர் குடத்தை அடையாளமாக கொண்ட கும்ப ராசிக்காரர்களின் அதிபதி சனி ஆகும்.

அதிர்ஷ்ட கல் : செவ்வந்திக் கல் - செவ்வத்திக் கல் மிகவும் மதிப்புவாய்ந்த கற்களுள் ஒன்றாகும். இது பல இயற்கை சக்திகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது அதிர்ஷ்டத்தை வழங்கும் மற்றும் ஒருவரைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். இந்த கல் உங்களிடம் நெருக்கமாக உள்ளவர்களுடனான உறவை உறுதிப்படுத்தி, ஒரு இணக்கமான மனநிலையைக் காத்துக்கொள்ள உதவுகிறது.

மீனம்

மீனம்

2 மீன்களை அடையாளமாக கொண்ட மீன ராசிக்காரர்களின் அதிபதி குரு ஆகும்.

அதிர்ஷ்ட கல் : நீல பச்சை நிற கல் - கடைசி ராசியான மீன ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை விட நிறைய குணங்களைக் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் சற்று குழப்பத்துடன் மற்றும் என்ன செய்வதென்று தெரியாமல் தெளிவற்றவர்களாக இருப்பர். ஆனால் நீல பச்சை நிற கல்லை மோதிரமாக அணிந்து கொண்டால், அது ஒரு விழிப்புணர்வை வழங்கி, சிந்தனையில் தெளிவை வழங்கி, ஒரு நல்ல முடிவை எடுக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lucky Gemstones For Each Zodiac Sign

Here are 12 lucky gemstones for each zodiac signs. Wearing these gemstones will bring you luck? Read on to know more...