For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்!

  By Staff
  |

  இந்திய பெண்கள் என்றாலே அமைதியானவர்கள், அடக்கமானவர்கள். அவர்களை போல சாதுவானவர்கள் இல்லை என்ற பேச்சு உலகில் இருக்கிறது. ஆனால், அதே இந்தியாவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மோஸ்ட் வாண்டட் பெண் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

  தாவூத் இப்ராஹிமின் டி - கம்பெனியுடன் கூட்டில் இருந்து மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் இருந்து, கொலை, கொள்ளை, கடத்தல், மோதி பொருள் விற்பனை, விபச்சாரம் என்று பல பயங்கரமான குற்ற செயல்களில் ஈடுபட்டு கராச்சி, அமெரிக்கா என்று தலைமறைவான பெண் குற்றவாளிகள் உள்ளனர்.

  இவர்களை குறித்த ஒரு சிறிய தொகுப்பு...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ரேஷ்மா!

  ரேஷ்மா!

  நிழலுலக மாஃபியா ராணிகளாக இருந்தவர்கள் ரேஷ்மா, ஷாபனா மேனன். ரேஷ்மா மேனன், நிழலுலக தாதாவான டைகர் மேனனின் மனைவி. 1993ல் மும்பையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் திட்டமிடலில் இவரது பங்கிருந்தது என்று அறியப்படுகிறது. சில தகவல்கள் மூலம் இப்போது இவர் கராச்சியில் வசித்து வருவதாக அறியப்படுகிறது.

  ஷபானா மேனன்!

  ஷபானா மேனன்!

  ஷபனா மேனன் நிழலுலக தாதா மற்றும் கொடூரமான கொள்ளையனான டைகர் மேனனின் மைத்துனி, மற்றும் அயுப் மேனனின் மனைவி. இவருக்கும் 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது என்று அறியப்படுகிறது. இவர் நிழலுக தாதாவான தாவூத் இப்ராஹீம் நிறுவனமான டி-கம்பெனியில் கூட்டு வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

  ஷோபா ஐயர்!

  ஷோபா ஐயர்!

  ஷோபா ஐயர் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பெண் குற்றவாளி ஆவார். ஷோபா ஐயரை கண்டுபிடிப்பதில் போலீஸுக்கு பெரும் சிக்கல் நீடிக்கிறது. இன்றும் இவரது உண்மையான புகைப்படம் அல்லது ஸ்கெட்ச் போலீசாரிடம் அகப்படவில்லை. இவர் மும்பையில் ஒரு பெண் கேங்க்ஸ்டராக வாழ்ந்து வருகிறார்.

  அர்ச்சனா பால்முகந்த் ஷர்மா!

  அர்ச்சனா பால்முகந்த் ஷர்மா!

  அர்ச்சனா பப்லூ ஸ்ரிவச்தவ் குழுவின் ஆக்டிவ் உறுப்பினர் ஆவார். பாசல் உர் ரஹ்மானின் பெரும் நம்பிக்கை பெற்ற லெப்டினன்ட்டாக இருந்தா அர்ச்சனா.

  பணம் பறித்தல், கொலை செய்வது, கடத்துவது என இவர் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். ஆனால், இவர் இப்போது காணாமல் போயிருப்பதாக அறியப்படுகிறது.

  சமைரா ஜுமானி!

  சமைரா ஜுமானி!

  தாவூத் இப்ராஹீம் டி-நிறுவனத்துடன் கூட்டு வைத்திருந்த மிகவும் மிருகத்தனமான பெண் என்று கருதப்படுபவர் சமைரா ஜுமானி. இவர் அபு சலீமின் முன்னாள் மனனவி ஆவார்.

  ஒருவரின் வாழ்வையும், மரணத்தையும் தீர்மானிக்கும் நபராக சமைரா இருந்ததாக அறியப்படுகிறது. தற்சமயம் சமைரா ஜுமானி அமெரிக்காவில் தலைமறைவாகி இருப்பதாக அறியப்படுகிறது.

  ரூபினா சிராஜ் சயத்!

  ரூபினா சிராஜ் சயத்!

  சோட்டா ஷகீல் மற்றும் தாவூத் இப்ராஹிமின் மற்ற கூட்டாளிகளை தனது தொடர்புகளை கொண்டு சிறையில் இருந்து வெளிக் கொண்டு வர உதவினார் என்று அறியப்படுகிறது.

  இவர் சோட்டா ஷகீல் கும்பலுக்கு ஹெராயின், உணவு, ஆயுதங்கள் போன்றவற்றை சப்ளை செய்து வந்திருக்கிறார். இப்போது இவர் மும்பையின் பைக்சுலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

  கங்குபாய் கோதேவளி!

  கங்குபாய் கோதேவளி!

  மும்பையில் பல விபச்சார விடுதிகள் நடத்து வந்திருக்கிறார். பல பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் வர்த்தகத்தில் விற்றிருக்கிறார்.

  மும்பையின் ஒரு பகுதிய சேர்ந்த மக்கள் இவரை உருவ வழிபாடு செய்கிறார்கள். மேலும், அவர்கள் கங்குபாய் கோதேவளி உதவியற்ற / ஆதரவற்ற பெண்களை பாதுகாத்து வந்தார் என்றும் கூறுகிறார்கள்.

  பூலான் தேவி

  பூலான் தேவி

  கொள்ளை அரசி அல்லது பண்டிட் குயின் என்று பிரபலமாக அறியப்படும் நபர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பிறகு அரசியவாதியாக மாறியவர் பூலான் தேவி. குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட பூலான் தேவி தனது கணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர்.

  மீண்டும் சொந்த வீட்டுக்கு திரும்பிய பூலான் தேவி, ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த காரணத்தால், உயர்ஜாதி மக்களின் இழிவான செயல்களால் பாதிக்கப்பட்டு பிறகு கொள்ளைக்காரியாக மாறினார்.

  சிறுவயதில் கொடூர தாக்குதலுக்கு ஆளான பூலான் தேதியை நீதிபதி கருணையின் பெயரில் விடுதலை செய்தார். ஆனால், அதன் பின்னர் தான் பாபு குஜார்சிங் என்பவரால் கடத்தி செல்லப்பட்டு குதிரையேற்றம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சி பெற்றார் பூலான் தேவி.

  பாலியல் துன்புறுத்தல்...

  பாலியல் துன்புறுத்தல்...

  பூலான் தேவியை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது என்றும் அறியப்படுகிறது. தனது கொள்ளை கூட்ட கும்பலில் இருந்த விக்ரம் மல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பூலான் தேவி. பிறகு சம்பல் பள்ளத்தாக்கில் தனக்கான கொள்ளை கூட்டத்தை உருவாக்கி அதற்கு தலைவியாக உருவானார்.

  பாராளுமன்ற உறுப்பினர்!

  பாராளுமன்ற உறுப்பினர்!

  பல கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பூலான் தேவி 1983ல் சரணடைந்தார். பிறகு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து 1994ல் விடுதலை ஆனார்.

  இவர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினாராக பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறை 1996-98 மிசாப்பூர்; இரண்டாம் முறை மிசாப்பூர் 1999-2001. 2001ம் ஆண்டு தனது 37வயதில் பூலான் தேவி மரணம் அடைந்தார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Brutal AF And Never Had A Heart Of Mercy, Most Dreaded Lady Dons Of India

  Brutal AF And Never Had A Heart Of Mercy, Most Dreaded Lady Dons Of India
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more