தமிழகத்தில் பூதாகரமாக வெடித்த 7 இன்டர்நெட் லீக்ஸ்!

Posted By: Staff
Subscribe to Boldsky
தமிழகத்தையே உலுக்கிய சில லீக்ஸ்..!!- வீடியோ

லீக்....! உலகம் முழுக்க ஹாலிவுட், கோலிவுட் முதல் ஒயிட் ஹவுஸ், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை; சினிமாக்காரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை லீக்கில் சிக்கி தவித்துள்ளனர். விக்கி லீக்ஸ் முதல் சுச்சி லீக்ஸ் வரை மக்களை கலங்கடித்த, அதிரவைத்த லீக்ஸ் பலவன இருக்கின்றன.

காதல் விவகாரங்கள், படப் பிரச்சனைகள், ப்ரைவேட் பிளேஸ் அந்தரங்கங்கள் என புகைப்படமாக, ஆடியோவாக, வீடியோவாக வெளியான லீக்ஸ் மூலம் தமிழ் பிரபலங்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், ஓரிரு நாட்களாக நடிகர் சிம்புவும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் பேசிக் கொண்ட ஆடியோ லீக் வெளியாக அடங்கியப் பிரச்சனையை தூசித் தட்டியுள்ளது. இதுப் போல பல பிரச்சனைகளை கிளப்பிய சில இன்டர்நெட் லீக்ஸ் மற்றும் அதன் மூலம் பாதிப்புக்குள்ளான பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிம்பு - ஆதிக்!

சிம்பு - ஆதிக்!

அன்பானவன்,அடங்காதவன், அசராதவன் (AAA) என்ற படத்தின் மூலம் நண்பர்கள் ஆனவர்கள் சிம்புவும், ரவிச்சந்திரனும். இந்த படம் இருவருக்குமே பெரிய ஹிட்டாக அமையும் என்றே மக்கள் கருதினார்கள். மேலும், முதல் முறையாக சிம்பு மூன்று வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பும், வரவேற்பும் பெற்றது.

அதிக ஈர்ப்பு!

அதிக ஈர்ப்பு!

ஒரு பாகமாக ரிலீஸ் ஆகவிருந்த ட்ரிப்பில் ஏ திரைப்படம். ரிலீசுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு பாகமாக வெளியாகும் என்ற தகவல், திரைப்படம் குறித்து மேலும் ஈர்ப்பை அதிகரித்தது. ஆனால், படமோ சிம்புவின் ரசிகர்களே ரசிக்க முடியாத வண்ணம் அமைந்திருந்தது. இதன் பிறகு இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மற்றும் இயக்குனர் ஆதிக் சிம்பு தான் இந்த தோல்விக்கு காரணம். அவர் ஷூட்டிங் வரவில்லை, ரெஸ்ட்ரூம்'ல் இருந்து டப்பிங் பேசினார் என்று பல குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

மேலும், இதுகுறித்து நடிகர் சிம்புவும் சக்கைப்போடு, போடு ராஜா ஆடியோ ரிலீஸ் அன்று என்னால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

ஆடியோ லீக்!

ஆடியோ லீக்!

கடந்த ஓரிரு நாட்களாக வைரலாக பரவி வரும் ஆடியோ லீக்கில், இந்த படம் வெளிவர மற்றும் தயாரிப்பு காலத்தில் நடந்த சில குளறுபடிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் திரை துறை சார்ந்த சிலரை பற்றி பேசி இருந்தார் சிம்பு. இதன் மூலம் அடங்கிப் போன ட்ரிப்பில் ஏ படப் பிரச்சனை இப்போது மீண்டும் தூசித்தட்டப்பட்டுள்ளது.

சிம்பு - நயன்தாரா!

சிம்பு - நயன்தாரா!

வல்லவன் படத்தில் நடிக்க துவங்கிய போது சிம்பு மற்றும் நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அதை அவர்கள் இருவருமே கூட ஒப்புக் கொண்டனர். ஏற்கனவே, நயன்தாரா தனது காதலி என்பதால், படத்தில் ஏடாகூடமாக பல காட்சிகள் அமைத்திருந்தார் சிம்பு. மேலும், தமிழகமெங்கும் பல நகரங்களில் முக்கிய இடங்களில் நயன்தாராவின் இதழை கடித்து இழுத்து லிப்லாக் இடுவது போன்ற க்ளோஸ்-அப் படத்தை பெரியளவில் பேனர்களாக, போஸ்டர்களாக அடித்து அமர்களப் படுத்தினார்கள்.

பிரேக்-அப்

பிரேக்-அப்

ஆனால், எதிர்பாராத தருணத்தில் படம் வெளியாகும் முன்னர் சிம்பு மற்றும் நயன்தாரா ஒரு ஹோட்டல் அறையில் தனிமையில் இருக்கும் போது எடுத்துக் கொண்ட படங்கள் லீக் ஆகின. இதை சிலர் படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்கள் என்றும், சிலர் சிம்பு - நயனை பிரிக்க யாரோ வேண்டுமென்றே இந்த படங்களை லீக் செய்துள்ளனர் என்று கூறி வந்தனர். 'சிலர்' கூறியது போலவே, வல்லவன் படத்திற்கு பிறகு சிம்பு - நயன் ஜோடி ப்ரேக்-அப் செய்துக் கொண்டனர்.

சிம்பு - ஐஸ்வர்யா!

சிம்பு - ஐஸ்வர்யா!

சிம்புவுக்கு ஆடியோ லீக் புதிதல்ல. இவரும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் திருமணத்திற்கு முன்பு பேசிக் கொண்டதாக ஒரு ஆடியோ பதிவு லீக் ஆனது. அதில் லதா ரஜினிகாந்த் அவர்களும் பேசுவது போல பதிவாகியிருந்தது. சிலர் இது போலி என்று கூறினாலும், கோலிவுட் வட்டாரத்தில் ஆடியோ லீக் என்று முதன்முதலில் மிகவும் வைரலான பதிவு இதுதான்.

மன்மதன்!

மன்மதன்!

அந்த ஆடியோவில் சிம்பு - ஐஸ்வர்யா ஏற்கனவே காதலித்து வந்தது போலவும், பிறகு ஐஸ்வர்யா அவரை ஏமாற்றிவிட்டார் என்பது போலவும் பேசப்பட்டதாக இருந்தது. இதன் பிறகே தனது மன்மதன் படத்தில் மொட்டை மதன் காதலிக்கும் பெண்ணுக்கு ஐஸு என்று பெயர் வைத்தும். அவர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பது போலவும் காட்சி அமைத்திருந்தார் நடிகர் சிம்பு.

சுச்சி லீக்ஸ்!

சுச்சி லீக்ஸ்!

சென்ற வருடம் அரசியலில் பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்க. அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் கிளம்பிய பூதம் தான் சுச்சி லீக்ஸ். நடிகையும், பாடகியுமான சுச்சிதிராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள், பிரைவேட் பார்ட்டி சமாச்சாரங்கள் என பலவன லீக் ஆகின.

தனுஷ், டிடி, த்ரிஷா...

தனுஷ், டிடி, த்ரிஷா...

சஞ்சிதா செட்டி (இவர் வெளியான் வீடியோவில் இருப்பது தானல்ல என்று விளக்கம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது), தனுஷ், டிடி, த்ரிஷா என பலர் இதில் சிக்கினார்கள். த்ரிஷாவும், தனுஷும் வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்றது போல படங்கள் லீக் ஆகின. அதில் தனுஷ் கொடி படத்தின் கெட்டப்பில் இருப்பது போல காட்சி அளித்தார்.

மாயம்!

மாயம்!

இடையே சுச்சிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது என்றும், ஏதோ பார்ட்டியில் சில பிரபலங்கள் அவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதன் விளைவாகவே அவர் இப்படி பழிதீர்த்துக் கொண்டார் என்றும் பல செய்திகள் வெளியாகின. இதில் எது உண்மை, எது பொய், அவர் வெளியிட்ட படங்கள், வீடியோக்களில் இருந்த பிரபலங்களின் செயல்கள் என அனைத்தும் ஓரிரு மாதங்களில் மாயமாக மறைந்து போயின.

த்ரிஷா!

த்ரிஷா!

நடிகை த்ரிஷா வளர்ந்து வரும் தருணத்தில் அவர் பாத்ரூமில் குளித்து கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்று திரிஷாவும், அது தனது மகளில்லை என்று அவரது அம்மாவும் மீடியாக்களிடம் கூறினார்கள். மேலும், தனது பெயரில் பரப்பப்படும் அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்கவும், அதைவிட்ட நபரை கைது செய்யவும் கோரி போலீஸ் கமிஷனரிடம் நேரில் சென்று அப்போது த்ரிஷா புகாரும் அளித்தார்.

சரத் குமார்!

சரத் குமார்!

மற்ற நடிகர்களுக்கு ஏதோ சிறிய வீடியோ, ஆடியோ, படங்கள் லீக் ஆகி அதிர்ச்சி அளித்தால். சரத் குமார், ஸ்ரேயா நடிப்பில் கே.எஸ். ரவிகுமார் இயக்கிய ஜக்குபாய் திரைப்படமானது ரிலீஸுக்கு முன்னரே ரீ-ரெகார்டிங் முடிக்கப்படாத வெர்ஷன் இணையத்தில் லீக்காகி படக் குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் மூலம் படத்தின் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது.

ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே!

நடிகை ராதிகா ஆப்தேவின் வீடியோக்கள், படங்கள் பலமுறை லீக்காகி உள்ளன. அவர் குளித்துக் கொண்டிருப்பது போன்ற அரை நிர்வாண செல்ஃபீ படங்கள், அவர் நடித்த ஷார்ட் பிலிம் நிர்வாண காட்சி, அவர் நடித்த முழுநீள படத்தின் அந்தரங்க காட்சி என பல முறை இன்டர்நெட் லீக் மூலம் பாதிக்கப்பட்டவர் ராதிகா ஆப்தே.

ஹன்ஷிகா!

ஹன்ஷிகா!

ஹன்ஷிகா - சிம்பு காதலிக்கிறார்கள் என்பதை நிரூபணம் செய்ததே இன்டர்நெட்டில் லீக்கான அவர்கள் கட்டிப்பிடித்திருப்பது போன்ற படம் தான். அந்த படம் வெளியான வேகத்தில் அவர்களது காதலும் காலியாகிவிட்டது. இதுமட்டுமின்றி, ஒருமுறை ஹன்ஷிகா குளித்துக் கொண்டிருக்கும் வீடியோ என்று இன்டர்நெட்டில் ஒரு வீடியோ பதிவு வெளியானது. ஆனால், அது போலியானது என்று சில நாட்களில் நிரூபிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities Who Affected By Internet Leaks!

Indian Celebrities Who Affected By Internet Leaks!