வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? சுவாரஸ்யமான ஆய்வுக் கதை!

Posted By: Staff
Subscribe to Boldsky

உலகின் சில பிரபலமான கண்டுபிடிப்புகள் மற்றும் உருவாக்கங்கள் வரலாற்றில் எதையோ கண்டுபிடிக்க துவக்கிய ஆய்வில், எதிர்பாராமல் தவறாக வந்த ரிசல்ட் தான். பென்சிலின், டெஃப்ளான், கதிரியக்கம், ஏன் இன்று உலகில் பலர் ருசித்து குடிக்கும் கோககோலா வரை தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்டவை தான்.

தவறுதலாக கண்டிப்பிக்கப்பட்டவை என்பது, பிரச்சனை ஒன்றுக்கு தீர்வுக் காண ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் போது, பிரச்சனை இரண்டுக்கு தீர்வுக் கிடைப்பதாக அமைந்திருக்கும். அந்த ஆய்வு அதை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்டதாகவே இருக்காது.

இப்படி தான் பிறந்தது, இன்று ஆண்கள் விரும்பும் வயாகராவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1989!

1989!

இங்கிலாந்தை சேர்ந்த ஃபைசர் எனும் மருத்துவ ஆய்வாளர் கென்ட் எனும் ஆய்வகத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்கள் அடைப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சு வலிக்கு புதிய மருந்து ஒன்றை தயாரிக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் Sildenafil (UK92480) என்ற ஒரு புதிய காம்பவுண்ட் உருவாக்கினார். அது ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களுக்கு அளிக்கப்பட்டது.

பயனில்லை!

பயனில்லை!

ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த மருந்தானது எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை. கிளீனிக்கில் இருந்த ஒருவருக்கு கூட அது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உயர் இரத்த அழுத்தம் அப்படியே தான் இருந்தது. இதய இயக்கத்திலும் முன்னேற்றம் காணப்படவில்லை. இவர்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சி தோல்வி என்று கருதினார்கள்.

நர்ஸ்களுக்கு அசௌகரியம்!

நர்ஸ்களுக்கு அசௌகரியம்!

ஆனால், இந்த பரிசோதனையின் போது ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களிடம் ஒரு மாற்றம் தென்பட்டது. அது ஆய்வில் உதவியாக பணியாற்றிக் கொண்டிருந்த நர்ஸ்களுக்கு அசௌகரியத்தை அளித்தது.

ஆய்வாளர் ஃபைசர் கொடுத்த அந்த புதிய மருந்து, ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி விறைப்பு ஏற்படுத்தியது.

திடீர் விறைப்பு!

திடீர் விறைப்பு!

காரணமே இன்றி, சாதகமான சூழலும் இன்றி இந்த விறைப்பு ஏற்பட்டன. அப்போது தான் அவர் கண்டுபிடித்த மருந்து ஆண்குறிக்கு செல்லும் இரத்த நாளங்களை இலகுவாக்கி, இரத்த ஓட்டம் சீர்ப்படுத்தி விறைப்பு உண்டாக்குகிறது என்பதனை அறிந்தனர்.

விறைப்பு கோளாறு!

விறைப்பு கோளாறு!

உயர் இரத்த அழுத்தம் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பிறகு விறைப்பு கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் பக்கமாக திசை மாறியது. ஒரு மருந்து தயாரிப்பு கம்பெனியின் இதை பரிசோதனை செய்யலாம் என்றது. மூன்று ஆண்டுகள் அதாவது 1993-1996 சோதனை செய்து வந்தனர்.

3000!

3000!

மேற்கொள்ளப்பட்ட 21 பரிசோதனை ஆய்வில் 3000 பேர் கலந்து கொண்டனர். இதில் 19-87வயதுக்குட்பட்ட பல வயது பிரிவுக்கு உட்பட்ட ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அனைத்து சோதனைகளிலும் ஒரே ஒரு ரிசல்ட் தான் கிடைத்தது. அது வயாகரா விறைப்பு அடைய செய்கிறது என்பதே ஆகும்.

அடிப்படை!

அடிப்படை!

இந்த மருந்து செய்யும் வேலையின் அடிப்படை என்னவெனில், இது நைடிர்க் ஆக்சைடு வெளிப்படுத்தி இதயத்தில் இருந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. நைட்ரிக் ஆக்சைடு ஆனது உடலின் தசைகளை இலகுவாக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

இதனால், இயற்கையாகவே உடலில் செக்ஸ் உணர்வு தூண்டப்படுகிறது. இதனால், ஆண்குறி தசைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து விறைப்பு உண்டாகிறது. ஆண்களின் கருவளம் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தில் தான் இருக்கிறது.

பக்கவிளைவுகள்!

பக்கவிளைவுகள்!

அருமையான கண்டுபிடிப்பு என்று ஆண்களால் கொண்டாடப்பட்ட வயகாராவில் நிறைய பக்க விளைவுகளும் இருந்தன. இது தலைவலி, நெஞ்சு எரிச்சல், மாரடைப்பு ஏற்படுத்தவும் செய்தது. நீண்ட காலம் அதிகமாக வயகாரா எடுத்து வந்தால் மாரடைப்பு மற்றும் காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும்.

1998!

1998!

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு வாரியம் வயாகரா எனும் இந்த மருந்துக்கு 1998 மார்ச் 27ம் நாள் லைசன்ஸ் கொடுத்தது. அன்று தான் அதிகாரப் பூர்வமாக வயாகரா சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதுதான், முதன் முதலில் விறைப்பு கோளாறுக்கு மருந்தாக வெளியான மருந்தாகும்.

இந்த கண்டுபிடிப்புக்காக ஃபைசர் நிறைய விருதுகள் வாங்கினார்.

சூப்பர்ஹிட்!

சூப்பர்ஹிட்!

வயாகரா சந்தையில் சூப்பர்ஹிட் மருந்தாக மாறியது. நிறைய பேர் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர். சந்தைக்கு வந்த மூன்றே மாதத்தில் முப்பது இலட்சம் மருத்துவர்கள் இதை பரிந்துரை செய்தனர். வெறும் இரண்டே ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு விற்பனை ஆனது வயாகரா. 2008ம் ஆண்டு வரையிலும் 35 மில்லியன் ஆண்கள் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சர்வே தகவல் கூறுகின்றன.

மீண்டும் இளமை!

மீண்டும் இளமை!

இயற்கையாகவே வயதில் ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் விறைப்பு குறைந்துவிடும். எனவே, கோளாறு என்பதை தாண்டி ஆண்கள் இது ஆயுட்கால சந்தோஷம் அளிக்கும் மருந்தாகவும், மீண்டும் இளமையை ஏற்படுத்தும் மருந்தாகவும் எண்ண துவங்கினார்கள். மருந்து என்பதை தாண்டி, வயாகரா ஒரு போதையாக காணப்பட்டது.

விளம்பரம்!

விளம்பரம்!

வியாபாரத்தின் அளவை கண்டு, செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி என பல ஊடகங்களில் இதுக்குறித்த விளம்பரங்கள் குவிந்தன. விளையாட்டு வீரர்கள், அரசியல் வாதிகள், நடிகர்கள் என பலரும் இதை வாங்கி பயன்படுத்த துவங்கினார்கள்.

பிரச்சனை!

பிரச்சனை!

நீண்ட நாட்களாக உலகறியாமல் இருந்த விறைப்பு கோளாறு என்பதை வயாகரா தான் வெளிப்படுத்தியது. அந்த பிரச்சனை குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ள, சிகிச்சை முறை கண்டுபிடிக்க இதுவொரு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. இன்று ED (Erectile Dysfunction)என்றால் அறியாதவர்கள் இல்லை.

விபத்து!

விபத்து!

உயர் இரத்த அழுத்தம் சரி செய்யும் மருந்தை கண்டுபிடிக்க முயன்று, மருத்துவ உலகின் சென்ற நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக மாறியது வயாகரா.

ஆனால், ஆரம்பத்தில் இதன் பக்கவிளைவுகள் எதுவும் அறியப்படவில்லை. நாட்கள் செல்ல, செல்ல சில ஆண்டுகள் கழித்தே இது இதயத்தை பாதிக்கிறது என்று அறிந்தனர். வயாகரா உட்கொண்டு சில நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களும் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Viagra Was Invented Accidentally?

How Viagra Was Invented Accidentally?