For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா!

  |

  ஏமாற்றம்... ஏமாற்றுபவன்... ஏமாறுபவன்! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஆம்! இது நிதர்சனம் தான். திருடன் மட்டும் தான் ஏமாற்றுவானா? பொய் கூறுதல் ஏமாற்றுதலில் அடங்குமா?

  உணவு, உடை, கலாச்சாரம் போன்றவற்றில் எப்படி நிறைய வகைகள் இருக்கின்றனவோ அதே போல் தான் ஏமாற்றுவதிலும் பல வகைகள் இருக்கின்றன.

  உங்களுக்கு தெரிந்து நீங்கள் ஏமாறுவதை காட்டிலும், உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் ஏமாறுவது தான் அதிகம். ஆம்! நீங்கள் படிப்பதில், பார்ப்பதில், நம்புவதில் என நிறைய ஏமாற்ற வேலைகள் இருக்கின்றன.

  முக்கியமாக இந்த டிஜிட்டல் யுகம் பிறந்த பிறகு, தொழில்நுட்பம், வர்த்தகம், வணிகம், லாபம், நஷ்டம் மட்டுமல்ல... ஏமாற்றப்படுவதும் அதிகமாகிவிட்டது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  இதோ!

  இதோ!

  கருணாநிதி இறந்து முழுதாக இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் மெரீனா அருகே கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆவியை பார்த்த தொண்டர் என்ற பெயரில் ஒரு எடிட் செய்யப்பட்ட படம் / வீடியோ பரப்பிவருகிறார்கள்.

  இதை அப்படியா என்று ஏமார்ந்து பார்ப்பவர்கள் சிலர், இது போலி தான் என்று அறிந்தும்.., அவனை திட்டித்தீர்த்துவிட வேண்டும் என்று முடிவுக்கட்டி அந்த படத்தை / வீடியோவை பார்ப்பவர்கள் பலர்.

  லாபம்!

  லாபம்!

  யூடியூப் அல்லது பிற தளங்களில் நீங்கள் அது போலி என்று தெரிந்து பார்க்கிறீர்களோ, தெரியாமல் பார்க்கிறீர்களோ... நீங்கள் எவ்வளவு மோசமாக திட்டித்தீர்தாலும் கூட நஷ்டம் அந்த வீடியோவை பதிவிட்டவருக்கு துளியும் இல்லை. உங்களுக்கு வேண்டுமானாலும் நேரம், கோபம், உடல் சக்தி போன்றவை வீணாக விரயமாகி நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் மனநிலை கொஞ்ச நேரம் சூடேறி இருக்கலாம். மற்றப்படி அந்த வீடியோவை பதிவிட்ட நபருக்கு நீங்கள் பார்த்த அந்த ஒரு வியூவ் மூலம் கல்லா கட்டியிருப்பார்.

  விளம்பரம்!

  விளம்பரம்!

  யூடியூப்பில் வீடியோ பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் பொழுதுபோக்கு. பதிவிடுபவர்களுக்கு அது வருமானம், லாபம், மாத ஊதியம். நீங்கள் யூடியூபில் வீடியோ பார்க்கும் போதெல்லாம் நடுவே வரும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு சிறு பங்கினை பகிர்ந்து அந்த சேனல் நடத்தும் நபருக்கு அளிக்கும் யூடியூப் நிறுவனம். எனவே, அவருக்கு எத்தனை பார்வைகள் கூடுகிறதோ, அத்தனை பணம் கிடைக்கும்.

  இதுமட்டுமா?

  இதுமட்டுமா?

  எனவே, அன்றைய தினத்தில் எது வைரல், ட்ரெண்ட்டாக இருக்கிறதோ அதுக்குறித்த ஏதேனும் ஒரு தகவலை யூடியூபில் பதிவிட்டுவிடுவார்கள். நல்ல நல்ல நிகழ்சிகள், திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களும் அங்கே பதிவிடப்படுகின்றன. அவை நேர்மையானவை. அவர்கள் திறமை உள்ளவர்கள்.

  அரைகுறையாக பதிவிடுவதை கற்றுக்கொண்டு திருடி போடுவது, போலியான தகவல்களை பகிர்வது, எப்படியான தகவலை கூறினால் நிறைய பேர் உள்ளே வந்து பார்ப்பார்கள் என்பதை அறிந்துக் கொண்டு ஒண்ணுமில்லாதவற்றை பதிவிடுவோர் அதிகம் இருக்கிறார்கள். என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை மக்களும் இப்படியான பதிவுகளை தான் அதிகம் பார்க்கிறார்கள்.

  மைக்கல் ஜாக்ஸன், ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் ஆவியா வந்தார் என்பது முதல் இன்று கலைஞர் வரை ஆவியை கண்டோம் என்று கூறப்பட்டு பதிவான காணொளிப்பதிவுகள் யூடியூபில் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

  இன்னொரு வகை!

  இன்னொரு வகை!

  பிரபலங்களை வைத்து மட்டும் தான் இவர்கள் இப்படி யூடியூபில் விளையாடுகிறார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். கிரிக்கெட், கால்பந்தாட்டம் என விளையாட்டையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. வீடியோவின் முகப்பு படத்தில் இதோ எப்படி பந்து டர்ன் ஆனது, எவ்வளவு உயரம் ஜம்ப் செய்து பிடித்தார், பந்து அப்படி லாவகமாக வளைந்து சென்றது என அம்புக்குறி எல்லாம் போட்டி காண்பிப்பார்கள். மக்களும் அப்படி என்ன அதிசயம் என்று உள்ளே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதுவும் ஒரு வகையான ஏமாற்றுதல், பித்தலாட்டம் தான்.

  மஞ்சள் பத்திரிகை!

  மஞ்சள் பத்திரிகை!

  இதென்னவோ இன்றோ, நேற்றோ முளைத்த காளான் அல்ல. ஆரம்பத்தில் வீடுகளில் ஒரு மஞ்சள் நோட்டீஸ் வந்து விழும். இதை ஆயிரம் பிரதி எடுத்து வீடுகளில் பகிரவும். இல்லையேல் அம்மா இறந்துவிடுவார், தொழில் நஷ்டம் ஆகிவிடும்.

  இதை செய்ய தவறிய இன்னார் வாழ்வில் நிஜமாகவே பாதிப்பு நடந்தது என்று பல பெயர்களில் அந்த மஞ்சள் நோட்டீஸ் பரவும். அது ப்ரிடிங்கிங் பிரஸ் வைத்தவர்களின் கைகரியம்!

  ஃபார்வேர்ட் பண்ணுங்க!

  ஃபார்வேர்ட் பண்ணுங்க!

  பிறகு மொபைல் போன் வந்த நாட்களில் ஜெய் ஸ்ரீராம், ஓம் நமசிவாயா, இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.. என ஏதேனும் வாக்கியம் எழுதி இதை ஐம்பது பேருக்கு ஃபார்வேர்ட் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான் அம்மா உடல்நலம் எக்ஸ்டிரா எக்ஸ்டிரா... என செய்திகள் வரும். இதுவே ஸ்மார்ட் போன் , சமூக தளங்கள் வந்த பிறகு ஷேர் செய்யவும் என்று பிச்சை எடுத்தார்கள்.

  சரி! ஏமாறும் நபர்கள் இருக்கிறார்கள் தான். நீங்கள் என்ன வேண்டுமானால் செய்துக் கொள்ளுங்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் இறந்து இன்னும் 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் அதற்குள் இப்படி எல்லாம் ஏமாற்றி பிழைக்க வேண்டுமா என்ன?

  யோசிங்க மக்களே...! ஒருவளை இப்படியான தலைப்புகளில் வரும் பதிவுகள், வீடியோக்களை நீங்கள் பார்க்காமல் தவிர்க்க துவங்கினால்... இதை பதிவிடுபவர்களுக்கு இப்படியான பதிவிடவேண்டிய அவசியமே இருக்காது. அந்நியன் க்ளைமேக்ஸ் வசனம் மாதிரி இருக்கா... ஆனா இதுதான் உண்மை!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Hoax Alert: People Started Saying That They Saw Karunanidhi's Spirit Near Marina!

  People Started Saying That They Saw Karunanidhi's Spirit Near Marina!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more