ஆணுறை வரலாறு மற்றும் நீங்கள் அறியாத வியக்க வைக்கும் உண்மைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இன்று பால்வினை நோய் அபாயத்தில் இருந்து காக்க, அவசியமற்ற கருத்தரிப்பை தவிர்க்க ஆணுறை தான் உபயோகப்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், பால்வினை நோய் என்றால் என்ன என்றே கண்டறியப்படாத காலத்தில், கருத்தரிப்பை தவிர்க்க அவசியமே இல்லாத காலத்திலும் ஆணுறை பயன்படுத்தி வந்துள்ளனர். சென்ற சில நூற்றாண்டுகளில் அல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே.

History of Condoms and Interesting Facts!

Image Source: mindwink

ஆம்! பி.சி-யில் இருந்து நமது மூதாதையர்கள் ஆணுறையை பல வேறு வடிவங்களில், வேறு பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் பலவன வியப்பையும், இதை எப்படி இவர்கள் பாதுகாப்பு என்று கருதினார்கள் என்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி.சி-க்கு முன்னே!

பி.சி-க்கு முன்னே!

ஆணுறை என்பது ஏதோ சில தசாப்தங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. பி.சி-க்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்தே ஆணுறையை வேறு வடிவத்தில், வேறு பொருட்கள் கொண்டு தயாரித்து மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நமது மூதாதையர்கள் ஆணுறை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் சில குகை ஓவியங்களில் இருக்கிறது. இதை SKYN ஆராய்ச்சியின் போது கண்டறிந்துள்ளனர். அந்த குறை ஓவியங்களில் ஆண்குறி உறை போன்ற உருவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image Source: commons.wikimedia

லினன் (Linen)!

லினன் (Linen)!

லினன் என்பது ஒரு துணி வகை. ஆரம்பத்தில் ஆணுறையை லினன் துணியிலும் தயாரித்துள்ளனர். லினன் துணிகளை கைகளால் உறை போல தைத்து வந்துள்ளனர். இவற்றில் சிலவன முழு ஆண்குறிக்கு பொருந்தும் வகையிலும், சிலவன ஆண்குறியின் மேல் மொட்டு பகுதிக்கு மட்டும் பொருந்தும் வகையிலும் இருந்துள்ளன. ஆனால், இது எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி அவர்கள் தயாரித்தனர் என்பதே வியப்பை அளிக்கிறது.

Image Source: commons.wikimedia

விலங்குகள்!

விலங்குகள்!

1400-களின் போது ஆசிய உயர்குடி மக்கள் ஆண்குறி மேல் மொட்டு பகுதியை மட்டும் மூடும் அளவிலான ஆணுறையை தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இது மேலும், எப்படி பாதுகாப்பாக அல்லது எப்படி பொருந்தும் என்ற கேள்விகளை எழுப்புகிறது. இதை ஒரு சிறந்த பாதுகாப்பு உபகரணமாக கருத இயலாது.

அக்காலத்தில் மேலும் அவர்கள் விலங்குகளின் கொம்புகள் மற்றும் ஆமை ஓடு போன்றவற்றை கூட இந்த செயலுக்கு பயன்படுத்தியதாக சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால், இவை எப்படி சௌகரியமாக அமைந்தன என்ற சந்தேகம் எழுகிறது.

1700 வரை...

1700 வரை...

லினன் துணியால் தயாரிக்கப்பட்ட ஆணுறைகள் ஆனது 1700 நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. பிறகு அதே காலத்தில் ஆட்டின் குடல் அல்லது சிறுநீர் பையையும் அவர்கள் ஆணுறையாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்ற தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால், ஆட்டின் குடலை எப்படி? எந்த வகையில் இவர்கள் ஆணுறையாக மாற்றி பயன்படுத்தி இருப்பார்கள் என்பது பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

Image Source: flickr

காஸநோவா!

காஸநோவா!

இத்தாலியை சேர்ந்த பன்முக திறமை கொண்ட காஸநோவா (Casanova) என்பவர் தான் முதல் முதலில் ஆணுறையில் குவாலிட்டி இருக்க வேண்டும் என்று ஆராய துவங்கினார்.

இவர் சௌகரியமாக, பயன்படுத்து எதுவாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தார். இவர் உடலுறவு குறித்து நிறைய ஆர்வம் கொண்டிருந்தார் என்றும், தான் பிறந்ததே தனது எதிர்பாலினத்தவர் உடன் உடலுறவில் ஈடுபட தான் என்றும் கருதினார் என்று சில தகவல்கள் இவரை பற்றி கிடைக்கின்றன.

Image Source: commons.wikimedia

 சைக்கிள் டியூப் போல...

சைக்கிள் டியூப் போல...

ஆம்! முதன் முதலில் ரப்பரில் தயாரிக்கப்பட்ட ஆணுறை சைக்கிள் டியூப் அளவிற்கு தடிமனாக இருந்ததாம். இது கடினமாக இருக்கும் என்பதை தாண்டி இதையும் பயன்படுத்தி பார்க்க மனிதன் முற்பட்டான், அதை உணர்ந்து பார்க்க முயற்சித்தான் என்பதே வரலாறு.

குயின் விக்டோரியா பதிப்பு!

குயின் விக்டோரியா பதிப்பு!

1897லில் வெளியான ஆணுறைகளில் குயின் விக்டோரியாவின் முகம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஒரு காரணமும் இருந்தது. குயின் விக்டோரியாவின் குழந்தைகளுக்கு பால்வினை நோய் தோற்று ஏற்பட்டிருந்தது. அது போல வேறு யாருக்கும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக இவரது படத்தை ஆணுறை தயாரிப்பாளர்கள் கவரில் பதித்தனர் என்று அறியப்படுகிறது.

Image Source: Wiki Media Commons

லீகல்!

லீகல்!

ஆணுறை முதன்முறையாக லீகலாக கடைகளில், சந்தைகளில் விற்கப்பட்டது அமெரிக்காவில் தான். பொது இடங்களில், பொது மக்களுக்கு முதன்முறையாக ஆணுறை விற்றது இங்கே தான். அடுத்த ஒரே வருடத்தில் ரப்பரால் ஆன ஆணுறை உலகம் முழுக்க விற்க துவங்கியது.

எய்ட்ஸ்!

எய்ட்ஸ்!

எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தாக்கங்கள் குறித்து 1985களுக்கு மேல் தான் அதிகம் செய்திகள் வெளியாகின. அதுநாள் வரை ஆணுறை என்பது வெறுமென பயன்படுத்த என்று நினைத்தவர்கள். அதன் பிறகே, பால்வினை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்று எண்ண துவங்கினார்கள். இது காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவியது.

பல வகைகள்!

பல வகைகள்!

90களுக்கு பிறகு தான் ஆணுறைகள் பல வகைகளில் கடைகளில் விற்க துவங்கப்பட்டது. பல ஃபிளேவர்கள், லியூப்ரிகென்ட் உடன் மற்றும் டாட்டட் என்று காண்டம் விற்பனை சூடுப்பிடிக்க துவங்கியது.

ஆணுறை என்பது நமது நாட்டில் 2000-கள் ஒரு கெட்டவார்த்தை அல்லது தகாத பொருளாக தான் காணப்பட்டது, பிறகு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பிறகே ஆணுறை பயன்பாடு குறித்த புரிதல் ஏற்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

History of Condoms and Interesting Facts!

History of Condoms and Interesting Facts!