For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ராங் நம்பருக்கு டெக்ஸ்ட் செய்து அலப்பறையை கூட்டிய ஏடாகூடமான ஸ்க்ரீன் ஷாட் தொகுப்பு!

  By Staff
  |

  ராங் நம்பருக்கு கால் பண்றத விட, மெசேஜ் பண்றது ரொம்ப கொடுமை. கால் பண்ணா கூட, முதல்லயே குரல் இல்ல ரியாக்ஷன் கேட்டு முழு விவரம் சொல்லாம கட் பண்ணிடலாம். ஆனா, மெசேஜ் அப்படி இல்ல. சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு மொத்த உண்மையையும் உளறிக் கொட்டிடுவோம். அப்பறம் என்ன மானம் கப்பலேறிப் போயாச்சுன்னு பாட்டுப் பாடிக்கிட்டே சுத்த வேண்டியது தான்.

  முன்ன, பின்ன தெரியாத நபர்கிட்ட ராங்கான மெசேஜ் அனுப்புனா கூட பரவாயில்ல. இதுவே, நல்லா தெரிஞ்ச மகள், மகன், அப்பா, மேனேஜருக்கு ராங் மெசேஜ் அனுப்புனா என்ன ஆகும். அதுக்கு இவங்க தான் உதாரணம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நல்ல ப்ளேபாயோ...

  நல்ல ப்ளேபாயோ...

  ஒருவேள இவன் நல்ல ப்ளேபாயா இருப்பான் போலயே... பிரின்சஸ்ன்னு கூப்பிட்டான்... அந்த பொண்ணு யாருன்னு கேட்டதும் உண்மையா இல்ல.. ராங் நம்பர்ன்னு சொல்லிட்டான். அப்பறம் அந்த பொண்ணே வழிய வந்து திரும்பி வா... நான் உன் பிரின்சஸா இருக்கேன்னு கேட்குது... நியாயமா... நாம அடுத்த ஜென்மத்துல மீட் பண்ணலாம்ன்னு சொல்லிட்டான். அட! இப்படி நியாயமா உண்மையா பேசுனா கூடவா ஐ லவ் யூ சொல்லுவாங்க...

  கோபக்காரர்...

  கோபக்காரர்...

  ரொம்ப கோபக்காரரா இருப்பாரு போல... ஆனாலுமே ஜேம்ஸ் மேல இருக்க கோபத்த யாருன்னே தெரியாத ஆன்ட்ரூவ் மேல காமிக்கிறது என்ன நியாயம் பாஸ். சில பேரு ராங் நம்பருக்கு கால் பண்ணி திட்டினா கூட, ராங் நம்பர்ன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேட்பாங்க. அதான மனித குணம். இந்தா... இவர பாருங்களேன்... அவனையும் திட்டிட்டு போறாப்புல.

  அப்பாக்கிட்ட மாட்டிண்டான்...

  அப்பாக்கிட்ட மாட்டிண்டான்...

  அண்ணனுக்கு மெசேஜ் அனுப்புறதா நெனச்சு தம்பி அப்பாவுக்கே மெசேஜ் அனுப்பிட்டான். மெசேஜ் அனுப்புனது தப்பு இல்ல, ஆனா அனுப்புன மெசேஜ் தான் தப்பு. gsங்கிறது கஞ்சாவ குறிக்கிற வார்த்தை. அதப் போயி அப்பாக்கிட்ட கேட்டா எப்படி இருக்கும். அப்பறமா கொஞ்சம் தெளிஞ்ச பிறகு, எனர்ஜி ட்ரின்க் தான் கேட்டேன். ஸ்பெல் மிஸ்டேக் ஆயிடுச்சுன்னு பயபுள்ள மாட்டிக்கிட்டான். அத சகோதரி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டர்ல போட்டு சிரிக்கிறாங்க. நல்ல குடும்பம்!

  டாக்டரா நீ?

  டாக்டரா நீ?

  வந்த பேஷன்ட்டுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்குறதுன்னு நண்பர் டாக்டர் கிட்ட மெசேஜ் பண்ணி கேட்காமா, வேற ஒரு ராங் நம்பருக்கு மெசேஜ் பண்ணியிருக்காரு. அந்த பொண்ணும் கூகுல் பண்ணி பார்த்து என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு கரக்டா சொல்லிடுச்சு. இதுக்காக அவரு அந்த பொண்ணுக்கு நன்றியும் சொல்லியிருக்காரு. இதுல நாம யோசிக்க வேண்டியது என்னன்னா? எவ்வளோ சீரியசான மேட்டரா இருந்தாலும் கால் பண்ண மாட்டீங்களா டாக்டர் தம்பி? மெசேஜ் தான் அனுப்புவீங்களா? உங்க ஊர்ல ஜியோ சிம் இன்னும் வரலயா?

  ராங் நம்பர் ட்ரீட்...

  ராங் நம்பர் ட்ரீட்...

  தேங்க்ஸ் கிவிங் டின்னர் கொடுக்க பேரக்குழந்தைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார் பாட்டி. ஆனால், அது ராங் நமப்ருக்கு சென்றுவிட்டது. அவரும் குழம்பி யார் என்று கேட்க... இந்த பெண்மணி தான் உனது பாட்டி என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் போட்டோ கேட்க... புகைப்படத்தை கண்டவுடன்... நீங்க என் பாட்டி இல்ல... ஆனா, எனக்கு டின்னர் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.

  மனித நேயம்...

  மனித நேயம்...

  அதற்கு அந்த பெண்மணி, பாட்டிகளின் வேலையே உணவளிப்பது தான். நிச்சயம் தருகிறேன். வா என்று அழைத்துள்ளார்.

  இதில் ஆச்சரியம் என்ன்னவேனில், இது வெறும் மெசேஜ் உரையாடலாக முடியாமல், நிஜமாகவே அவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். அந்த பாட்டி அந்த நபருக்கு டின்னர் அளித்துள்ளார். மனித நேயம் ஆங்காங்கே கொஞ்சம் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

  வீட்டுல பூஜை இருக்கு...

  வீட்டுல பூஜை இருக்கு...

  வீட்டுல இருந்து பசங்க எல்லாரும் வெளிய போயிட்டாங்க.. இன்னிக்கு வீட்டுக்கு சீக்கிரம் வா என்று ஆசையாக மனைவிக்கு அனுப்ப வேண்டிய செய்தியை, மகனுக்கு அனுப்பிவிட்டார் அப்பா. மகனும், அப்பா நான் வரதுக்கு லேட் ஆகும்.. நீங்க என்ஜாய் பண்ணுங்க என்று கூறிவிட... தயவு செஞ்சு இத உன் அம்மாக்கிட்ட சொல்லிடாதன்னு கதறுறாரு அப்பா. அந்த நல்ல குடும்பத்த விட, இந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் போல.

  ஆபீஸ் மேட்டர்

  ஆபீஸ் மேட்டர்

  ஆபீஸ்ல ஒடம்பு சரியில்லன்னு சொல்லி லீவ் போட்டுட்டு பேச்சுக்கு போயிட்டாங்க. அதவேற... நண்பருக்கு அனுப்புறதா நெனச்சு மேனேஜருக்கே மெசேஜ் பண்ணிட்டாங்க. வேற என்ன நாளைக்கு வந்த என்ன பாருன்னு உறுமி இருக்காப்புல மேனேஜர்.

  லொள்ளு...

  லொள்ளு...

  என்னோட நைட் ஷிப்ட் இன்னிக்கி நீ பார்த்துக்க முடியுமா? என்று தெரியாமல் ராங் நம்பருக்கு மெசேஜ் செய்துள்ளார் அந்த பெண்மணி. அந்த ராங் நம்பர் வேண்டும்மென்றே... சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு. சரியாக சாயங்காலம் நேரம் மெசேஜ் செய்து... நீங்கள் ராங் நம்பருக்கு செய்தி அனுப்பிவிட்டீர்கள். வேலைக்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டது கிளம்புங்க என்று கேலி செய்துள்ளார். எல்லாம் லொள்ளு.

  அப்பா, மகள்...

  அப்பா, மகள்...

  தனது செயலாளரிடம்... இன்று இரவு மகளுடன் டின்னர் சாப்பிட வருகிறேன் என்று கூறி இருந்தேன். ஆனால் நான் குடிக்க செல்கிறேன். அவளிடம் எனக்கு உடல் நலம் சரி இல்லை என்று கூறிவிடு... ஐ டோன்ட் கேர்... என்று தனது மகளுக்கே செய்தி அனுன்ப்பிவிட்டார். அதற்கு மகளோ, நீங்கள் மகளின் பெயரிலேயே செயலாளர் வைத்திருப்பதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி கோபத்தில் கடித்துள்ளார்.

  மாட்டிக்கிச்சே...

  மாட்டிக்கிச்சே...

  அன்பே., நான் உண்ண இப்பவும் உண்ண லவ் பண்றேன். ஆனா, இது வர்க்கவுட் ஆகுமான்னு தெரியல... பிரேக்கப் பண்ணிக்கலாம்ன்னு மெசேஜ் பண்ணி இருக்காரு காதலன். இத நீ ரெண்டு வருஷம் கழிச்சு சொல்ற... ஏன் பிரேக்கப் பண்ற அதுவும் மெசேஜ்ல என்று காதலி கோபித்துக் கொள்ள... சாரி, சாரி ராங் நம்பர் மாத்தி அனுப்பிட்டேன்னு காதலர் சமாளிக்க முயற்சி பண்ணியிருக்கார்.

  அந்த பொண்ணும், கடவுளுக்கு நன்றி சொல்லி, நான் பயந்தே போயிட்டேன்னு ரிப்ளை பண்ணி அஞ்சு செகண்ட் கழிச்சு தான்... அப்போ நீ அந்த மெசேஜ் வேற யாருக்கு அனுப்ப பார்த்தன்னு கேட்க... காதலன் கதி ஓகயா...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Hilarious Wrong Number Text Reactions!

  Textual healing! Hilarious snaps reveal why sending a message to the wrong number makes chatting on the phone a LOT more fun
  Story first published: Friday, April 27, 2018, 11:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more