For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாத்தா மீதான அதீத பாசத்தால் பேத்தி செஞ்ச வேலையப் பாருங்க!

தாத்தாவின் கனவை நிறைவேற்ற பேத்தியின் சாதுர்யமான ஐடியா

|

வீட்டு உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையிலான உறவு குறித்து பல அனுபவங்கள் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் குறிப்பாக முதியவர்கள் அனுபவ ரீதியாக குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருப்பார்கள்.

ஆனால் இன்றைய யுகத்தில் தங்களுடைய தாத்தா பாட்டியுடன் நேரத்த செலவிடும் அளவிற்கு பொறுமையிருப்பதில்லை, அதே நேரம் குழந்தைகளின் ஓட்டத்திற்கு இணையாக ஒட முடியவில்லை இதனால் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு என்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது.

Grand Daughter Satisfies Her Grand Father Wish

Image Courtesy

இங்கே தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையில் நடந்த ஓர் பாசப் போராட்டத்தைப் பற்றித் தான் பார்க்கப் போகிறீர்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ இந்த பெண்ணுக்கு தாத்தா என்றால் கொள்ளைப் பிரியமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாத்தா முக்கியம் :

தாத்தா முக்கியம் :

சீனாவைச் சேர்ந்த ஃபு எக்ஸ்வீஸ் என்ற இளம்பெண் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கொள்கையோடு கடுமையான போராட்டங்களுக்கு பிறகு பிஸ்னஸ் செய்ய ஆரம்பித்திருந்தார். அந்த சமயத்தில் தான் ஃபுவிற்கு ஒரு செய்தி வருகிறது.

தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவலை தாங்கி வந்த அந்த செய்தி ஃபூவை சிந்திக்கவும் வைத்தது.

Image Courtesy

குடும்பத்திற்காக.... :

குடும்பத்திற்காக.... :

யாருக்காக இந்த ஒட்டம், எதற்காக சம்பாதிக்கிறோம் என்று ஃபுவின் மனதில் பலக் கேள்விகள். என்னைச் சுற்றி இருந்தவர்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறேன் ? வயோதிகம் வந்தால் இப்படியே தனிமையில் கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லையா என்று யோசித்தவருக்கு இறுதியாக தோன்றியது தான் இந்த ஐடியா.

தாத்தாவை இதுவரை தனிமையில் தவிக்க விட்டது போதும். இனி ஒவ்வொரு நிமிடமும் தாத்தாவிற்காகவும் என்னைச் சுற்றியிருக்ககூடியவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதோடு தாத்தாவின் இறுதிக்காலம் மிகவும் சந்தோசமானதாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கிறார்.

Image Courtesy

பெற்றோர் :

பெற்றோர் :

ஃபுவின் பெற்றோர் அவருக்கு பத்து வயதான போது பிரிந்தார்கள். இதன் பிறகு ஃபுவின் வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. சீனாவில் இருக்கிற செங்கடு என்ற நகரத்தில் வசிக்கிற தாத்தாபாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டாள் ஃபு.

வெளியுலகம் தெரியாமல் வெறும் பாசம் என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து வாழ்க்கையே பாழாக்கிவிடுவார்கள் என்று சொல்லப்பட்டதெல்லாம் பொய் என்பதை ஃபுவின் தாத்தா பாட்டி நிரூபித்திருந்தார்கள்.

Image Courtesy

தன்னம்பிக்கை :

தன்னம்பிக்கை :

அளவு கடந்த அன்பும் அதே சமயத்தில் கண்டிப்பும் என்ற முறையில் மிகச் சிறந்த பெண்ணாக வளர்த்திருக்கிறார்கள். அதோடு தன்னம்பிக்கை நிறைந்த ஃபுவிற்கு உயர்வான எண்ணங்களையும் விதைத்திருக்கிறார்கள்.

இப்போது சொந்தமாக பிஸ்னஸ் செய்து இவ்வளவு தொகையை சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் என்னுடைய தாத்தா பாட்டி தான் என்கிறார் ஃபு.

Image Courtesy

வெளியூர் :

வெளியூர் :

படிப்பிற்காக பதினெட்டு வயதில் தாத்தா பாட்டியை விட்டு பிரிந்து வந்திருக்கிறார் ஃபு. ஸ்விச்சர்லாந்து,சிங்கப்பூர் என்று பயணித்தவர் அவ்வப்போது தன் தாத்தா பாட்டியிடம் பேசுவதை மட்டும் தவிர்க்கவில்லை.

அன்றாடம் தன்னுடைய அன்றாட வேலைகள், புதிய நட்புகள்,படிப்பு,பயணம்,எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

Image Courtesy

ஊருக்கு வாங்க :

ஊருக்கு வாங்க :

ஃபு சம்பாதிக்க ஆரம்பித்ததும், ஊரில் தனியாக வசித்த தாத்தா பாட்டியை தன்னோடு அழைத்துக் கொண்டார். அதோடு இந்த நகரத்து வாழ்க்கை இந்த நூற்றாண்டின் பிள்ளைகள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரடியாகவே காட்டியிருக்கிறார்.

நன்றாக போய்க் கொண்டிருந்த ஃபுவின் வாழ்க்கையில் ஓர் அதிர்ச்சிகரமான பிரிவுக்கு சூழல் உருவாகியது.

Image Courtesy

தாத்தா :

தாத்தா :

ஃபுவின் தாத்தா க்வான் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். இனி எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் என்றே சொல்ல முடியாது என்று கையை விரித்து விட்டார்கள். முதன் முதலாக தாத்தா தன்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்ற பயம் ஃபுவிற்கு வருகிறது.

தாத்தாவிற்கு 87 வயது.நீண்ட காலமாக அவருக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. அதோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாதம் வேறு தாக்கியிருந்தது.சுமார் மூன்று மாதங்கள் வரை மருத்துவமனையிலேயே இருந்திருக்கிறார். நாளுக்கு நாள் தாத்தாவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டே வருகிறது.

அழுது தீர்த்த ஃபு ஒரு முடிவுக்கு வருகிறார்.

Image Courtesy

கவனிப்பு :

கவனிப்பு :

தாத்தாவை விட்டு ஒரு நொடி கூட பிரிந்திருக்க மாட்டேன் என்று சொன்ன ஃபு. நாள் முழுவதும் அருகிலேயே இருக்கிறார். தாத்தாவுடன் தொடர்ந்து உற்சாகமான வார்த்தைகளைச் சொல்லி பேசுகிறார். இதன் போது தான் தாத்தாவிற்கு ஏதேனும் ஆசை இருக்கிறதா? இருந்தால் நிறைவேற்றி வைக்கலாமே என்று தோன்றுகிறது.

உடன் தாத்தாவிடம் கேட்கிறார்... அப்போது தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? உனக்கு திருமணம் நடக்க வேண்டும் திருமண கோலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்பது தான் தாத்தாவின் கடைசி ஆசையாக இருந்திருக்கிறது.

Image Courtesy

தடைகள் :

தடைகள் :

எப்படியாவது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றிவிடலாம் என்று பார்த்தால் ஃபுவிற்கு இரண்டு தடைகள் வந்தது. ஒன்று, ஃபுவிற்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. அதோடு ஃபுவிற்கு அப்போது பாய் ஃபிரண்டும் இல்லை.

திடீரென்று தாத்தாவிற்காக எப்படிப் போய் திருமணம் செய்து கொள்வது என்று யோசிக்கிறார்.... தன்னுடைய பிஸ்னஸ் தான் தனக்கு முக்கியம் அதில் வெற்றியடைந்த பிறகு தான் திருமணம் குறித்தெல்லாம் யோசிப்பேன் என்ற திட்டத்துடன் இருந்த ஃபுவிற்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது.

Image Courtesy

நிறைவேற்றம் :

நிறைவேற்றம் :

எப்படியும் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றிவிடுவது என்ற முடிவுடன் இருந்த ஃபு ஒரு முடிவுக்கு வருகிறார். திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே தாத்தாவிற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஹெல்த் செக்கப் செய்கிறார். பின்னர் குறிப்பிட்ட நாளில் இன்று நாம் இருவரும் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று தாத்தாவை அழைக்கிறார். தாத்தாவும் மகிழ்வுடன் கிளம்பிவிட்டார்.

அங்கே சென்ற பிறகு தான் இது சாதரண போட்டோ ஷூட் அல்ல பேத்தியின் திருமணம் என்று தெரியவந்திருக்கிறது.

Image Courtesy

உன் ஆசை தான் எனக்கு பெருசு :

உன் ஆசை தான் எனக்கு பெருசு :

வெட்டிங் தீம்மில் போட்டோஷூட் நடந்திருக்கிறது. ஃபு திருமண உடையில் மாறினார். தாத்தாவிற்கும் கோட் ஷூட் போட்டுவிட்டார்கள். நிச்சயமாக என் திருமணத்தை நடத்தி வைக்கும் பொறுப்பு என் தாத்தாவிற்கு இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அதுவரையில் தாத்தாவினால் உயிர் வாழ முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அதனால் இந்த ஏற்பாடு என்கிறார் ஃபு. அதோடு இதற்காக நிறைய செலவானது தான். ஆனால் என் தாத்தாவின் சிரிப்பிற்கு மத்தியில் இந்த செலவுகள், பணமெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை என்று சொல்லும் ஃபு தன்னுடைய வலது கையில் தாத்தாவின் புகைப்படத்தையே பச்சை குத்தியிருக்கிறார்.

Image Courtesy

மிச்சம் :

மிச்சம் :

சீனாவில் பாரம்பரியமாக ஒர் விஷயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கே பழைமையை கடைபிடிக்கும் குடும்பங்களில் தங்கள் வீட்டு பெண்ணுக்கு 27 வயதிற்குள்ளாக திருமணம் செய்து வைக்க வேண்டும். முப்பது வயதைக் கடந்துவிட்டாள் அந்த பெண்ணுக்கு அதன் பிறகு திருமணமே நடக்காது.அந்த பெண் வாழ்வின் மிச்சம் முழுவதும் இப்படியே முதிர் கன்னியாகவே செலவழிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. இதற்காகத்தான் ஃபுவின் தாத்தாவும் பயந்திருக்கிறார்.

வயதையும் திருமணத்தையும் காரணம் காட்டி பெண்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள் என்கிறார் ஃபு.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Grand Daughter Satisfies Her Grand Father Wish

Grand Daughter Satisfies Her Grand Father Wish
Story first published: Wednesday, May 2, 2018, 18:16 [IST]
Desktop Bottom Promotion