பிரிட்டிஷ்காரர்கள் விரட்டி அடித்தும், கைக்கூலிகளால் அவமானப்பட்டு இறந்த மாவீரன்!

Posted By: Staff
Subscribe to Boldsky

உயாலவாடா நரசிம்ம ரெட்டி பாளையக்காரரின் மகன் என்று அறியப்படுகிறது. இவர் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1846ம் ஆண்டு கிளர்ச்சியை ஏற்படுத்திய போராளி ஆவார்.

உயாலவாடா நரசிம்ம ரெட்டி , உயாலவாடா பெத்தமல்ல ரெட்டிக்கு. உயாலவாடா எனும் பகுதியில் பிறந்தவர். இன்று இந்த ஊர் கர்னூல் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரில் தான் குண்டு எனும் நதி ஓடிக் கொண்டிருக்கியது. இது ராயலசீமாவில் இருக்கும் பெண்ணா நதியின் கிளை நதியாகும்.

உயாலவாடா நரசிம்ம ரெட்டியின் அப்பா பெத்தமல்ல ரெட்டி மற்றும் தாத்தா ஜெயராமி ரெட்டி இருவரும் கோயில்குண்ட்லா எனும் பகுதியின் பாளையக்காரர்கள் ஆவார். இவர்கள் குடும்பம் தான், அந்த பகுதியில் ஊர் தலைவர்களாக இருந்து வழிநடத்தி வந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளர்ச்சி!

கிளர்ச்சி!

1846 ஜூலை 23ம் நாள் கிட்டலூரு (Giddaluru) எனும் பகுதியில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயே படை மீது தாக்குதல் நடத்தி, அவர்களை வென்று விரட்டி அடித்தது உயாலவாடா நரசிம்ம ரெட்டியின் படை. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பெருத்த அவமானமாக அமைந்தது.

கோழைகள்!

கோழைகள்!

உயாலவாடா நரசிம்ம ரெட்டியை பிடிக்க முடியாமல், அவரது குடும்பத்தாரை கடப்பா பகுதியில் பிடித்து வைத்து கொடுமை செய்தனர் ஆங்கிலேயர்கள். பிடிப்பட்ட தனது குடும்பத்தாரை காப்பாற்ற நல்லமல்லா மலை பகுதிக்கு சென்றார் உயாலவாடா நரசிம்ம ரெட்டி.

கைகூலிகள்!

கைகூலிகள்!

ஆனால், உயாலவாடா நரசிம்ம ரெட்டி நல்லமல்லா மலையில் தஞ்சம் புகுந்ததை அறிந்து, சில கைகூலிகள், கோயில் குண்ட்லா ஆட்சியரிடம் தகவல் கூறிவிட்டனர். பிறகு, நல்லமல்லா சுற்றுவட்டாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் பிரிட்டிஷ்க்காரர்கள்.

மீண்டும்..

மீண்டும்..

அதன் பிறகு, மீண்டும் கோயில் குண்டலா பகுதிக்கே திரும்பினார் உயாலவாடா நரசிம்ம ரெட்டி. அங்கே ராமபத்ருனிபல்லே (Ramabhadrunipalle) என்ற கிராமத்தின் அருகே இருந்த ஜகன்னாத கொண்டா என்ற பகுதியில் மறைந்திருந்தார். அங்கயும் சில கைகூலிகள் ஆங்கிலேயர்களிடம் அவர் இருந்த இடத்தை பற்றிய துப்புக் கொடுத்தனர்.

இரவு!

இரவு!

துப்புக் கிடைத்தக் கையோடு, இரவோடு, இரவாக உயாலவாடா நரசிம்ம ரெட்டி மற்றும் அவரது படையினை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர் ஆங்கிலேயர்கள். அக்டோபர் 6,1846 அன்று இரவு உயாலவாடா நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.

அவமானம்!

அவமானம்!

கைது செய்தது மட்டுமின்றி, உயாலவாடா நரசிம்ம ரெட்டியை கோயில்குண்ட்லா பகுதியில் வைத்து அவமானப்படுத்தி, தெருவில் சங்கிலியால் கட்டி, இரத்த கரையோடு இழுத்து சென்றனர். இதனை, கண்டு தங்கள் ஆட்சிக்கு எதிராக யாரும் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடாது என்று கருதினர் பிரிட்டிஷார்.

903!

903!

ஏறத்தாழ உயாலவாடா நரசிம்ம ரெட்டியுடன் 903 பேர் கைதானதாக அறியப்படுகிறது. இதில் சில நாட்களில் 412 பேர் விடிவிக்கப்பட்டனர். 273 பேருக்கு ஜாமீன் கொடுத்து வெளியே விட்டனர். 112 பேருக்கு மரண தண்டனையும், 5 - 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளித்தனர். இதில் சிலரை அந்தமான் சிறையில் அடைத்தனர்.

மரண தண்டனை!

மரண தண்டனை!

இதில், உயாலவாடா நரசிம்ம ரெட்டி மீது கொலை, கொள்ளை மற்றும் கிளர்ச்சி ஏற்படுத்தியதற்கான குற்றங்கள் சுமத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. பிப்ரவரி 22, 1847ல் உயாலவாடா நரசிம்ம ரெட்டி தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

உயாலவாடா நரசிம்ம ரெட்டி கோயில்குண்ட்லாவில் இருந்த நதிக்கரை அருகே மக்கள் முன்னிலையில் ஆட்சியர் முன்னிலையில் தூக்கிலிட்டு கொன்றனர்.

ஏறத்தாழ உயாலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையும், வீரபாண்டிய கட்டபொம்மன் கதையும் ஒரே மாதிரியானவை தான்.

நினைவிடங்கள்!

நினைவிடங்கள்!

ரெணட்டி சூரிய சந்திரலு ஸ்மராக சமிதி என்ற பெயரில் உயாலவாடா நரசிம்ம ரெட்டி மற்றும் கொடையாளர் புத்த வெங்கல் ரெட்டி இருவருக்கும் சேர்த்து ஒரு நினைவிடம் உருவாக்கப்பட்டது. வெங்கல் ரெட்டியும் உயாலவாடா பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் ரெணடு சூர்ய, சந்திரலு (The Sun and Moon of Renadu) என்ற புத்தகமும் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் பல வரலாற்று ஆய்வாளர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts and Biography about Uyyalawada Narasimha Reddy!

Chiranjeevi's Under Production Project Sye Ra Rarasimha is all about Uyyalawada Narasimha Reddy, who is rebellion against British!
Story first published: Tuesday, April 3, 2018, 17:00 [IST]