பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky
பாஜக தலைவர் தமிழிசை யார் ? இதுதான் அவரது பயோ- வீடியோ

தமிழக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து உதித்த பா.ஜ.க தலைவர் தமிழசை சௌந்தராஜன். குழந்தை பருவத்தில் அனைவரும் வெயிலோடும், மழையோடும் விளையாடினால், தமிழசை மட்டும் அரசியலோடும், பேச்சாளார்களோடும் விளையாடி வளர்ந்தார்.

அரசியல் மீது சிறு வயது முதலே பேரார்வம் கொண்டிருந்தார் தமிழசை. மற்றும் மேடை பேச்சு, பேச்சுப் போட்டிகளில் பங்குக் கொள்வதில் அதிக பிரியம் கொண்டிருந்தவர். அரசியலும், பேச்சும் பிரிக்க முடியாதவை. அதை இரண்டையுமே தனது ஊன்றுகோலாக கொண்டு வளர்ந்தார் தமிழிசை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

ஜூன் 2, 1961 அன்று நாகர்கோவிலில் பிறந்தவர் தமிழிசை. இவரது அப்பா தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஆவார். இவர் ஒரு விடுதலை போராட்ட வீரரும் கூட. பெருந்தலைவர் காமராஜர் ஐயாவுடன் இணைந்து பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

இவர் முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழில் இலக்கிய புலமை என்று பன்முகம் கொண்டிருந்த திறமையாளர்.

கனடாவில் கல்வி!

கனடாவில் கல்வி!

குமரி ஆனந்தன் ஐயாவுக்கு மொத்தம் நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன். அந்த நான்கு மகள்களில் ஒருவர் தான் தமிழிசை சௌந்தராஜன்.

இவர் எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு, மகப்பேறியல் & பெண்ணோயியல் கல்வியை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் கனடாவில் Sonology மற்றும் FET சிகிச்சையில் பயிற்சி பெற்றிருக்கிறார்.

தமிழிசை மட்டுமின்றி அவரது கணவர் சௌந்தராஜன் அவர்களும் மருத்துவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்கும் போதே தலைவர்...

படிக்கும் போதே தலைவர்...

சிறு வயதில் இருந்தே அரசியல் மீது பேரார்வம் கொண்டிருந்த தமிழசை அவர்கள் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், இவர் முழுநேர பா.ஜ.க. அரசியல் தலைவராக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1999 முதல், இன்று வரை 19 ஆண்டு காலமாக தமிழக பா.ஜ.க வில் தனது பெரும் பங்களிப்பை ஆற்றிவருகிறார்.

சித்தப்பா!

சித்தப்பா!

தமிழசை சௌந்தராஜனின் சித்தப்பா யார் தெரியுமா? வசந்தன் கோ வசந்த குமார் ஆவர். இவர் காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு தலைவராக இருந்து வருகிறார். 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் எஸ்.பி சூர்யகுமார் என்பவரை எதிர்த்து வெற்றிக் கண்டார்.

பேச்சாளர்!

பேச்சாளர்!

தமிழிசை அவர்கள் பெண் சக்தி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக விளங்கி வந்தார். மேலும், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அவர்கள் தலைவராக இருக்கும் பொற்றாமரை இலக்கிய அமைப்பின் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்று கூறுகிறார்கள்.

முதல் பெண் தலைவர்!

முதல் பெண் தலைவர்!

பாஜக கொள்கைகள் படி அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் தலைவர் பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தால் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைவர் பதவியில் இருந்து விலக, தமிழசை சௌந்தராஜன் தலைவராக 2014ம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தான் பாஜகவின் முதல் பெண் தலைவர் ஆவார்.

பிரபலமான வாக்கியங்கள்...

பிரபலமான வாக்கியங்கள்...

எம்ஜிஆர் அம்மா தீபா கட்சி தலைவர் தீபாவுக்கு எப்படி "அதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்பது போல ஒரு வைரல் வாக்கியம் இருக்கிறதோ அதே போல, தமிழிசை சௌந்தராஜன் அவர்களும் சில வைரல் வாக்கியங்கள் உருவாக்கி இருக்கிறார். அவை,

"பாஜக தமிழகத்தில் மலர்ந்தே தீரும்.."

"பாஜக நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்..."

"அது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு கட்சி பொறுப்பாகாது."

"நாங்க இருக்கோம்."

இதில் "தாமரை மலர்ந்தே தீரும்" என்பது மீம் கிரியேட்டர்களுக்கு பிடித்த் டெம்பிளேட் ஆகும்.

டிவி புகழ்!

டிவி புகழ்!

இவர் தனது கிளினிக் அல்லது கட்சி அலுவலகத்தில் இருந்த நேரத்தை காட்டிலும், மீடியா மைக்குகள் முன்னும், டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டிருந்த நேரம் தான் அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஒரு அரசியல் தலைவர் பேசிய காணொளிப்பதிவும் சமூகதளங்களில் அதிக வைரலாகிறது என்றால், கேப்டன் விஜய்காந்த்க்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருப்பவர் தமிழசை அவர்கள் தான்.

நிகழ்சிகள்!

நிகழ்சிகள்!

ராஜ் தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் சொற்பொழிவுக்கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தி வந்துள்ளார் தமிழிசை. அந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி பெருமளவு இருந்ததாக அறியப்படுகிறது. பிறகு தூர்தர்ஷனில் மகளிர் பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியை வாரம் ஒருமுறை நடத்தி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சி ஐந்து ஆண்டு காலம் ஒளிப்பரப்பு ஆகியிருக்கிறது.

பிறகு அரசியலில் களம் கண்ட பிறகு, சன், என்டிடிவ், டைம்ஸ் நவ் மற்றும் பல தமிழ் செய்தி சேனல்களில் இவர்கள் சிறப்பு விருந்தினராகவும், பேச்சாளாராகவும் பங்கெடுத்திருக்கிறார்.

தேர்தல் தோல்விகள்!

தேர்தல் தோல்விகள்!

இதுவரை சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறையும், மக்களவை தேர்தலில் ஒரு முறையும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளார் தமிழசை.

சட்டமன்ற தேர்தல்:

2006 - ராதாபுரம் - ஐந்தாம் இடம் - 5343 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

2011 - வேளச்சேரி - நான்காம் இடம் - 7040 வாக்குகள் மட்டும் பெற்றார்.

மக்களவை தேர்தல்:

2009 - வடசென்னை - மூன்றாம் இடம் 23,350 வாக்குகள் பெற்றார்.

எம்ஜிஆருடன்!

எம்ஜிஆருடன்!

எம்ஜிஆர் உடன் தமிழக பாஜக தலைவர் தமிழசை சௌந்தராஜன் இருக்கும் புகைப்படம் என்று சமூக தளங்களில் வைரலாக பரவி வரும் குழந்தை புகைப்படம்.

Image Source: Facebook

அடடே!

அடடே!

அப்படி எம்ஜிஆர் கிட்ட என்ன சொல்லி இப்படி சிரிக்க வெச்சார் தமிழிசை என்று தெரியவில்லை. இல்லை, அப்போதே தீர்கதரிசி எம்.ஜி.ஆர். அவரது சிகை அலங்காரம் ஓஹோ என புகழப்படும் என்று செய்கை காண்பிக்கிறாரோ எனவோ?

முதல்ல, இது அவங்க படம் தான்னு கன்பார்ம் இல்ல. ஹேர்ஸ்டைல் எல்லாம் பார்த்தா, அவங்க போல இருந்தாலும், இவர் ஒரு குழந்தை நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.

Image Source: Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Tamil Nadu Politician and BJP Leader Tamilisai Soundarajan

Facts About Tamil Nadu Politician and BJP Leader Tamilisai Soundarajan