இரண்டே வார்த்தைகளில் ஒவ்வொரு ராசிக்காரரைப் பற்றியும் நாங்க சொல்லவா?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவருடன் பழகும் போது, அவரது குணாதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோம். அதோடு ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானதும் கூட. அப்படி தெரிந்து கொண்டு ஒருவருடன் பழகும் போது, அவர்களுடன் தேவையில்லாத சண்டைகள், வாக்குவாதங்கள், தவறான புரிதல்கள் போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.

Describing Each Zodiac Sign With Just 2 Words

ஒருவரது குணாதிசயங்களைப் புரிந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று ராசிகள் ஆகும். ராசிகளைக் கொண்டும் ஒருவரது குணாதிசயங்களைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்

ஏனெனில் இக்கட்டுரையில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்பேற்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இரண்டே வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. சரி, இப்போது பார்ப்போமா....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

* வேடிக்கை/நகைச்சுவையாளர்கள்

* ஆக்கிரோஷமானவர்கள்

இந்த ராசிக்காரர்கள் சற்று கோபக்காரர்களாக மற்றும் பேரார்வம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

* உத்தமமானர்வர்கள்

* ஆசை வெறி கொண்டவர்கள்

இந்த ராசிக்காரர்கள் காளையைப் போன்று, வெற்றியைப் பெறுவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதனால் தான் இந்த ராசிக்காரர்களின் அடையாளமாக காளை உள்ளது போலும்.

மிதுனம்

மிதுனம்

* பேச்சாளர்

* குழப்பவாதிகள்

மிதுன ராசிக்காரர்கள் சமூகத்துடன் நன்கு பழகக்கூடியவர்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். அதே சமயம் இந்த ராசிக்காரர்கள், ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதில் நிரந்தரமாக முடிவு எடுக்கத் தெரியாதவர்கள்.

கடகம்

கடகம்

* இனிமையானவர்

* உணர்ச்சியாளர்

இந்த ராசிக்காரர்களின் இனிமையான குணம், இவர்களை எப்போதும் சிறப்பானவர்களாக காட்டும். இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதால், இவர்களை உணர்வு ரீதியாக பலரும் முட்டாள் ஆக்குவார்கள்.

சிம்மம்

சிம்மம்

* சுறுசுறுப்பாளர்கள்

* தைரியமானவர்கள்

இந்த ராசிக்காரர்கள் மரியாதையையும், அதிகாரத்தையும் கோருவார்கள். இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பைக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பர்.

கன்னி

கன்னி

* வாதாடுபவர்கள்

* விவரமானவர்கள்

கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் புத்திசாலித்தனமான முடிவை எடுப்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் எதையும் வெளிப்படையாக மற்றவர்களிடம் பேசமாட்டார்கள்.

துலாம்

துலாம்

* அறிவார்ந்தவர்கள்

* எச்சரிக்கையாளர்

ஒரு நல்ல நீதிபதியாக இருப்பதுடன், இரு தரப்பினர் குறித்தும் சரியாக எடைபோடும் இயல்பு அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்கள் யாரையும் துன்புறுத்தமாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

* பிடிவாதக்காரர்கள்

* கச்சிதமாக முடிப்பவர்கள்

இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மிகவும் கவனமாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுடன் பழகும் பலர், இவர்களை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

தனுசு

தனுசு

* ஆர்வமுள்ளவர்கள்

* வெளிப்படையானவர்கள்

இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வார்கள். மேலும் தங்கள் மனதில் தோன்றுவதை சற்றும் மறைத்து பேசாமல், வெளிப்படையாக பேசும் சுபாவத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

மகரம்

மகரம்

* பேரார்வம்

* தலைக்கனம்

இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வெற்றியின் மீது அதிக கவனத்தை செலுத்துவார்கள். இவர்கள் எதிலும் வெற்றிப்படியில் ஏறுவது அவர்களை சற்று தலைக்கனமிக்கவர்களாக காட்டும்.

கும்பம்

கும்பம்

* சீரற்றவர்கள்

* உணர்ச்சிவசப்படுவார்கள்

இந்த ராசிக்காரர்கள் மகத்தான நினைவாற்றல் சக்தி மற்றும் கணக்கீடுகளுக்கு அறியப்படுகிறார்கள். இவர்கள் நெருக்கமானவர்களிடம் மிகவும் விசுவாசமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

மீனம்

மீனம்

* கலைத்திறன்மிக்கவர்கள்

* புத்திசாலியானவர்கள்

உள்ளுணர்வு ராசி அடையாளத்தைக் கொண்ட மீன ராசிக்காரர்கள், மிகவும் சிறந்த கலைத் திறமைக் கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் நன்கு யோசித்து, புத்திசாலித்தனமான தீர்வை எடுப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Describing Each Zodiac Sign With Just 2 Words

Each zodiac sign has its own uniqueness and describing them in a word or two defines their personality to the best. Here in this article, we are bringing in two words that would define your zodiac sign. Check it out…