ஹைவேஸில் பெட்ஷீட் தடுப்புகளுக்கு மத்தியில் நடக்கும் பாலியல் தொழில்!

Subscribe to Boldsky

எவ்வளவு தான் இந்தியாவில் பாலியல் தொழில் என்பது மோசமானது, அது குற்றம் என்று சொல்லி அவர்களை இந்த சமூகத்திலிருந்து புறக்கணித்தாலும் தொடர்ந்து அவர்களைத் தேடி செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வெளியுலகத்திற்கு தெரியாமல் குறிப்பாக தங்கள் வீட்டினருக்குத் தெரியாமல் இதைச் செய்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க.... இங்கே ஒரு சமூக மக்கள் முழுவதுமே பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதை வழி வழியாக தங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்தி வருகிறார்கள்.

ஜெய்ப்பூரின் ஹைவேஸிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பரத்பூர். இங்கு தான் இளம்பெண்களே தங்களது பருவ வயதை எட்டுவதற்கு முன்பிருந்தே பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லையா என்று கேட்பது போல இங்கே பாலியல் தொழிலுக்கு இன்னும் அனுப்பவில்லையா என்று கேட்பார்களாம்.... அந்த அளவிற்கு இந்த சமூகத்தின் மக்களும் பாலியல் தொழிலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேடியா :

பேடியா :

இந்த மக்களை பேடியா மக்கள் என்று அழைக்கிறார்கள். ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழக்கூடிய கடைநிலை சாதியினர் இவர்கள். இங்கே பெரும்பாலும் வறுமையை ஒழிக்க, வயிற்று பிழைப்புக்கு என்று காரணத்தை சொல்லிக் கொண்டாலும் சிலர் வழி வழியாக செய்கிறார்கள் அதனால் நானும் தொடர்கிறேன் என்பவர்களும் உண்டு.

Image Courtesy

கஸ்டமர்கள் :

கஸ்டமர்கள் :

அப்பா இறக்கும் போது எனக்கு பதினோரு வயதிருக்கும். அதன் பிறகு தான் இந்த தொழிலுக்கு வந்தேன். அப்போது என்னை ஜெய்ப்பூரின் பணக்காரர்கள் அம்மாவிடம் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பாலியல் அடிமையாக வாங்கிச் சென்றார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னர் அது தான் மிக அதிகபட்ச தொகை. இப்போது எனக்கு முப்பது வயதாகிறது. இன்னமும் என்னைத் தேடி பணக்கார கஸ்டமர்கள் வருவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

Image Courtesy

கிராமம் :

கிராமம் :

பரத்பூரை ஓட்டி இருக்கிறது மலஹா கிராமம். இதனை பறவைகளின் கிராமம் என்று அழைக்கிறார்கள். இங்கேயும் நூறுக்கும் மேற்பட்ட பேடியா இனப்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

கஸ்டமர்களை கவர்வதற்காக எப்போதுமே அதிகப்படியான மேக்கப்புடன் தான் இருக்கிறார்கள்.

Image Courtesy

 குடும்பம் :

குடும்பம் :

பணக்கார கஸ்டமர்கள் குறித்து பெருமைபட்ட அதே பெண் தான் இதையும் சொல்லியிருக்கிறார்.... எங்கள் குடும்பத்தில்ஐந்து சகோதர்கள், அவர்களது மனைவி குழந்தைகள் என கிட்டத்தட்ட நாற்பது பேருக்கும் மேல் இருக்கிறோம். அவர்களுக்கு எல்லாம் நானும் எனது சகோதரிகளும் பாலியல் தொழில் செய்து தான் சம்பாதிக்கிறோம் என்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன் ஆனால் அவள் விரும்பவில்லை என்கிறார் அந்தப் பெண்ணின் தாய்.

Image Courtesy

பெட்ஷீட் :

பெட்ஷீட் :

வருகிற கஸ்டமர்களுக்காக தனி அறையோ அல்லது இடமோ இவர்கள் ஒதுக்குவதில்லை. காட்டின் ஒரு வோரத்தில் பெட்ஷீட்டை கொண்டு தடுப்பு போல செய்திருக்கிறார்கள் அது தான் அவர்களது இடம்.

சிலர் இந்த இடத்திற்காகவும் வருவதுண்டாம்.

Image Courtesy

கட்டாயம் :

கட்டாயம் :

இந்த கிராமத்தில் இருக்கிற ஓர் ஆண் கூறுகையில், நாங்கள் யாரையும் இதில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை அதோடு இது எங்கள் சமூக மக்களுக்கு தெரியாமல் ரகசியமாகவும் நாங்கள் செய்யவில்லை.

எங்கள் மக்களின் ஒப்புதலுடன் தான் இதைச் செய்கிறோம். முதலில் பெண்களிடம் உனக்கு திருமணம் செய்து கொண்டு செல்கிறாயா அல்லது தொழிலில் ஈடுபடுகிறாயா என்று கேட்போம். அவர்களின் விருப்பத்திற்கு உட்ப்பட்டு தான் எல்லாமே....

Image Courtesy

வேலை வாய்ப்பு :

வேலை வாய்ப்பு :

இதில் அவமானப்பட என்ன இருக்கிறது? எங்கள் விருப்பத்துடன் தான் நடக்கிறது எங்களையும் சமமாக ஏற்றுக் கொண்டிருந்தால் எங்களுக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்புகள்,சலுகைகள் எல்லாம் வழங்கியிருந்தால் நான் என் சகோதரிகளை இந்த தொழிலில் ஈடுபடவே விட்டிருக்க மாட்டேன் என்கிறார் பணக்கார கஸ்டமர்கள் குறித்து பேசிய பெண்ணின் சகோதரர்.

Image Courtesy

இது மட்டுமே வாழ்க்கை அல்ல :

இது மட்டுமே வாழ்க்கை அல்ல :

நாங்களும் பாலியல் தொழிலாளிகள் என்பதால் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கஸ்டமர்களை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

அன்றாட வேலைகளான சமைப்பது, தண்ணீர் பிடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை நாங்கள் செய்ய வேண்டு. இது போக கூடுதலாகத்தான் இந்த தொழிலை நாங்கள் செய்கிறோம். சிலர் திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகும் இந்த தொழிலில் ஈடுபடுவதுண்டு.

Image Courtesy

இரட்டிப்பு பணம் :

இரட்டிப்பு பணம் :

நான் என்னுடைய பதினான்கு வயதில் இந்த தொழிலுக்கு வந்தேன். அப்போதெல்லாம் நூறு,முன்னூறு என்று கொடுப்பார்கள். இன்றைக்கு ஐநூறு ரூபாய் வரை கொடுக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் அல்லது குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுவேன்.

ஆறு கஸ்டமர்கள் ஒரு நாளைக்கு ஏற்றுக் கொள்வேன்.திருவிழாக்காலங்கள் அல்லது சம்பளம் போடு நாட்கள் என்றால் எங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும்.

Image Courtesy

பாடம் :

பாடம் :

கஸ்டமர்களிடம் பேரம் பேசுவது, பணத்தை வாங்குவது எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்வோம். யாரும் இவ்வளவு காசு வாங்க வேண்டும்... இப்படி பேச வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லிகொடுக்கவில்லை.

இளவயதிலேயே அம்மா இங்கே அழைத்து வந்துவிடுவார். பெட்ஷீட்டுக்கு இடையில் தங்கள் அக்காக்களோ அல்லது உறவுக்கார பெண்கள் பேசுவதை கேட்டு கேட்டு தாங்களாகவே பழகிவிட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

எயிட்ஸ் :

எயிட்ஸ் :

பாலியல் தொழில் நடக்குமிடத்தில் எயிட்ஸ் நோய் இல்லாமல் இருக்குமா? கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் எனக்கு எயிட்ஸ் இருப்பதை கண்டறிந்தார்கள். அதன் பிறகு நான் தொழிலில் ஈடுபடவேயில்லை. எனக்கு ஆதரவளிக்கவும் இங்கே யாரும் இல்லை.

உணவுக்கே சிரமப்படும் போது மருத்துவத்தைப் பற்றியெல்லாம் சிந்திக்க முடியுமா? விதி வந்தால் மரணம் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் ஒரு பெண்.

Image Courtesy

 திருமணத் தொகை :

திருமணத் தொகை :

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜெய்ப்பூர் ஹைவேஸிலிருந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் பேடியா சமூகத்தினரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவதில் சில சிரமங்கள் இருக்கிறது. அதோடு ஆரம்பத்தில் டீன் ஏஜ் விர்ஜின் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தொகை பத்தாயிரம். ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் வரையில் கொடுக்க முன் வருகிறார்கள்.

இது இந்தப் பெண்களை திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்கள் கொடுப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்.

Image Courtesy

கிராமத்தில் :

கிராமத்தில் :

எங்கள் வயிற்று பிழைப்புக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. ஊரில் இருந்த வரை ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் தான் வாழ்ந்தோம். கரண்ட்,தண்ணீர் வசதி கூட இருக்காது.

எங்களையும், எங்கள் குழந்தைகளையும் சாதியின் பெயரைச் சொல்லி கேவலப்படுத்துவார்கள். கஷ்டப்பட்டு பல அவமானங்களை தாங்கி வேலை செய்தாலும் பேசிய தொகையை எங்களுக்கு கொடுப்பதில்லை

Image Courtesy

மாற்றங்கள் :

மாற்றங்கள் :

ஜெய்பூருக்கு வந்திருந்த முப்பத்து நான்கு வயது கலெக்டர் நீரஜ் குமார் பவான் என்பவரால் இந்த மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. நீரஜ் மூலமாக இந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்போது இங்கே பள்ளிக்கூடம் ஒன்றும் திறக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் சிலர் தங்கள் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த மாட்டோம் என்று சபதமெடுத்திருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்கூடத்திற்கும் அனுப்புகிறார்கள். என் குழந்தையின் எதிர்காலம் என்னைப் போல இல்லாமல் ஆரோக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Community Allows Prostitution As Their Traditional Family Business

  Community Allows Prostitution As Their Traditional Family Business
  Story first published: Tuesday, April 24, 2018, 10:17 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more