40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... ஆனால், இந்த உலகிலேயே உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஒரு தொலைநோக்கு பார்வை காதலுக்கு மட்டும் தான். (உண்மையான காதல் மட்டும், கள்ள காதலுக்கு இங்கே இடமில்லை). காதலுக்கு சாதி, மத தடை கிடையாது என்பார்கள். அதே போல காதலுக்கு வயதும் கூட பெரும் தடையாக யாரும் காண்பதில்லை.

15 - 20 வயது வித்தியாசத்தில் காதலித்து திருமணம் செய்தவர்களை கூட நாம் கண்டிருப்போம். அப்படியாக தங்கள் 40களில், நாற்பதுக்கு மேல் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பிரபலங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் ஒன்று காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊர்மிளா மதோன்கர்!

ஊர்மிளா மதோன்கர்!

தனது திருமண செய்தியை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தவர் ஊர்மிளா மதோன்கர். இவர் தொழிலதிபர் மற்றும் மாடலான மொஹ்சின் அக்தர் என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறினார்.

இவருக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கும் இடையே நீண்டநாள் கிசுகிசுக்கள் பரவி வந்தன. கடைசியாக அக்தரை தனது 42வது வயதில் திருமணம் செய்து கரம்பிடித்தார் ஊர்மிளா.

ப்ரீத்தி ஜிந்தா!

ப்ரீத்தி ஜிந்தா!

பலருடன் கிசிகிசுக்கப்பட்ட நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் ஜேன் குட் இனஃப் என்பவரை நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அப்போது இவருக்கு வயது 41. தனது திருமணம் செய்து செட்டிலாவது தள்ளிப்போக தனது தாய் தான் காரணம் என்றும் இவர் கூறியிருந்தார்.

ஜான் ஆபிரகாம்!

ஜான் ஆபிரகாம்!

பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் கூட தனது கவர்ச்சி அழகால் ஈர்த்தவர் ஜான் ஆபிரகாம். இவருக்கும் பிபாசாவுக்கும் இடையே நீண்ட நாள் காதல் கதை இருந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் பிரிந்தனர்.

ஜான் தனது 41வது வயதில் ப்ரியா ரஞ்சல் எனும் வங்கி துறையில் பணிபுரிந்து வந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

சயப் அலிகான்!

சயப் அலிகான்!

சயப் அலிகான் ஏற்கனவே திருமணமானவர். இவர் நான்கு ஆண்டுகளாக கரீனாவுடன் டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டாம் முறையாக கரீனாவை திருமணம் செய்த போது சயப் அலிகானின் வயது 41. சென்ற ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அமீர் கான்!

அமீர் கான்!

தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு, மூன்று ஆண்டு இடைவேளைக்கு பிறகு கிரண் ராவை காதலித்து கரம் பிடித்தார் அமீர் கான்.

இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட போது அமீர் கானுக்கு வயது 45 ஆகும். 2011ம் ஆண்டு இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஃபரா கான்!

ஃபரா கான்!

ஃபரா கான் மெயின் ஹூ நா படத்தின் எடிட்டர் ஷிரிஷ் குந்தரை திருமணம் செய்துக் கொண்டார். ஃபரா கானை விட ஷிரிஷ் குந்தர் வயதில் இளையவர். மற்றும் இவர்களுக்கு திருமணமான போது ஃபராவுக்கு வயது 40. பாலிவுட்டை வியக்க வைத்த ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.

போனி கபூர்!

போனி கபூர்!

போனி கபூரும் - ஸ்ரீதேவியும் இரகசியமாக காதலித்து வந்தனர். ஒருக்கட்டதில் எதிபாராத விதமாக ஸ்ரீதேவி கருவுற, இருவரும் 1996ல் திருமணம் செய்துக் கொண்டனர். அப்போது போனி கபூருக்கு வயது 40.

சஞ்சய் தத்!

சஞ்சய் தத்!

தன்னைவிட 19 வயது இளையவரான மன்யதாவை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் சஞ்சய் தத். அப்போது தான் ஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த காரணத்தால் இவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயமும் உண்டானது. மன்யதாவை திருமணம் செய்துக் கொண்ட போது சஞ்சய்க்கு வயது 49.

சுகாஷினி!

சுகாஷினி!

தேசிய விருது வென்ற சென்ற தலைமுறை கலைஞர் சுகாஷினி முலே என்பவர் ஓய்வுபெற்ற இயற்பியலாளர் அதுல் குர்து என்பவரை 2011ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 60. இவர்களது திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது குறிப்பிடத்தக்கது. இது இவரது முதல் திருமணமாகும்.

Image Source: Youtube

கபீர் பேடி!

கபீர் பேடி!

கபீர் பேடி எனும் நடிகர் தனது 70வது வயதில் பர்வீன் சுசாஞ் எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இது இவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

Image Source: Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Got Married After Age of 40!

Celebrities Who Got Married After Age of 40!
Story first published: Thursday, April 5, 2018, 12:11 [IST]