For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அன்னக்கிளி அபசகுனத்தில் இருந்து லண்டன் ராயல் சொஸைட்டி வரை... இசைஞானி 10!

  |

  தனது இயற்பெயரையே பட்டப்பெயராக பெற்றவர் இளையராஜா ஒருவராக தான் இருக்க வேண்டும். ஞானதேசிகன் என்பது இளையராஜாவின் இயற்பெயர். சினிமாவில் இளையராஜாவாக இருந்தவர். தனது இசை பயணம் மற்றும் வெற்றிகள் மூலம் தனது இயற்பெயரின் முதல் பாதியான ஞானத்தை இசைஞானி என்ற பட்டப்பெயர் மூலம் பெற்றார்.

  Birthday Special: Lesser Known Facts and Biography about Isaignani Ilayaraja

  ஏறத்தாழ நாற்பதாண்டு கால பயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா. இனி யார் ஒருவரும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைக்க முடியாது. ஏறத்தாழ வருடத்திற்கு 25 படங்கள் என்ற விகித்ததில் அமைகிறது இளையராஜாவின் இந்த சாதனை.

  கர்நாடக இசையில் பஞ்சமுகி என்ற ராகத்தை உருவாக்கியவர் / கண்டுபிடித்தவர் இசைஞானி என்று அறியப்படுகிறது.

  இன்று தனது 75வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கும் இசைஞானி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இனி....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தங்கப்பதக்கம்!

  தங்கப்பதக்கம்!

  ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்கில் படித்தவர் இசைஞானி இளையராஜா. இதே கல்லூரியில் தான் ஏ.ஆர். ரஹ்மானும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980களில் இளையராஜாவின் குழுவில் ரஹ்மான் இணைந்து இசைக் கருவிகள் வாசித்து வந்தார். இளையராஜா ட்ரினிட்டி காலேஜில் படித்தப் போது கிளாசிக்கல் கிட்டாரில் தங்க பதக்கம் பெற்றவர் ஆவார்.

  அன்னக்கிளி...

  அன்னக்கிளி...

  தனது முதல் படத்திற்காக இளையராஜா ஸ்டூடியோவிற்கு வந்த போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. சில நேரம் மின்சாரம் வருவதற்காக காத்திருந்தனர். மின்சாரம் வந்த பிறகு அவன் முன்னர் வாசித்து வைத்திருந்த இசை கோப்புகள் தொழில்நுட்ப கோளாறால் சேமிக்கப்படாமல் போனது அறியவந்தது. மீண்டும் முதலில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து இசை வேலையை முடித்துக் கொடுத்தார் இளையராஜா. அக்காலத்தில் இப்படியான விஷயங்கள் அபசகுனமாகவே காணப்படும்.

  ஆனால், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் இந்திய சினிமா உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின என்று தான் கூறவேண்டும். அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்தி பாடல்களின் ஆளுமை இருந்து வந்த நேரத்தில்... தனது பாடல்கள் மூலம் அனைவரையும் தமிழ் பாடல்கள் பக்கம் ஈர்த்தார் இளையராஜா.

  பெயர் காரணம்

  பெயர் காரணம்

  இளையராஜா தமிழ் திரை உலகில் அறிமுகமான போது, ஏற்கனவே ராஜா என்ற இசை அமைப்பாளர் இருந்தார். எனவே, இவரது பெயரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, ஜூனியர் ராஜா என்று வைத்துக் கொள்ளலாம் என சிபாரிசு செய்யப்பட்டது.

  ஆனால், கொஞ்சம் புதுமையாக இருக்கட்டும் என்று பிறகு இளைய ராஜா என்று வைத்தனர். இந்த பெயரோடு தான் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்திய இசை உலகை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கிறார் இளையராஜா.

  ஸ்டீரியோ ஃபோனிக்

  ஸ்டீரியோ ஃபோனிக்

  தமிழ் திரை இசைத் துறையில் ஸ்டீரியோ ஃபோனிக் இசையை அறிமுகம் செய்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் நடித்த ப்ரியா என்ற படத்தில் கே.ஜே. யேசுதாஸ் பாடலில் ஸ்டீரியோ ஃபோனிக் முயற்சி செய்தார் இளையராஜா. இது அன்று பெரும் சென்சேஷனலாக மாறியது என்று கூறப்படுகிறது.

  ராக்கம்மா

  ராக்கம்மா

  மணிரத்னம் - இளையராஜா கூட்டணி கடைசியாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம் தளபதி. இந்த படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கைய்யத்தட்டு பாடல் அதிமான முறை கேட்கப்பட்ட பாடல் என்று பிபிசியால் தகவல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  கமலுக்காக...

  கமலுக்காக...

  ஹே ராம் படத்திற்கு ஒரு வீடியோவின் இதழ் அசைவை வைத்து இசை அமைத்து கொடுத்து அசத்தியிருக்கிறார் இளையராஜா. ஏற்கனவே வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து இசை அமைத்து வீடியோ காட்சிகள் எடுத்துவிட்டனர். அதன் பின்னரே இளையராஜாவிடம் வந்தனர்.

  மீண்டும் இசை அமைத்து காட்சி படுத்த வேண்டும் என்றால் செலவாகும் என்று கருதி. ஏற்கனவே நடிகர்கள் இதழ் அசைத்த காட்சிகளை வைத்து அதற்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா. இதை இளையராஜாவின் ஆயிரமாவது படத்தின் விழாவின் போது மேடையில் அமிதாப்பச்சன் கூறி இருந்தார்.

  ஆல்பங்கள்...

  ஆல்பங்கள்...

  Nothing But Wind, How To Name It, போன்ற ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார் இளையராஜா. இந்த இசைகளை தனது வீடு என்ற திரைப்படத்தில் பயன்படுத்தி இருந்தார் பழம்பெரும் இயக்குனர் பாலு மகேந்திரா. இந்த இரண்டு இசை ஆல்பங்களுமே பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் இசை கலைஞரால் பெரிதும் பாராட்டப்பட்ட இசை ஆகும்.

  கரகாட்டக்காரன்

  கரகாட்டக்காரன்

  உலகத்தரத்திலான ஒரு கிராமத்து இசையை கொடுத்திருந்தார் கரகாட்டக்காரன் என்ற படத்தில். இந்த திரைப்படம் தமிழகம் எங்கும் பல திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது.

  இந்த படத்தில் இடம்பெற்ற மாரியம்மா என்ற பாடலை கேட்டு திரையரங்கிலேயே ஒரு பெண்ணுக்கு சாமி வந்தது என்ற தகவல் வெகுகாலமாக கூறப்பட்டு வருகிறது.

  ரஜினி - அமிதாப்பச்சன்

  ரஜினி - அமிதாப்பச்சன்

  இந்தியாவின் இரண்டு பெரும் சுப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி மற்றும் அமிதாப்பச்சனை பாட வைத்த பெருமை இளையராஜாவையே சேரும். ரஜினி பாடிய பாடலை காட்டிலும், பா படத்தில் அமிதாப்பச்சன் பாடிய பாடல் நன்றாகவே அமைந்திருந்தது.

  சிம்பனி!

  சிம்பனி!

  இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா ஆஸ்கர் அல்லது கிராமி விருதுகள் வென்றதில்லை தான். ஆனாலும், இசைக்கான அவரது அர்பணிப்பு மற்றும் வேலைப்பாடுகள் மிகுந்த மதிப்பிற்குரியவை. லண்டனின் ராயல் பில்ஹார்மோனிக் சொஸைட்டிக்காக இளையராஜா அமைத்த சிம்பனியானது ஆஸ்கர், கிராமிக்கு நிகரானது.

  ராயல் பில்ஹார்மோனிக் சொஸைட்டிக்காக சிம்பனி எழுதிய முதல் ஆசிய இசை அமைப்பாளர் இளையராஜா என்பது பெருமைக்குரியது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Birthday Special: Lesser Known Facts and Biography about Isaignani Ilayaraja

  Birthday Special: Lesser Known Facts and Biography about Isaignani Ilayaraja, who is Legendary Musician of Indian Film Industry for more than four decades
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more