பசங்க கைவிட்டாலும், பொண்ணுங்க கைவிடல - மகராசன் பொழைச்சுக் கிட்டான்!

By: Staff
Subscribe to Boldsky

இந்த வருஷம் "வேலன்டைன் டே" யாருக்கு அதிக பிரபோசல் வரும் என்பதை கண்ணை மூடிக் கொண்டு கூறலாம். அது நிச்சயம் கடந்த சில தினங்களாக உலக அளவில் (அழகில்) வைரலாகி கொண்டிருக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியாராக தான் இருக்க முடியும்.

After Priya Varrier, It's Time To Know About Roshan Abdul Rahoof!

இரண்டே தினத்தில் இருபது இலட்சம் பேர் ப்ரியா வாரியாரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இது ஒருவகையில் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களில் சாதனை என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

சரி! இப்படியாக ஒருபுறம் ப்ரியாவையும் அவரது முக பாவனையையும் குறித்து இலட்சக்கணக்கான ஆண்கள் பேசி புகழ்ந்து கொண்டிருக்கும் போது. அட என்னடா.. நம்ம பயலும் ஒருத்தன் எதிர்ல நின்னு லுக்கு விட்டானே.. அவன ஒரு பொண்ணு கூடவா கண்டுக்கல என்று ட்விட்டர் பக்கமாக சென்று நோட்டம் விட்டால்... ரோஷன் எனும் அந்த எதிர் லுக்வுட்ட ஆணுக்கும் பிரபோசல்கள் குவிந்தவண்ணமாக தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்!

யார் இவர்!

இவர் பெயர் ரோஷன் அப்துல் ரஹூப். இவருக்கு வயது 19 தான். மாடலிங் மற்றும் நடிப்பை தனது துறையாக தேர்ந்தெடுத்து வேலை செய்து வருகிறார். ப்ரியாவுடன் ஒரு அதார் லவ் படத்தில் ரோஷனும் இணைந்து நடித்து வருகிறார்.

சிங்கிள்!

சிங்கிள்!

இப்போதைக்கு ரோஷன் தனது ஸ்டேட்டஸை சிங்கிள் என்று தான் வைத்துள்ளார். ஆகையால், இந்த வருட வேலன்டைன் தினத்தன்று ரோஷனுக்கு நிறையவ பிரபோசல்கள் குவிய வாய்ப்புகள் உள்ளன. இவர் தன்னை ஒரு நடிகர், பர்ஃபாமர், டான்சர் மற்றும் கனவு காண்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த கண்ணசைவு ஒன்று போதுமே என்று ட்விட்டரில் பெண்கள் கதறிக் கொண்டிருக்கு நம்மாளுக்கு நடனம், ஆக்டிங் என்று பல விஷயங்கள் தெரியும் போல.

புது கிரஷ்!

கிரேசி சிம் என்ற பெண் ஒருவர், பெண்களுக்கு புதிய கிரஷ் ஒருவர் கிடைத்துவிட்டார். எல்லா பெயரையும் ப்ரியாவுக்கு கொடுக்காதீர்கள். ரோஷனுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இவருக்கும் இடமுன்னு!

பானு சௌத்திரி எனும் பெண், நம் அனைவர் மனதிலும் ப்ரியா இருக்கிறார். ஆனால், ரோஷனும் சேர்ந்து தான் இதை அருமையாக்கியுள்ளார். எனவே, ரோஷனை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம். என்ன இருந்தாலும், ப்ரியா... என் இதயத்தை களவாடிவிட்டார் என்று கூறியுள்ளார்.

முட்டாளாகிவிடாதீர்கள்!

ஏ.கே. எனும் நபர், அன்பிற்குரிய பெண்களே... ப்ரியா வாரியார் மட்டுமல்ல, எதிரே இருக்கும் ரோஷனும் மிகவும் கியூட்டாக தான் இருக்கிறார். ப்ரியாவை மட்டுமே புகழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது போல தனது கருத்தை ரோஷனின் பெயரை ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டுள்ளார் இவர்.

பிரமிக்க வைக்கிறது!

பாவனா எனும் பெண், ப்ரியா வாரியாரின் நடிப்பு சூப்பர் தான். ஆனாலும், ரோஷனின் முக பாவனை தான் பிரம்மிக்க வைக்கிறது என்று கூறி ரோஷனை குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

யாருச்சும் சொல்லுங்களேன்!

இப்சிதா எனும் பெண், யாரேனும் இந்த வீடியோவில் இருக்கும் ஆண் யார் என்று கூறுங்களேன்... அவன் ரியாக்ட் செய்யும் விதம் என்று கூறி காதல் ஸ்மைலிகளை தூவிவிட்டுள்ளார். மேலும், ட்வீட் செய்த கொஞ்ச நேரத்திலேயே அந்த நபர் ரோஷன் என்று தெரிந்ததும். அதையும், ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

செக்ஸி!

பார்கவி எனும் பெண், ப்ரியா வாரியார் மிகவும் கியூட் தான். ஆனால், ரோஷன் அப்துல் ரஹூப் தான் மிகவும் செக்ஸியாக இருக்கிறார் என்று ரோஷன் மீதான தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மேஜிக்!

அபிராமி ரமேஷ் எனும் பெண்... ரோஷன் குறித்த தனது கருத்தை ஒரு உரையாடல் போல ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆண்: அந்த மேஜிக்கல் மூன்று வார்த்தை வார்த்தையை கூறு... (ஐ லவ் யூ என்ற தொனியில்)

பெண்: ரோஷன் அப்துல் ரஹூப் (காதலுடன்)

அட! இது வேற லெவல் தான் நிஜமாவே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

After Priya Varrier, It's Time To Know About Roshan Abdul Rahoof!

After Priya Varrier, It's Time To Know About Roshan Abdul Rahoof!
Subscribe Newsletter