ஜீரோ ரன்களில் அவுட்டானால் ஏன் டக் அவுட் என்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மூன்று விக்கெட்டுகள் அல்லது கோல், சிக்ஸ், ஃபோர் அடித்தால் ஹாட்ரிக் என கூறும் வழக்கம் இன்று இருக்கிறது. இதன் விளக்கம் என்ன? எதனால் இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது என்பது குறித்து நாம் தமிழ் போல்ட் ஸ்கை தளத்தில் இதற்கு முன்னர் கண்டுள்ளோம்.

இதே போல வித்தியாசமாக அழைக்கப்படும் மற்றுமொரு வழக்கம் தான் டக் அவுட். ஒரு வீரர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தால் அவரை டக் அவுட் என்கிறோம். இது ஏன்? எதனால்? எப்போதிருந்து? யாரிடம் இருந்து துவங்கியது என்பது குறித்த சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு குறித்து தான் இன்று இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1866

1866

இந்த டக் அவுட் வரலாறு பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் 1866ம் ஆண்டுக்கு பின்னோக்கி செல் வேண்டும். ஒரு போட்டியில் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ஏழாம் எட்வார்ட் அரசர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி பவிலியன் திரும்பினார். இதை அன்றைய நாளேடு ஒன்று வாத்து முட்டையை போல ராயல் வீரர் பவிலியன் திரும்பினார் என தலைப்பு எழுதி செய்தி வெளியிட்டிருந்தனர்.

சுருக்கம்!

சுருக்கம்!

வாத்து முட்டை என குறிப்பிடப்பட்டிருந்த இந்த வாக்கியம் பின்னாளில் வாத்து , டக் என குறிப்பிட துவங்கினார்கள். வாத்து முட்டையின் வடிவம் பூஜ்ஜியம் போல இருக்கும் என்பதால் அந்த ஆசிரியர் அப்படி குறிப்பிட்டு எழுதிருந்தார். இந்த உவமை அனைவரையும் ஈர்த்த காரணத்தால், அதன் பிறகு ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகும் வீரர்களை டக் அவுட் என அழைக்க துவங்கினார்கள்.

முதல் டக்!

முதல் டக்!

முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் டக் அவுட் பதிவானது என கூறப்படுகிறது. 1877ல் நடந்த போட்டியில் ஏறத்தாழ நூறு ஆண்டகளுக்கும் முன்னர் டெஸ்ட் போட்டியின் முதல் டக் அவுட் பதிவாகியிருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடந்துள்ளது. இதில், நெட் கிரகோரி ஜேம்ஸ் என்பவரின் பந்துவீச்சில் அன்ரூவிடம் கேட்சாகி டக் அவுட்டானார்.

கோல்டன் டக்!

கோல்டன் டக்!

ஒரு வீரர் தனது முதல் பந்திலேயே டக் அவுட்டானார் என்றால், அந்த விக்கெட்டை கோல்டன் டக் அவுட் என்றும் குறிப்பிடுகிறார்கள். கோல்டன் டக் போலவே சில்வர் மற்றும் பிரான்ஸ் டக் அவுட்டும் இருக்கிறது. முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் டக் அவுட்டானால் அவர்களை சில்வர் டக் மற்றும் பிரான்ஸ் டக் என அழைக்கிறார்கள்.

கிங் பேர்!

கிங் பேர்!

முதல் பந்திலேயே ஆட்டமிழந்தால் கோல்டன் டக் என குறிப்பிடுவதை போலவே, ஒரே வீரர் இறங்கு இன்னிங்க்ஸ்களிலும் டக் அவுட்டானால் அவரை கிங்க்ஸ் பேர் (Kings Pair) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு சாதாரண உவமையாக கையாளப்பட்ட வாக்கிய தொடர் பின்னாளில் கிரிக்கெட் உலகில் எந்நாளும் பயன்பாட்டில் நிலைத்திருக்கும் சொல்லாக மாறிவிட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது,

இனி, டக் அவுட்டில் சாதனை செய்த விளையாட்டு வீரர்கள் குறித்து காணலாம்...

முக்கியமான டக்!

முக்கியமான டக்!

டான் பிராட்மேனின் ஒரு டக் அவுட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. தி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டான் பிராட்மேன் விளையாடிக் கொண்டிருந்த கடைசி டெஸ்ட் மேட்ச் ஆகும். இந்த போட்டியில் டான் பிராட்மேன் எரிக் என்பவரின் பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து டக் அவுட்டானார்.

சரிவு!

சரிவு!

இந்த போட்டியில் இவர் டக் அவுட்டாகாமல் இருந்திருந்தார். இவரது சராசரி 101.39 தாக இருந்திருக்கும். டக் அவுட்டான காரணத்தினால் 99.94க்கு சரிந்தது. மேலும், ஆஸ்திரேலியா இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் போட்டியை வென்றதால் இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பையும் இழந்தார் டான் பிராட்மேன்.

வாய்ப்புகள்!

வாய்ப்புகள்!

ஒருவேளை இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட் செய்து 104 ரன்கள் எடுத்திருந்தாலோ, அல்லது நான்கு ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தாலோ டான் பிராட்மேன் தனது சராசரியை நூறாக வைத்திருக்க வாய்ப்புகள் இருந்தது. ஆனால், இது நடக்காமலே போய்விட்டது.

அஜித் அகார்க்கர்!

அஜித் அகார்க்கர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரர் அஜித் அகார்க்கர் தொடர்ந்து ஐந்து இன்னிங்க்ஸ்களில் டக் அவுட்டானார். இதனால், இவரை பாம்பே டக் என அழைத்தனர்.

டை மேட்ச்!

டை மேட்ச்!

1986ல் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வந்திருந்தது ஆஸ்திரேலியா அணி. இதில் ஒரு போட்டியின் போது இரண்டாவது இன்னிங்க்ஸில் மணிந்தர் சிங் நான்கு பந்துகள் பிடித்து கிரேக் பந்தில் டக் அவுட்டானார். இதன் காரணத்தால் டெஸ்ட் போட்டி வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு போட்டி வெற்றி, தோல்வி இன்றி சமநிலையில் டையாக முடிந்தது.

50+ டக் அவுட்

50+ டக் அவுட்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பெருமையை, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை வீரர் முத்தையா முரளிதரன் தன்வசம் வைத்துள்ளார். இவர் 59 முறை டக் அவுட்டாகியுள்ளார். இவரை தொடர்ந்து வால்ஸ் மற்றும் சனத் ஜெயசூரியா முறையே 54 மற்றும் 53 முறை டக் அவுட்டாகி இந்த மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் ஜெயசூரியா தான் பேட்ஸ்மேன் பட்டயலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

மலிங்கா

மலிங்கா

முதல் பந்திலேயே ஆட்டமிழந்த கோல்டன் டக் வரிசையில்.. அதிக கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனயை யார்க்கர் கிங் மலிங்கா தன்வசம் வைத்துள்ளார். இவர் 13 முறை கோல்டன் டக் முறையில் ஆட்டமிலந்துள்ளார். இவரை தொடர்ந்து சாயித் அப்ரிதி மற்றும் ஸ்ரீநாத் முறைய 12 மற்றும் 11 முறை கோல்டன் டக் அவுட்டாகி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்.

சதவிகிதம்!

சதவிகிதம்!

தாங்கள் பேட்டிங் செய்த போட்டிகளில் வைத்து சதவிகிதத்தின் அடிப்படையில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் என்ற சாதனை பட்டியல் ஒன்று இருக்கிறது. இதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆலன் டொனால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். குறைந்தபட்சம் முப்பது போட்டிகளிலாவது பேட்டிங் செய்த நபர்களை மட்டுமே இந்த பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஆலன் டொனால்ட் - 40 இன்னிங்க்ஸ் 12 டக்

ஷாபுல் இஸ்லாம் - 31 இன்னிங்க்ஸ் 09 டக்

முபரிவா - 32 இன்னிங்க்ஸ் 09 டக்

லக்மல் - 35 இன்னிங்க்ஸ் 09 டக்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why We Calls a Batsman Duck Out, When He lost His Wicket Scoring Zero Run?

Why We Calls a Batsman Duck Out, When He lost His Wicket Scoring Zero?