சொட்டை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம்! வினோத புரளியால் தொடர் கொலைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த அரை நூற்றாண்டில் உலகம் மளமளவென்று தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் எங்கோ சென்று விட்டது. பல கிரகங்கள் கண்டுபிடித்தோம், பல ராக்கெட்டுகள் ஏவினோம் என்பதை எண்ணி மகிழ்வதா? இல்லை, இன்றளவும் ஏதேதோ மூட நம்பிக்கைகள் பின்பற்றி மக்களை ஏமாற்றி, கொலை செய்து வருவதை நினைத்து வருந்துவதா?

இன்னுமா இப்படி என வியப்பவர்களுக்கு... இதோ! ஆப்ரிக்காவில் ஒரு பகுதியில் வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் தேடி தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்ரிக்கா நாடு!

ஆப்ரிக்கா நாடு!

ஆப்ரிக்கா கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு தான் மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் மத்தியில் போதிய கல்வி அறிவு இல்லை. மேலும், இவர்கள் பலத்த மூல நம்பிக்கை மத்தியில் வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலாங்கே மாவட்டம்!

மிலாங்கே மாவட்டம்!

இது போன்ற நிலையில், சமீபத்தில் இந்நாட்டில் இருக்கும் மிலாங்கே எனும் மாவட்டத்தில் யாரோ வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் கிடைக்கும் என புரளியை கொளுத்து போட்டுள்ளனர்.

கொலைகள்!

கொலைகள்!

மூட நம்பிக்கை நிறைந்த அந்நாட்டு மக்கள் இதை நம்பி, வழுக்கை தலையுடன் சுற்றிவந்த ஆண்களை தேடி பிடித்து கொலை செய்து தங்கம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மொசாம்பிக் போலீஸ்!

மொசாம்பிக் போலீஸ்!

இந்த வினோத காரணத்தால் தொடரும் கொலை வழக்குகளால், மொசாம்பிக் போலீஸார் வழுக்கை தலையுடன் நடமாடி வரும் ஆண்கள் சற்று பத்திரமாக இருந்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு பேர் கைது!

இரண்டு பேர் கைது!

மொசாம்பிக் மாவட்டத்தில் சந்தேகிக்கும் வகையில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஏதோ சூனியக் காரர்கள் பரப்பிய புரளியாக இருக்க வேண்டும் என சந்தேகங்கள் கிளம்பி வருகிறது.

மற்றுமொரு தொடர் கொலை...

மற்றுமொரு தொடர் கொலை...

இதே போல சரும வெளிறியதன்மையும் கொண்டுள்ள மக்கள் (Albinism People) கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் இருந்தவர்கள் கடந்த சில வருடங்களாக கொலை செய்து வந்த வழக்கும் சூனியக் காரர்களின் வேலை தான் என பரவலாக கூறப்பட்டுவந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Gang From Mozambique Kills Bald Head Men for Gold!

A Gang From Mozambique Kills Bald Head Men for Gold!
Story first published: Thursday, June 8, 2017, 15:30 [IST]