நாட்டில் என்ன நடந்தால் என்ன? தானுண்டு, தன் வேலையுண்டு என வாழும் ஒரே ஜீவராசி!

Posted By:
Subscribe to Boldsky

ரூ.500, ரூ.1000 தடை செய்தால், என்ன? தண்ணீர் வறட்சி உண்டானால் என்ன? விவசாயிகள் போராடினால் என்ன? ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் லொட்டு, லொசுக்கு என இந்தியாவில் என்ன பிரச்சனை தலைவிரித்தாடுகிறது எனிலும், ஒரே ஒரு துறையும், அந்த துறை சார்ந்த நபர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருப்பா அவங்க?

யாருப்பா அவங்க?

சாமியார்கள்! ஆம், பணம் தடை உத்தரவு வந்ததும், ஏழை, எளிய மக்களில் இருந்து, செல்வந்தர் வரை அனைவரும் திக்குமுக்காடி போயினர். ஆனால், இவர்கள்? தண்ணீர் வறட்சி, விவசாயம் பாதிப்படைதல், கலாச்சார விளையாட்டுக்கு தடை என ஏதேனும் ஒன்றால் கூட இவர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்றால் இல்லவே இல்லை என்பது தான் பதில்.

செல்ஃபி புள்ள!

செல்ஃபி புள்ள!

ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் மாபெரும் பிரபலம் அடைந்தவர். ஆனால், இன்று தனது சிஷ்ய கோடிகளுடன் சேர்ந்து கட்டியணைத்து செல்ஃபி எடுத்து அப்லோட் செய்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் பணம், பொன், பெண் எதற்கும் பஞ்சமில்லை.

முல்லை!

முல்லை!

புரியவில்லையா, இவருக்கு காடும், காடு சார்ந்த பகுதிகளும் என்றால் அவ்வளவு பிரியம். எங்கே வளைத்துப் போட்ட இடத்தை அரசு பிடுங்கிக் கொள்ளுமோ என சிலை வைத்து தப்பித்துக் கொண்டார். யானைகளுக்கு கரண்ட் ஷாக் கொடுப்பதில் வல்லவர். ஹாலிவுட் டூ கோலிவுட் என உலக தரத்தில் என்ஜாய் செய்கிறார் இவர்.

சிட்டுகுருவி லேகியம் முதல் 5G வரை!

சிட்டுகுருவி லேகியம் முதல் 5G வரை!

இன்னும் சில ஆண்டுகளில் ஃபேஸ்புக் மார்க், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் எல்லாம் இவருக்கு பின்னால் தான் நிற்க வேண்டும் போல. இவர் துவங்காத, கால் வைக்காத தொழிலே இல்லை என்னும் அளவிற்கு இன்று மகரிஷி பிராடக்ட் மிகவும் பிரபலம்.

இவரது அடுத்த வெளியீடு விண்டோஸ் அல்லது ஆண்ட்ராயிடை குறி வைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

எப்படி இவங்க மட்டும்?

எப்படி இவங்க மட்டும்?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... என்ற பாடலுக்கு ஏற்ப... மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால் இவர்களை திருத்த முடியாது. நூறு, ஐநூறு என ஏழைகள் துவங்கி, இலட்சங்கள், கோடிகள் என பிரபலங்கள், செல்வந்தர்கள் வரை இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான், இன்று இவர்கள் நாட்டு நடப்பு, அரசியல் பிரச்சனைகள், இயற்கை வறட்சிகள் என எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் சுகபோக வாழ்க்கை வாழ காரணமாக இருக்கிறது.

(ஏ)மாற்றம்!

(ஏ)மாற்றம்!

மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தை அரசாங்கம் மக்களுக்கு செலவிடுகிறது. மக்களிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் இவர்கள் வாங்கும் பணம் எங்கே செல்கிறது? இதனால் மக்கள் எந்த அளவில் பயனடைகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் என்ன? கோடிகளை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, சில்லறை காசுகளை விட்டெறிந்து உதவி செய்வது நியாயம் ஆகிவிடுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Whatever Up and Down happens in India, This Industry Never Fade Up!

Whatever Up and Down happens in India, This Industry Never Fade Up!
Story first published: Monday, April 3, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter