இந்த படத்துல நீங்க பார்த்த முதல் உருவம் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!

Posted By:
Subscribe to Boldsky

இது ஒரு சைக்காலஜிக்கல் கேம் என்று கூறலாம். பல படங்களில் இருந்து, ஒன்றை நாம் தேர்வு செய்வதை வைத்து, அதன்பால் நமது குணாதிசயங்கள், பண்பு, அச்சங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என கூறப்படுவது தான் இந்த கேம்.

இதை குருட்டாம் போக்கு என கூறிவிட முடியாது. பெரும்பாலும் இது நம்முடன் கனக்ட் செய்துக் கொள்ளும்படியான ரிசல்ட் தான் கொடுக்கும். இதற்கு காரணம், நாம் நமக்கு பிடிக்காத ஒன்றை தேர்வு செய்யமாட்டோம்.

What Did You See First? Find Out What Your Hidden Fears Are.

நமக்கு ஒரு பொருள் பிடித்திருக்கிறது என்றால் அது கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் நமது குணாதிசயங்களுடன் ரிலேட் ஆகியிருக்க வேண்டும் என்பதே இது போன்ற சைக்காலஜிக்கல் விளையாட்டுகளின் மூலக்கூறு.

சரி! இந்த படத்தில் நீங்கள் முதலில் கண்ட பொருள் என்ன? அதன்பால் உங்களின் பெரிய அச்சம் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு பெண் குழந்தை!

சிறு பெண் குழந்தை!

நீங்கள் உங்கள் குழந்தை பருவத்தில் நடந்த சில ஆழமான உணர்வுகளை புதைத்து வைத்துள்ளீர்கள். அது உங்களுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி, பிரச்சனைகள், குழந்தை பருவத்தில் நடந்த எந்த விஷயமாகவும் இருக்கலாம். நீங்கள் அன்னையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

அதே போல உங்களை தொந்தரவு செய்யும் அந்த குழந்தை பருவ உணர்வுகளை நீங்கள் வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். நடந்ததையே நினைத்து, நினைத்து மீத நாட்களையும் இழந்து விடாதீர்கள்.

பட்டாம்பூச்சி!

பட்டாம்பூச்சி!

உங்களுக்கு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை வலுவாக இருக்கும். என்ன பிரச்சனைகள் வந்தாலும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை நீங்கள் இழக்க மாட்டீர்கள். இதனால், உங்கள் வாழ்வில் புதிய கட்டங்கள் உருவாவது, உங்கள் மகிழ்ச்சி போன்றவை நீங்கள் நினைத்தது போல அமையும்.

ஸ்ட்ராபெர்ரி!

ஸ்ட்ராபெர்ரி!

நீங்கள் ஒரு உண்மையான இதயத்தை தேடும் நபர் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலானோர் ஸ்ட்ராபெர்ரி என்பது வீனஸ் கடவுளிடம் இருந்து வெளிப்படும் கண்ணீர் என கருதுகிறார்கள்.

இது நீங்களாக காயப்பட்டுக் கொண்டு, மேலும் தொடர்ந்து உங்களை சுற்றி இருக்கும் நபர்களை நம்பிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது.

மண்டை ஓடு!

மண்டை ஓடு!

நீங்கள் மற்றவரின் பார்வையில் இருந்து ஒரு பொருளை, ஒரு விஷயத்தை வேறு வித்தியாசமான பார்வையில் பார்க்கும் நபராக இருப்பீர்கள். மண்டை ஓடு தான் இந்த படத்தில் இருக்கும் பெரிய பொருள்.

இது படத்தின் ஒரு பகுதியாக அமையவில்லை. ஒருவேளை நீங்கள் மண்டை ஓட்டை கவனித்திருந்தால், உங்களுக்கு மிகவும் விரும்பும் நபர்கள் இறந்துவிடுவார்களோ என்ற அச்ச உணர்வு இருக்கும். அவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

ஒருவரின் மரணத்தை ஏற்றுக் கொள்வது என்பது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.

மரங்கள்!

மரங்கள்!

நீங்கள் இயற்கையுடன் அதிக இணைப்பு கொண்டிருக்கும் நபராக இருப்பீர்கள். உணர்வு ரீதியான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக் காணும் நபராக இருப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Did You See First? Find Out What Your Hidden Fears Are.

What Did You See First? Find Out What Your Hidden Fears Are.