உலகின் விசித்திரமான தம்பதிகள் டாப்: 10!

Posted By:
Subscribe to Boldsky

ஓர் பெண் தன்னை விட உயரம் குறைந்த ஆணை காதலிப்பதோ, ஓர் ஆண் தன்னை விட பத்து வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதோ எல்லாம் தான் நாம் விசித்திரமாக காண்கிறோம். ஆனால், இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் ஜோடிகளை பற்றி அறிந்தால் உங்களுக்கு இதெல்லாம் அட அஅவ்வளவு தானா என்பது போல தான் இருக்கும்.

இவர்களை விசித்திரமானவர்கள் என குறிப்பிடுவதால் இவர்கள் கேளிக்கையானவர்கள் என கருதிவிட வேண்டாம். இவர்களில் சிலர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். இவர்களது காதலும் உன்னதமானது தான். ஏன், மற்றவர் காதலை காட்டிலும் ஒருபடி மேல் என்றும் கூறலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுல்தான் - மெர்வ் திபோ

சுல்தான் - மெர்வ் திபோ

சுல்தான் உலகின் உயர்ந்த மனிதன் என்ற கின்னஸ் சாதனை செய்துள்ளவர். இவரது உயரம் 251 செண்டிமீட்டர். இவரது உயரத்திற்கு பெண் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது.கடைசியாக சுல்தானின் நண்பரின் தோழியான திபோ இவர் மீது காதல் கொண்டு திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். திபோ சுல்தானை விட மிகவும் உயரம் குறைவு மற்றும் கொஞ்சம் உடல் பருமனாக இருப்பவர். கண்களுக்கு தான் இவர்கள் விசித்திரமான தோற்றமளிக்கும் ஜோடியே தவிர அகத்திற்கு அல்ல.

அஹ்மது முகமது தோரே - சாபியா அப்துல்லா

அஹ்மது முகமது தோரே - சாபியா அப்துல்லா

ஆப்ரிக்காவின் விசித்திரமான ஜோடியாக இவர்கள் காணப்படுகிறார்கள். இளம் வயது பெண் கிட்டத்தட்ட தனக்கு தாத்தா வயதிலான நபரை திருமணம் செய்துக் கொண்டார். இது போன்ற திருமணம் அங்கே பணம், பொருள் கொடுத்து பெண் வாங்கி செய்யும் வழக்கத்தில் இருக்கிறது.

ஜியோலிசன் - எவம்

ஜியோலிசன் - எவம்

இவர்கள் இருவரும் நின்றபடி முத்தமிட்டு கொள்வதே பெரிய சவால் தான். பிரேசிலை சேர்ந்த ஜைஜாண்டிக் மனிதர் ஜியோலிசன். இவர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டிருந்தவர். தனது இளம் வயதில் சமூகத்தில் ஒன்றி பழகவே தயங்கியவர். எவம் மக்களுள் சாதாரண ஒரு பெண். திடீரென ஏற்பட்ட நட்பு காதலானது, இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

மரியா, பவுல் மற்றும் பீட்டர்

மரியா, பவுல் மற்றும் பீட்டர்

மரியா பவுல் மற்றும் பீட்டர் இருவரையும் திருமணம் செய்துக் கொண்டு தனது வாழ்க்கையை பகிர்ந்து வருகிறார். இது போன்ற நிகழ்வை படங்களில் கூட நாம் பெரிதாக கண்டதில்லை. இவர் வீட்டருகில் இருப்பவர்களுக்கு இந்த தம்பதியின் தாம்பத்திய வாழ்க்கை பற்றி தான் சந்தேகம் எழுகிரதாம். ஒருவேளை இதுதான் முக்கோண காதல் கதையா என சிலர் இவர்களை கேலி செய்வதம் உண்டாம்.

எமி வொல்ப் - 1001 நாட்ச்

எமி வொல்ப் - 1001 நாட்ச்

எமிக்கு தனது வாகனத்தை வேறு யாரவது ஓட்டுவதை கண்டால் எரிச்சல் வருமாம். எமி தனது வாகனத்தை காதலிக்கிறார். இதனுடனே தனது வாழ்நாள் கழிக்க விரும்புகிறார் எமி.

சானலே - ஹெலன்

சானலே - ஹெலன்

தாத்தா வயதிலான ஆணை பேத்தி வயதிலான பெண் திருமணம் செய்துக் கொண்டதே ஆச்சரியம் என்றால், எட்டு வயது ஆணை 61 வயது பெண் திருமணம் செய்துள்ளார். இருப்பதிலேயே மிகவும் விசித்திரமான ஜோடி இவர்கள் தான்.

லியு - லியு

லியு - லியு

தன்னை தானே விரும்புதல் அவசியம் என்பார்கள். இது தன்னம்பிக்கை வளர்க்கும் என கூறுவார். இதோ லியு தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டுள்ளார். 43 வயதான சீன ஆண் லியு. ஒரு கார்ட் போர்டில் தன்னை தானே ஒரு பிரதி எடுத்து அதனுடன் சீன முறைப்படி திருமணம் செய்துள்ளார் லியு. இத ஓரினச்சேர்க்கை என்றும் குறிப்பிட முடியாது. இதை எப்படி சீன அரசு ஏற்றக் கொண்டது என்றும் தெரியவில்லை. இது என்ன மாதிரியான கலாச்சாரம்?

மாங்கலி - ஷிரூ

மாங்கலி - ஷிரூ

இளம் வயதான மாங்கலி'யை திருமணம் செய்துக் கொள்ளும் ஆண் சீக்கிரமே இறந்துவிடுவான் என்ற ஜோதிட கணிப்பு கூறுவதால் தெரு நாயுடன் முதல் திருமணம் செய்து வைத்து, பிறகு அடுத்த திருமணம் செய்துள்ளனர். இதற்காக அந்த தெருநாயை குளிப்பாட்டி அலங்காரம் செய்துள்ளனர்.

சடேரா - கெல்வின்

சடேரா - கெல்வின்

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். வாழ்க்கையில் ஒருமுறை லாட்டரி அடித்தாலே பெரிய விஷயம். இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான லாட்டரி ஒரே மாதத்தில் மூன்று முறை வென்று ஓஹோவென பெரியாளாகிவிட்டனர். இதற்கு பெயர் தான் அதிர்ஷ்டம்.

சாதில் டெபி - அன் கம்சுக்

சாதில் டெபி - அன் கம்சுக்

இந்த காதல் கதை கொஞ்சம் சோகமானது. எதிர்பாராத விதமாக திருமண விழாவின் முன் காதலி இறந்திட, தனது காதலியின் இறந்து உடலுடன் திருமணம் செய்துக் கொண்டார் இந்த காதலன். இந்த நிகழ்வை கண்ட அனைவரும் கண்ணீர் வற்றிப்போகும் வரை அழுது தீர்த்தனர். அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த திருமண நிகழ்வு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weirdest Couples You Won’t Believe Actually Exist!

Weirdest Couples You Won’t Believe Actually Exist!
Story first published: Saturday, November 11, 2017, 10:56 [IST]