உலகை மாற்றியமைத்த அசாத்திய மனிதர்கள் - டாப் 20!

Posted By:
Subscribe to Boldsky

உலகம் தானாக பெரும் புரட்சியோ, கண்டுபிடிப்புகளோ, மாற்றத்தையோ அடைந்திடவில்லை, குரங்கில் இருந்து ஜனித்தவன் தான் மனிதன் என ஒருவன் கூறினான். முதலில் அவனை இந்த உலகம் எள்ளிநகையாடியது. பின்னாட்களில் தான் அது எவ்வளவு பெரிய உண்மை, அதன் பின்னணியில் எவ்வளவு பெரிய பரிணாமம் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தோம்.

இது போல, பல அறிவாளிகளை, புரட்சியாளர்களை முதல் நாளில் அவமானப்படுத்தி, பின்னாளில் போற்றி துதிப் பாடியுள்ளது நமது உலகம். விஞ்ஞானம், அறிவியல், மனிதவியல், இயற்கையியல், மனிதாபிமானம், அரசியல் என பல துறை சார்ந்து பலர் பெரும் புரட்சியும், மாற்றமும் ஏற்படுத்தியதன் வெளிபாடுதான் இன்றைய உலகின் தோற்றம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#20 சார்லஸ் டார்வின்

#20 சார்லஸ் டார்வின்

சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பது தான் இவரது முழுப்பெயர். இவர் ஒரு இயற்கையியல் ஆராய்ச்சியாளர். இவர் எடுத்துரைத்த படிவளர்ச்சி கொள்கை, அறிவியல் கொள்கையின் அடிப்படையிலேயே பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இவர் எச்.எம்.எஸ். பீகிள் எனும் கப்பல் மூலமாக உலகளாவிய பயணம் மேற்கொண்டு பல உயிரினங்களை கண்டுபிடித்தார். மனித இனத்திற்கும், குரங்கு இனத்திற்கும் தொடர்பு இருக்கிறது என இவர் முதலில் கூறியபோது சிரித்தனர். ஆனால், அது பின்னாளில் பெரும் மதிப்பை பெற்றது.

உலகில் முதல் முறையாக, மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் என கூறியவர் சார்லஸ் டார்வின்.

Image Credits: wikimedia commons

#19 டிம் பேர்னேர்ஸ்-லீ

#19 டிம் பேர்னேர்ஸ்-லீ

வேர்ல்ட் வைட் வெப் எனப்படும் உலகளாவிய வலைதளத்தை கண்டுபிடித்தவர் தான் இந்த டிம் பேர்னேர்ஸ்-லீ. இவர் இங்கிலாந்தை சேர்ந்த கணினி பொறியாளர். டெலிகிராப் வெளியிட்ட உலகின் வாழும் சிறந்த டாப் 100 அறிவாளிகளில் இவர் ஆல்பர்ட் ஹாப்மனுடன் முதல் இடத்தை பகிர்ந்துக் கொண்டார்.

W3C மற்றும் உலகளாவிய வலைதளத்தின் நிறுவனராக இருக்கும் இவர், எம்.ஐ.டிகணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத்திறன் எனப்படும் எ.ஐ-யின் மூத்த ஆய்வக ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.

#18 நிக்கோலஸ் வின்டன்

#18 நிக்கோலஸ் வின்டன்

நிக்கோலஸ் வின்டன் ஒரு மனிதாபிமான / மனிதநேய ஆர்வலர். இவர் இரண்டாம் உலக போரின் போது யூத இனத்தை சேர்ந்த 669 சிறுவர்களை காபப்ற்றினார். இவர் பராகுவேவில் இருந்து எட்டு ரயில்களை ஏற்பாடு செய்து, மீட்ட சிறுவர்கள் அனைவரையும் பிரிட்டனுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். இவர் கடந்த 2015ம் ஆண்டில் தனது 106 அகவையில் காலமானார்,

ImageCredits:creativecommons/commons.wikimedia

#17 கௌதம புத்தர்

#17 கௌதம புத்தர்

சித்தார்த்த கௌதமர் என அழைக்கப்பட்ட கௌதம புத்தா ஒரு ஆன்மீக ஞானி. இவர் மூலமாக தான் பித்த மதம் உருவானது. ஆறாம் நூற்றாண்டில் ஓர் அரசராக பிறந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். தன்னை கண்டறிய ஆன்மீக பயணம் மேற்கொண்டு ஆசைகளை துறந்தவர். அறிவொளி கண்டுகொண்ட புத்தா, புத்த மத வழியாக உலகளாவிய பல இலட்ச மக்களுக்கு அதை பயிற்றுவித்தார்.

#16 ரோசா பார்க்ஸ்

#16 ரோசா பார்க்ஸ்

ஆப்ரிக்க அமெரிக்க குடியுரிமைக்காக போராடிய முதல் பெண். இவரை நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரஸால் அழைக்கப்பட்டார். 1955 டிசம்பர் முதல் நாள், ஒரு வெள்ளைக்கார ஆளுக்கு பேருந்தில் அமர இருக்கை தரவில்லை என்ற காரணத்தால் இவரை கைது செய்தனர். இதன் பிறகே, இனப் பாகுபாடு எதிர்த்து இயக்கம் துவக்கி போராடினார்.

Image Credits: wikimedia commons

#15 ஹென்றி டியூனாண்ட்

#15 ஹென்றி டியூனாண்ட்

செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியவர் ஹென்றி டியூனாண்ட். 1863ல் நடந்த போரில் காயமடைந்த வீரர்கள், மக்களுக்கு உதவி செய்ய இவர் இந்த சங்கத்தை துவக்கினார். 1901ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்றார்.

Image Credits:creativecommons

#14 சிமோன் பொலிவார்

#14 சிமோன் பொலிவார்

சிமோன் ஜோஸ் ஆன்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொஸ் இ பிளாங்கோ என்பது முழுப்பெயர். சுருக்கமாக சிமோன் பொலிவார் என அழைக்கிறார்கள். வெனிசுலாவின் இராணுவ தலைவர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தவர். ஹிஸ்பானிக் அமெரிக்காவின் விடுதலை வீரரும் ஆவார். ஹிஸ்பானிக் முடியாட்சியை வென்று, குடியரசு ஹிஸ்பானிக் நாடுகளிலிருந்து பெரிய கொலம்பியாவை நிறுவியதில் பெரும் பங்கு வகிப்பவர்.

Image Credits: wikimedia commons

#13 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

#13 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இயற்பியல் அறிஞர். ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் கருதப்படும் பெரும் அறிஞர். சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Image Credits: wikimedia commons

#12 லியோனார்டோ டா வின்சி

#12 லியோனார்டோ டா வின்சி

ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

Image Credits: wikimedia commons

#11 கிறிஸ்டோபர் கொலம்பஸ்

#11 கிறிஸ்டோபர் கொலம்பஸ்

இத்தாலிய கடல் பயணியும், வணிகரும், காலனித்துவவாதியும் என பன்முகம் கொண்டவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை ஸ்பெயின் நாட்டுக் கொடியுடன் வந்தடைந்த முதல் ஐரோப்பியர் என அறியப்படுகிறார். ஆனால், இவருக்கு முன்னரே, ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வேறொரு நபர் அமெரிக்காவில் கால் பதித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் விவாத பொருளாக நீடித்து வருகிறது.

Image Credits: wikimedia commons

#10 மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

#10 மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.

#09 பில் கேட்ஸ்

#09 பில் கேட்ஸ்

கணினி உலகில் பெரும் புரட்சி நிகழ்ச்சியவர். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவிய நிருவினர்களில் ஒருவர். பல வருடங்களாக உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார். 1999-லேயே நூறு பில்லியன் சொத்து மதிப்பு கொண்டிருந்தவர்.

#08 வில்லியம் ஷேக்ஸ்பியர்

#08 வில்லியம் ஷேக்ஸ்பியர்

உலக புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர். இங்கிலாந்தின் தேசிய கவிஞாரகவும் இவர் கருதப்படுகிறார்.

Image Credits: wikimedia commons

#07 சிக்மண்ட் பிராய்ட்

#07 சிக்மண்ட் பிராய்ட்

சிக்மண்ட் பிராய்ட் ஒரு உளநோய் மருத்துவர். Unconscious Mind எனும் உள்மனம் பற்றி இவர் எடுத்துரைத்த கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு பொறிமுறை, பேசி மனநோயை குணப்படுத்தும் சிகிச்சை செயல்முறைகளை உருவாக்கியவர் இவர்.

Image Credits: wikimedia commons

#06 ஆஸ்கர் ஷிண்ட்லர்

#06 ஆஸ்கர் ஷிண்ட்லர்

இவர் ஒரு ஜெர்மனியர். தொழிலதிபர், நாசி கட்சி உறுப்பினர், உளவாளியாக இவரை அறிய முடிகிறது. யூதர் இனப்படுகொலையில் இருந்து 1200 பேரை காப்பாற்றியதற்காக இவரை வரலாற்றில் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

Image Credits: wikimedia commons

#05 அன்னை தெரசா

#05 அன்னை தெரசா

அல்போனியா நாட்டை பிறந்த நாடாக கொண்டிருந்த போதிலும், இந்திய குடியிரிமை பெற்ற ரோமன் கத்தோலிக் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் கொல்கத்தாவில் பல ஏழை மக்களுக்கு, நோய்வாய்பட்ட, உதவியற்றவர்களுக்கு உதவு செய்து வந்தார். இவர்க்கு 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 1980ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றவர்.

#04 ஆபிரகாம் லிங்கன்

#04 ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்காவின் 16 குடியரசு தலைவர். அடிமைத்தன முறையை எதிர்த்து குரல் எழுப்பிய முனைந்த முன்னோடிகளில் ஒருவர். தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்

#03 ஸ்டீபன் ஹாக்கிங்

#03 ஸ்டீபன் ஹாக்கிங்

அண்டவியல் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) கருங்குழி (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகள் என பல முக்கிய அறிவியல் இயல்புகள் குறித்து கூறியவர். கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்ட போது, இதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன, அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்று ஸ்டீபன் ஹாக்கிங்-ன் ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

#02 டேன்க் மேன் (Tank Man)

#02 டேன்க் மேன் (Tank Man)

டேன்க் மேன் என குறிப்பிடப்படும் இந்த நபரை பற்றி யாருக்கும் தெரியாது. இவர் ஒரு எதிர்ப்பாளர் / போராளி என கூறப்படுகிறது. டேன்க் மேன் எனப்படுவது இவரது நிக்நேம் ஆகும். ஜூன் 1989ல் சீன இராணுவ பீரங்கிகள் அணிவகுத்து வந்த போது, ஒரு போராட்டத்தின் போது இவர் அந்த பீரங்கிகளை வழிமறித்து நின்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இது ஒரு சக்திவாய்ந்த புகைப்படமாக அப்போது உலகளவில் பரவியது. அகிம்சை மற்றும் தைரியத்தை எடுத்திருக்கும் இந்த பெயர் அறியப்படாத நபரை டேன்க் மேன் என அழைத்து வருகிறார்கள்.

Image Credits: flickr / creativecommons

#01 டயானா!

#01 டயானா!

மக்களின் இளவரசி என்ற பெயரை பெற்றவர். பல இலட்சக்கணக்கான மக்களின் பேரன்பை பெற்றவர். தனது 36வது வயதில் கார் விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் உலகம் முழுவதும் இருந்த பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவினார். மனித நேயத்தையும், அன்பையும் பரப்பியவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 20: Incredible People Who Changed The World!

Top 20: Incredible People Who Changed The World!
Subscribe Newsletter