50 வயது குட்டி குழந்தை. வெறும் 0.7 மீ உயரமே உள்ள அதிசய இந்தியன்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் தொலைவில் இருந்து கண்டால் பசோரி லாலை சிறு சுட்டி குழந்தை என்று தான் எண்ணுவர். ஏன் சிலருக்கு ஓரிரு அடி விலகி நின்று பார்த்தாலே பசோரி லால் அப்படி தான் தெரிவார். காரணம் அவரது உயரம் வெறும் 29 அங்குலம் தான்.

ஆனால், அவரது வயதோ ஏறத்தாழ உயரத்தை காட்டிலும் இருமடங்கு அதிகம். ஆம், பசோரி லாலின் வயது ஐம்பது. ஆனால் ஐந்து வயதிலேயே அவரது உடல் வளர்ச்சி நின்று விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபலம்!

பிரபலம்!

தனது இந்த உயர குறைப்பட்டால் இன்று அவரது ஏரியாவில் பசோரி லால் ஒரு பிரபலமாகவே திகழ்கிறார். நாம் முன்னர் கூறியது போல இவரை குழந்தை என எண்ணி பிறகு உண்மை அறிந்து வியந்தவர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.

ஏளனம், கேலி, கிண்டல்!

ஏளனம், கேலி, கிண்டல்!

நாம் எல்லா நேரத்திலும் பிரபலமாக இருந்தது இல்லை. எனது குறைவான உயரம் கண்டு இளம் வயதில் பலர் என்னை ஏளனமாகவும், கேலி, கிண்டலும் செய்துள்ளனர்.

ஆனால், அவற்றை எல்லாம் கடந்து வந்து எனது குடும்பத்தின் ஹீரோவாக இருக்கிறேன் என பெருமிதமாக கூறுகிறார் பசோரி லால்.

பெயர் தெரியா நிலை...

பெயர் தெரியா நிலை...

எந்த ஒரு குறைபாடாக இருப்பினும் அதற்கு மருத்துவத்தில் ஒரு பெயர் இருக்கும். ஆனால், திடீரென ஐந்து வயதில் வளர்ச்சி நின்று போன பசோரி லாலின் இந்த மருத்துவ நிலைக்கு பெயரே இல்லை என கூறப்படுகிறது.

அண்ணன் - அண்ணி!

அண்ணன் - அண்ணி!

பசோரி லால் மத்திய பிரதேசத்தில் தனது அண்ணன் கோபி லால் மற்றும் அண்ணி சத்யா பாயுடன் அவர்களது வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது உறவினர்கள் ஐந்து வயது வரை பசோரி லால் மற்ற குழந்தைகளை போல நன்கு வளர்ந்து வந்தார். ஆனால், திடீரென என்ன ஆனது என தெரியவில்லை வளர்ச்சி நின்றுவிட்டது என்கின்றனர்.

குடும்ப சூழல்!

குடும்ப சூழல்!

குடும்ப பொருளாதார சூழல் காரணமாக பசோரி லாலை அந்த வயதில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ, மருத்துவம் செய்யவோ முடியாத சூழலில் பசோரி லால் குடும்பம் இருந்துள்ளது.

ஏலியன்!

ஏலியன்!

பசோரி லாலை சிறுவயதில் இவரது நண்பர்கள், சுற்றார் மிகவும் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இவரை ஏலியன் என கூறி தான் அழைப்பார்கள் என பசோரி லால் தெரிவித்துள்ளார்.

கோபி பெருமை!

கோபி பெருமை!

பசோரி லாலின் அண்ணன் கோபி லால், தனது தம்பியை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறார். தன் குடும்பத்தில் பசோரி இருப்பது தனது பெருமையான உணர்ச்சியை அளிக்கிறது என பாசத்துடன் கூறுகிறார்.

பல்வேறு கிராம மக்கள்...

பல்வேறு கிராம மக்கள்...

அருகே இருக்கும் பல கிராமங்களில் இருந்து மக்கள் பசோரி லாலை காண தனது வீட்டிற்கு வந்து செல்வார்கள். பலதரப்பட்ட மக்கள் தன் தம்பியை விரும்பி வந்து பார்த்து செல்வது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கோபி லால் கூறியுள்ளார்.

பசோரி லால் ஹேப்பி!

பசோரி லால் ஹேப்பி!

உண்மையில் பசோரி லால் தனது உயரத்தை கண்டு என்றுமே வருத்தம் அடைந்தது இல்லை. என் உயரம் பெரிய குறையாக தெரியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் தான் சில பாரபட்சம் இருந்தன. ஆனால், இப்போது அப்படி இல்லை என்கிறார்.

விஸ்கி!

விஸ்கி!

தினமும் இரவு படுக்க செல்லும் முன் ஒரு கிளாஸ் விஸ்கி குடித்து விட்டு தான் செல்கிறார் குட்டி சுட்டி பசோரி லால். மேலும், திருமணம் செய்துக் கொள்ளாத பசோரி, அதில் தனக்கு விருப்பமே வரவில்லை என்கிறார்.

சொந்த காலில்...

சொந்த காலில்...

உயரம் குறைவு எனிலும், ஒரு இயல்பு மனிதனை போல தான் வாழ்ந்து வருகிறார் பசோரி. தினமும் தானே உழைத்து சம்பாதித்து சாப்பிட்டு வருகிறார்.

இவரிடம் நிறைய நேர்மறை எண்ணங்கள் இருக்கின்றன. அதன் வெளிபாடு தான் இவரை சுற்றி நிறைய உறவுகள் நிறைந்திருப்பதன் காரணம்.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

50 YO Little Boy Who is Just 29 Inches - A Miracle Indian!

Know About 50 YO Little Boy Who is Just 29 Inches - A Miracle Indian!