சூதால் சொத்தை இழந்து, நடன மாதுவாக திரையில் தோன்றி எம்.ஜி.ஆரை மணந்தவரா இவர்?

Posted By:
Subscribe to Boldsky

எம்.ஜி.ஆர்-ன் மனைவியும், தென்னிந்திய திரையுலக நடிகையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜானகி பிறந்த நாள் இன்று!

இவர் கேரளத்தை சேர்ந்தவர். இவரது முழு பெயர் வைக்கம் நாராயணி ஜானகி ஆகும். வைக்கம் என்ற ஊரில் பிறந்ததாலும், நாயர் குலத்தை சேர்ந்த நாராயணம்மாவிற்கு பிறந்ததாலும், இவரை வைக்கம் நாராயணி ஜானகி என அழைத்து வந்தனர்.

சூதாட்டம் காரணமாக இவரது குடும்பம் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது என கூறப்படுகிறது. இதன் பின்னர் இவர் தனது தாயாருடன் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் சிறுசிறு வேடங்கள், நடன மாது, மற்றும் முக்கிய நடிகையாக என மொத்தம் 26 படங்களில் நடித்துள்ளார்.

இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 23!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டுபிடிப்புகள்!

கண்டுபிடிப்புகள்!

1846 - பிரெஞ்சு வானியல் ஆய்வாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரிட்டன் வானியல் ஆய்வாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோர் நெப்டியூன் கோளை கண்டுபிடித்தனர்.

1884 - ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான (கால்குலேட்டர்) காப்புரிமம் பெற்றார்.

2002 - மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.

வரலாறு!

வரலாறு!

1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் "சவுதி அரேபியா" என்ற பெயரில் இணைந்து புதியதாக உருவானது.

1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்து வெளிவந்தனர்.

அசம்பாவிதம்!

அசம்பாவிதம்!

1641 - ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுடன் சென்ற "தி மேர்ச்சண்ட் ராயல்" என்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதல் முறையாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதி வெடித்தது.

2004 - எயிட்டியில் சூறாவளி வெள்ளத்தின் காரணமாக 1,070 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போர்!

போர்!

1529 - ஒட்டோமான் பேரரசர் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தார்.

1965 - ஐ.நாவின் தலையீட்டுக்கு பிறகு, இந்திய-பாகிஸ்தான் போர்: 1965 முடிவுக்கு வந்தது.

பிறப்பு!

பிறப்பு!

எம்.ஜி.ஆர்-ன் மனைவியும், தென்னிந்திய திரையுலக நடிகையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜானகி பிறந்த நாள் இன்று!

இவர் கேரளத்தை சேர்ந்தவர். இவரது முழு பெயர் வைக்கம் நாராயணி ஜானகி ஆகும். வைக்கம் என்ற ஊரில் பிறந்ததாலும், நாயர் குலத்தை சேர்ந்த நாராயணம்மாவிற்கு பிறந்ததாலும், இவரை வைக்கம் நாராயணி ஜானகி என அழைத்து வந்தனர்.

Image Credit: Youtube

இறப்பு!

இறப்பு!

தென்னிந்தியாவின் முதன்மை நாயகியாக திகழ்ந்து வந்த சில்க் ஸ்மிதா என அழைக்கப்படும் விஜயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டு இறந்த தினம் இன்று.

சில்க் ஸ்மிதா பற்றிய பலரும் அறியாத உண்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Day That Year: September 23!

This Day That Year: September 23!
Story first published: Saturday, September 23, 2017, 13:58 [IST]