For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பல்லோவில் இந்திய அரசியலின் மிகப்பெரிய மர்மம் விதைந்த தினம் இன்று!

இந்த நாள், அந்த வருடம் - செப்டம்பர் 22, வரலாற்று நிகழ்வுகள்!

|

சாதாரண காய்ச்சல், சளி, மூச்சி திணறல் என்ற பெயரில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள். இரண்டு மாதங்களுக்கும் மேலாக 74 நாட்கள் இந்தியாவின் தலைப்பு செய்தியாக மாறியது அப்பல்லோ.

தினம் ஒரு அறிக்கை, புதுப்புது மருத்துவ வார்த்தைகளில் ஏதோ பிரச்சனைகள், எழுந்துவிட்டார், பிசியோதெரபி அளிக்கப்படுகிறது, அவர் இன்று சாப்பாடு சாப்பிட்டார், நாளை மறுதினம் வீடுதிரும்பி விடுவார் என அவரை தவிர, வெறும் செய்திகள் மட்டுமே வெளிவந்தன.

This Day That Year - September 22!

எம்பாமிங் என்ற சொல்லை டிசம்பர் ஐந்தாம் நாளுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்தது இல்லை. செப்டம்பர் 22 சென்னை அப்பல்லோவில் ஒரு மர்மம் விதைக்கப்பட்ட தினம் இன்று...

இந்த நாள், அந்த வருடம் : வரலாற்றில் செப்டம்பர் 22!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விடுதலை!

விடுதலை!

1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாக உதயமான தினம் செப்டம்பர் 22.

1908 - உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை பெற்றது.

1960 - பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை பெற்றது.

அரசு!

அரசு!

1896 - பிரிட்டன் அரச குடும்பத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பெருமையை அடைந்தார் விக்டோரியா மகாராணி.

1970 - மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகிய தினம் இன்று.

அசம்பாவிதங்கள்!

அசம்பாவிதங்கள்!

1692 - அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜெர்மனியினரால் கொல்லப்பட்ட தினம் இன்று. இவர்கள் யாவரும் முதலில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1993 - ஜார்ஜியாவின் பயணிகள் விமானம் சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதில், 108 பேர் கொல்லப்பட்டனர்.

1995 - யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய கொலைவெறி தாக்குதல் குண்டுவீச்சு சம்பவத்தில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1997 - அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

போர்!

போர்!

1944 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர்: ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் காஷ்மீர் தொடர்பாக உண்டான போர் முடிவுக்கு வந்த தினம் இன்று.

1980 - ஈரான் - ஈராக் போரில், ஈரானை ஈராக் நாட்டை முற்றுகையிட்டது.

பிறப்பு!

பிறப்பு!

1930 - தென்னிந்தியா சினிமாவின் பழம்பெரும் முன்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் பிறந்த தினம் இன்று. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மூன்றாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் இவர்.

1931 - தமிழ் மொழியின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் பிறந்த தினம் இன்று. இவரது இயற்பெயர் தியாகராஜன் ஆகும். ஆந்திராவை சேர்ந்த அசோகமித்திரன், தனது தந்தையின் மறைவிற்கு பிறகு 21 வயதில் சென்னை வந்தார். எளிமை மற்றும் நகைச்சுவை கலந்த இவரது தமிழ் நடை பெரிய அங்கீகாரம் பெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Day That Year - September 22!

This Day That Year - September 22!
Desktop Bottom Promotion