For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஏழையாக பிறந்து, எளிமையாக வாழ்ந்து, மக்களின் செல்வந்தனாக இறந்தவர்...

  |

  இந்தியாவின் ஊக்க சக்தி இளைஞர்கள், மாணவர்கள் என்பதை முன்னுறுத்தி, அவர்களுடன் அதிக நேரம் செலவழித்து, நிறைய நேர்மறை எண்ணங்களையும், கனவு காணும் ஆசையையும் ஊட்டி பல இளைஞர்கள் எழுச்சி மிகு செயல்களை செய்ய தூண்டுகோலாக இருந்தவர் அப்துல் கலாம்.

  ஏழையாக பிறந்து, எளிமையாக வாழ்ந்து, மக்கள் மனதில் என்றென்றும் செல்வந்தனாக வாழ்ந்து வரும் அப்துல் கலாம் அய்யா பிறந்த தினம் இன்று...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிறப்பு!

  பிறப்பு!

  மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா பிறந்த நாள் - 1931

  • இந்திய தலைவர்களில் மாணவர்களின் நட்பை, காதலை, மனதை ஈர்த்த ஒரே நபர் மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அவர்கள்.
  • 11வது குடியரசு தலைவாராக பணியாற்றிய இவர் இராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்தவர். நான் பிறந்த தேசத்திற்காக, எனக்கு படிப்பையும், அறிவையும் அளித்த தேசத்திற்காக மட்டுமே உழைப்பேன் என கடைசி வரை இந்திய வளர்ச்சிக்காக உழைத்த மாபெரும் நபர்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றியிருக்கிறார்.
  • 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.
  • கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
  • இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார்.
  இறப்பு!

  இறப்பு!

  சீரடி சாய் பாபா இறந்த தினம் - 1918

  • இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அகமது நகர் எனும் மாவட்டத்தில் சீரடியில் வாழ்ந்து வந்தார்.
  • இந்து மதத்தில் இவரை கடவுளின் உருவமாகவே பாவித்து வணங்கி வருகிறார்கள்.
  • இவர் சமாதியான இடம் சீரடியில் இருக்கிறது. அந்த இடம் இப்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தொழுது செல்லும் புனித இடமாக விளங்கி வருகிறது.
  • ஒருமுறை நீதிமன்றத்தில் இவரது வயதை கேட்க, இலட்சக்கணக்கான வருடங்கள் என கூறினாராம். இவரது பக்தர்கள் திரட்டிய தகவல்கள் படி இவரது பிறந்தநாள் செப்டம்பர் 28, 1838 என அறியப்படுகிறது.
  போர்!

  போர்!

  1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.

  1915 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.

  1917 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.

  1945 - இரண்டாம் உலகப் போர்: முன்னாள் பிரெஞ்சு முதல்வர் பியேர் லாவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  நிகழ்வுகள்!

  நிகழ்வுகள்!

  1878 - தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் (பல்பு) தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.

  1932 - டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.

  1951 - மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.

  1966 - ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

  1997 - நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.

  அசம்பாவிதங்கள்!

  அசம்பாவிதங்கள்!

  1970 - மெல்பேர்ன் நகரில் வெஸ்ட் கேட் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  1987 - பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தில் பெரும் புயல் கிளம்பியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  This Day That Year: October 15

  This Day That Year: October 15
  Story first published: Sunday, October 15, 2017, 10:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more