இவ்வுலகில் சாதாரண மக்கள் நெருங்க முடியாத அசாத்திய இடங்கள் - டாப் 10!

Posted By:
Subscribe to Boldsky

நம்மை வியப்பில் ஆழ்த்த இவ்வுலகில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் அனைத்தும் நாம் அறிந்ததில்லை. நமது பார்வையில் இருந்து பல நிகழ்வுகள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வீரியம் சாதாரணமானது அல்ல. கற்பனை செய்து பார்த்து முடியாத சோதனைகள் நடத்தி, அதன் தாக்கத்தால் சில இடங்கள் மக்கள் வாழ தகுயற்ற இடமாக மாறி உலகில் நிலைக் கொண்டுள்ளன.

சில வரலாற்று இரகசியங்கள் சிறிய அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இரகசிய சுரங்கங்கள், யாரும் அறியாத வால்டுகள் என இவ்வுலகில் சாதாரண மக்கள் நெருங்க முடியாத அசாத்திய இடங்கள் பலவன இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரகசிய ஆவணங்கள்!

இரகசிய ஆவணங்கள்!

வாட்டிகன் சிட்டியில் இருக்கும் கதோலிக் சர்ச்சில் போப் மற்றும் மதவாத குருக்கள் தங்குவதற்கு என தனி அறைகள் இருக்கிறது. அது மட்டுமின்றி, அங்கே சில இரகசிய அறைகளும் இருக்கிறது. வியக்க வைக்கும் மாளிகையில் பல முக்கியான ஆவணங்களை இரகசியமாக பாதுகாத்து வருகிறார்கள்.

அதை யாரும் பார்த்துவிட கூடாது என்பதில் சர்ச் நிர்வாகம் கவனமாக இருக்கிறது. வெகு சில அறிஞர்கள் மட்டுமே அந்த அறைக்குள் செல்ல அனுமதி பெற்றுள்ளனர்.

Image Credit:SAINTS123

வட செண்டினல் தீவு!

வட செண்டினல் தீவு!

இந்த தீவு இந்தியாவின் அந்தமான் தீவுகளில் அமைந்துள்ளது. உலகின் உண்மையான அழகு என போற்றப்படும் இந்த இடத்தில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வெளியுலகிடம் எந்த சந்தர்பத்திலும் இணையக் கூடாது என்ற கருத்துடையவர்கள்.

தாங்களாக அழைக்காமல் யார் வந்தாலும், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள் இங்கே சென்று இவர்களை துன்புறுத்த முயல்வது, இவர்களை கேலி பொருளாக காண்பதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதனால் வெளியுலக மக்கள் என்றாலே இவர்கள் வெறுப்படைகிறார்கள். எனவே, இந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image Credit: AANAVANDI

சர்ட்சே, ஐஸ்லாந்து!

சர்ட்சே, ஐஸ்லாந்து!

உலகின் மனம் கவர்ந்த தீவுகளில் மிகவும் இளம் தீவு என்ற பெயர் பெற்றுள்ளது சர்ட்சே. ஐஸ்லாந்தின் தெற்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கிறது சர்ட்சே தீவு. இந்த இடத்தில் ஒருமுறை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எரிமலை சிதறல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது என கூறப்படுகிறது. எனவே, அந்த நிகழ்வில் இருந்து இந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இங்கே, இப்போது புவியியல் வளர்ச்சி, மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Image Credit:IMAGGERS

விதை வங்கி!

விதை வங்கி!

ஸ்வால்பார்ட் குளோபல் சீட் வால்ட் என்பது உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் விதைகளை சேமித்து வைத்திருக்கும் விதை வங்கியாகும். இது நார்வே பகுதியில் இருக்கிறது. வடதுருவத்தில் இருந்து ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

ஒருவேளை, உலகில் ஏதானும் பகுதிகளில் இயற்கை சீரழிவு அல்லது விவசாய பஞ்சம் ஏற்படும் காலத்தில் இந்த விதை வங்கியில் இருந்து விதைகளை பெற்று பலனடடையாலம் என கூறப்பட்கிறது.

இப்போது ஒரு மில்லியன் விதைகள் இருக்கிறது. இந்த விதை வங்கியில் 4.5 மில்லியன் விதைகள் வரை சேமித்து வைக்க வசதிகள் இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது. எந்த நாட்டின் அதிபராக இருந்தாலும் கூட அனுமதி இன்றி இங்கே நுழைய முடியாது.

Image Credit:CROPTRUST

மெட்ரோ 2

மெட்ரோ 2

பண்டையக் காலத்தில் அரண்மனைகளில் இரகசிய சுரங்கங்கள் இருக்கும். இதன் மூலமாக தப்பித்து செல்லவும், பகல் வேளையில் முக்கியமான பொருட்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக எடுத்து செல்லும் இவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபோல ரஷ்யாவில் மெட்ரோ 2 என்ற இரகசிய நிலத்தடி சுறங்கும் இருக்கிறது. இது மாஸ்கோவில் இருக்கும் D-6 எனும் இரகசிய சுரங்கத்தை போன்றே இருக்கிறது. இது ஸ்டாலின் ஆட்சி காலத்தில் அரசாங்க ரீதியான முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

Image Credit:EARTHTRIPPER

கோகோ கோலா வால்ட்!

கோகோ கோலா வால்ட்!

இது ஒன்றும் உலகின் சுவாரஸ்யமான பகுதி அல்ல. ஆனால், பாதுகாப்புக்கு பெயர் போன பகுதி. அட்லாண்டாவில் இருக்கும் வேர்ல்ட் ஆப் கோகோ கோலா மியூசியத்தின் கீழ், ஆழமான பகுதியில் இது புதைக்கப்பட்டுள்ளது. இந்த வால்டில் கோகோ கோலா தனது ரெசிபி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Image Credit:COCACOLA COMPANY

பாம்புகள் தீவு!

பாம்புகள் தீவு!

பாம்புகள் தீவு என அழைக்கப்படும் இந்த இடம் பிரேசிலில் இருக்கிறது. இந்த தீவில் ஆயிரக்கணக்கான பாம்புகள் இருக்கிறது. இதில் பெரும்பாலான பாம்பு வகைகள் மிகவும் விஷத்தன்மையானவை.

கோல்டன் லான்செட் வைப்பர் எனப்படும் உலகின் கொடிய வகை பாம்பு இங்கே அதிகமாக இருக்கிறது. ஒரே கடியில் மனிதனின் உயிரை மிக விரைவில் கொல்லும் அளவிற்கு இதன் விஷத்திற்கு தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ ஐந்து மைல் சுற்றளவிற்கு இந்த பாம்புகள் இத்தீவில் படர்ந்திருக்கின்றன என கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணமாக, பிரேசில் அரசாங்கம் இந்த தீவிற்கு மனிதர்கள் செல்ல தடைவிதித்துள்ளது.

Image Credit:YOUTUBE

நார்த் பிரதர் தீவு!

நார்த் பிரதர் தீவு!

இந்த தீவு அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் இருக்கிறது. உலகின் மறைக்கப்பட்ட இடங்களில் இந்த நார்த் பிரதர் தீவுகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்த தீவில் முதலில் ஒரு மருத்துவமனை இருந்தது. இங்கே தான் முதல் முறை டைஃபாயிடு காய்ச்சல் பற்றி அறியப்பட்டது.

அதன் பிறகு தான் இந்த தீவு தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிட்டது. இப்போது இந்த தீவு பறவைகளின் சரணாலயமாக மாறிவிட்டது.

Image Credit:WIKIPEDIA

டூல்ஸ் பேஸ்!

டூல்ஸ் பேஸ்!

நியூ மெக்ஸிகோ பகுதியில் அமைந்திருக்கிறது இந்த டூல்ஸ் பேஸ். இது ஒரு சிறிய பகுதி இங்கே 2600 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். இந்த இடத்திற்கு வெளியுலக மக்கள் வருகை தருவது மிகவும் அரிய நிகழ்வாக இருக்கிறது. இங்கே மனித - விலங்கு கலப்பினம், மற்றும் மனித - ஏலியன் கலப்பினம் இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. இந்த இடத்திற்கு வர உண்மையில் மக்கள் அஞ்சுகிறார்கள் என கூறப்படுகிறது. இங்கே கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிற்கு சோதனைகள் நடந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

Image Credit:WIKIPEDIA

ஹியர் தீவு

ஹியர் தீவு

ஹியர் தீவு, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. எரிமலைகள் இருக்கும் இடத்தில் மக்கள் யாரும் வாழ விரும்புவதில்லை. அரசும் கூடவே. இந்த காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்ட உலகின் மற்றொரு இடம் தான் இந்த ஹியர் தீவு.

இங்கே ஆக்டிவாக இன்னும் இரண்டு எரிமலைகள் இருக்கின்றன. இவை உலகின் அதிக சேதம் ஏற்படுத்த கூறிய எரிமலைகள் என்று கூறப்படுகின்றன.

Image Credit:HEARDISLAND EXPEDITION

கின் ஷி ஹுவாங் சமாதி!

கின் ஷி ஹுவாங் சமாதி!

சீன பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் சமாதி. இவர் தான் கியூன் சாம்ராச்சியத்தை நிறுவியவர். இந்த சமாதியை அமைத்தவர் இதனுள் பல மர்மங்களை விட்டு சென்றுள்ளார். அரசர் மீண்டும் உயித்தெலுந்து வருவார் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் அவர்களிடம் இருந்துள்ளது. சீன அரசும் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியை மறைத்து வைத்துள்ளது.

Image Credit:WIKI

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Restricted Places Around The World!

The Most Restricted Places Around The World!
Subscribe Newsletter