உலகளவில் கொடுக்கப்பட்ட மிகக்கொடுரமான தண்டனைகள்!

Written By:
Subscribe to Boldsky

உப்பு தின்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் கட்டாயம் தண்டனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும். இன்றளவில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கொடுக்கப்பட்டு தான் வருகின்றன. இப்போது கொடுக்கப்படும் மரண தண்டனையே மிகக்கொடுமையான தண்டனையாக கருதப்பட்டு வருகின்ற நிலையில், அந்த காலத்தில் தவறு செய்யவே பிறர் அஞ்சும் விதமாக தண்டனைகள் கொடுக்கப்பட்டன. அவற்றை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆயிரம் வெட்டுக்கள்

1. ஆயிரம் வெட்டுக்கள்

சீனாவில் மிகக்கொடுரமான இந்த தண்டணை கொடுக்கப்பட்டது. இது 900 ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது 1905 ஆம் ஆண்டு இந்த தண்டணை தடை செய்யப்பட்டது. இந்த தண்டணையில் கூர்மையான கத்தியைக் கொண்டு, குற்றவாளியின் சதையை படிப்படியாக அகற்றிவிடுவார்கள்.

இந்த தண்டணையில் குற்றவாளியை, பொது இடத்தில் மரத்தில் கட்டி முதலில், மார்பகங்கள், கால் முட்டிகளை வெட்டுவார்கள். பின்னர் காது, மூக்கு என ஒவ்வொரு பாகமாக வெட்டி உடலை சிதைத்த பின்னர், இதயத்தை வெட்டுவார்கள்.

2. இரண்டாக வெட்டுதல்

2. இரண்டாக வெட்டுதல்

நம்ப முடியாத மிகக்கொடுமையான மரண தண்டணை. இது பெரும்பாலும் மத்திய கால ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. தண்டணையை நிறைவேற்றும் போது குற்றவாளியை தூக்கு மேடையில் தலைகீழாக கட்டி வைத்து உடலை இரண்டாக பிளக்கும் படி மேலிருந்து கீழாக வெட்டுவார்கள்.

Image Source

3. மேல் இருந்து வெட்டுதல்

3. மேல் இருந்து வெட்டுதல்

சீனாவில் கடைப்பிடிக்கப்பட்ட தண்டனை முறை ஒன்றில் குற்றவாளியை, முதல் தலையிலிருந்து பாதியாக வெட்டுவார்கள். இதனால் இரத்தம் மிக அதிகமாக வெளியேறுமாம்!

4. கொதிக்கும் தண்ணீரில் போடுதல்

4. கொதிக்கும் தண்ணீரில் போடுதல்

இந்த தண்டணையில் குற்றவாளியை நிர்வாணமாக்கி, கொதிக்கும் தண்ணீரில் ஒரு கயிற்றின் உதவியால் உள்ளே நிறுத்துவார்கள். இவ்வாறு பழங்காலத்தில் மரண தண்டனையை நிறைவேற்றினர். இதில் தண்ணீருக்கு பதிலாக, ஆசிட், எண்ணெய், ஒயின் போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

5. சக்கரங்கள் மூலம் கொல்லுதல்

5. சக்கரங்கள் மூலம் கொல்லுதல்

மரண தண்டணையில் இது சற்று கொடுரமானது தான். குற்றவாளியை தூக்கிலிடுவதற்கு முன்னால், சக்கரங்களால் கட்டி அவர்களது எலும்புகளை உடைத்தனர்.

6. மரக்கட்டையை நுழைத்தல்

6. மரக்கட்டையை நுழைத்தல்

இந்த தண்டணை இடைக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இதில் குற்றவாளியை ஒரு கூர்மையான மரக்கட்டையின் மீது அமர வைத்து அதனை சிறிது சிறிதாக வாய் வழியாக வெளியே கொண்டு வந்தனர். சில நேரங்களில் இந்த கட்டை ஒரு மனிதருக்கு இறங்குவதற்கு மூன்று நாட்களுக்கு மேல் கூட ஆகும்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Cruel Execution Methods

The Most Cruel Execution Methods
Story first published: Monday, August 14, 2017, 13:39 [IST]
Subscribe Newsletter