முழுக்க, முழுக்க பீர் பாட்டில்களால் கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோவில்!

Posted By: Staff
Subscribe to Boldsky

புத்தர் என்றாலே முற்றும் துறந்தவர், ஆசைகள் இல்லாதவர் என அறிவோம். ஆனால், தாய்லாந்தில் ஒரு புத்தர் கோவில் வினோதமாக பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

அங்கே வாழும் லோக்கல் மக்கள் இது புத்த மதத்தை பின்பற்றுபவர்களை மனவருத்தம் அடைய செய்யும் என்று தான் எண்ணினர். ஆனால், கட்டிடம் முழுக்க கட்டி முடிக்கப்பட்ட பிறகு அவர்கள் கண்டது வேறு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
80-களில்...

80-களில்...

இப்படி ஒரு கோயிலை கட்ட வேண்டும் என்பது இப்போது தோன்றிய ஐடியா இல்லை. 80-களின் மத்தியில் அப்போது வாழ்ந்த துறவிகள் இப்படி ஒரு பாட்டில்கள் கொண்ட கோவிலை கட்ட தீர்மானம் செய்துள்ளனர். அதன் பிறகு மக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட காலி பாட்டில்கள் கொண்டு இந்த புதிய கோவிலை கட்டி முடித்துள்ளனர்.

மில்லியன் கணக்கில்...

மில்லியன் கணக்கில்...

துறவிகள் பாட்டில்கள் நன்கொடையாக வாங்க ஆரம்பித்த பிறகு, அவர்கள் எண்ணியதை காட்டிலும் அதிக பாட்டில்கள் கிடைத்தன. எனவே, அதன் பிறகு, ஒவ்வொரு வடிவ பாட்டில்களை கொண்டு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியை, படிகளை, கூரையை, நடக்கும் இடங்களை கட்டலாம் என பிரித்தனர். அதன் ரிசல்ட்டாக தான் இந்த கோவில் மிக அழகான தோற்றம் கொண்டுள்ளது.

முழுக்க, முழுக்க...

முழுக்க, முழுக்க...

இந்த கோவில் முழுக்க முழுக்க பீர் பாட்டில்கள் கொண்டே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எப்படி சிறப்பாக, அழகாக கட்ட முடியும் என யோசித்து, வியக்கும்படியான கட்டிடமாக முடித்துள்ளனர். கழிவறை முதல் பிணங்களை எரிக்கும் இடம் வரை முழுக்க பீர் பாட்டில்கள் கொண்டே கட்டியுள்ளனர்.

புத்தர் சிலைகள்!

புத்தர் சிலைகள்!

இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது புத்தர் சிலைகள் ஆகும். பாட்டிலை பயன்படும் வகையில் இப்படி ஒரு ஐடியா கொண்டு, இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இவர்கள் கலைநயத்துடன் கோவிலை கட்டி முடித்துள்ளனர்.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What? This Beautiful Temple Is Built With Just Beer Bottles!

What? This Beautiful Temple Is Built With Just Beer Bottles!
Story first published: Wednesday, July 12, 2017, 17:42 [IST]