நவராத்திரி கொலுவை சிறப்பாக கொண்டாட சில யோசனைகள்!

Written By:
Subscribe to Boldsky

அம்பிகையின் அருளை பெற நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த வருடன் நவராத்திரி விழா செம்டப்பர் 21 வியாழக்கிழமை முதல் செப் 29 வெள்ளிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நிகழ்வானது, நமது வீட்டிற்கு அக்கம்பக்கத்தினரை நமது வீட்டிற்கு அழைப்பதற்கும், நாம் அவர்களது வீட்டிற்கு சென்று நட்பு பாராட்டிக்கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது.

அதோடு மட்டுமின்றி நமக்கும் பிறருக்கும் தேவியின் அருள் கிடைக்கவும் இது உதவியாக உள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்ட நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட, சில ஆலோசனைகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால், தெய்வத்தின் அருளுடன் சேர்த்து, நவகிரகங்களின் அனுகிரகமும் கிடைக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

கொலுவில் வைத்திருக்கும், பழைய கொலு பொம்மைகளின் மாலைகள், வளையல்கள் மீது பளபளப்பான ஸ்டிக்கர் பொட்டுகளை வையுங்கள். இவ்வாறு செய்வதால் லைட் வெளிச்சத்தில் பொம்மைகள் புதுப்பொலிவுடன் மின்னும்.

டிப்ஸ்#3

டிப்ஸ்#3

கொலுப்படிக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் சிறிய மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்தால், மிக அழகாகவும், கோவில் போன்றும் காட்சியளிக்கும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

கடந்த வருடம் வைத்த மரத்தால் ஆன கொலு பொம்மைகளில் அழுக்கு, எண்ணெய் பசைகள் போன்று ஏதாவது படிந்திருந்தால், சிறிய துணியில் மண்ணெய்யை ஊற்றி துடைத்தால் அழுக்குகள் போய்விடும். பின்னர் சுத்தமான துணியை கொண்டு துடைத்து வைத்துவிட்டால், பளபளப்பாக இருக்கும்.

Image Courtesy

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

கொலுவில் பொம்மைகளை அடுக்கி வைக்கும்போது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி என்ற வரிசைப்படி வைப்பது சிறப்பை தரும்.

Image Courtesy

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

கொலு அலங்காரம் அருகில் நவராத்திரி கலசத் தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீ சக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என அம்பிகையைப் பற்றிய விஷயங்கள் எழுதி வைக்கலாம்.

Image Courtesy

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

சிறிய கொலு பொம்மைகளின் மூலை முடுக்களில் எல்லாம் சுத்தம் செய்ய, காது குடையும் பட்ஸ்களை பயன்படுத்தலாம். இதனால் பொம்மைகளை புதிது போல ஆக்கலாம்.

Image Courtesy

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் வீட்டில் எந்த நேரமும் தெய்வ சம்பந்தப்பட்ட பாடல்களை மட்டுமே ஒலிக்க விடுங்கள். மற்றபடி வீட்டில் கெட்ட எண்ணங்கள், அழுகை போன்ற விஷயங்களை கொண்டு வர வேண்டாம்.

Image Courtesy

டிப்ஸ் #9

டிப்ஸ் #9

கொலு பார்க்க வருபவர்களுக்கு, புத்தகங்கள், பேனா போன்ற பொருட்களை பரிசாக தரலாம். இது அவர்களது அறிவை வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.

Image Courtesy

டிப்ஸ் #10

டிப்ஸ் #10

கொலுவின் போது வெறும் பக்திப் பாடல்கள், கர்நாடகக் கீர்த்தனைகளை மட்டுமே பாடாமல் லலிதா சகஸ்ரநாமம், திரிசதி தேவி பாகவதம், சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பாராயணம் செய்தால், இல்லத்தில் துர்சக்திகள் விலகும். தாம்பத்யம் சிறக்கும். பகை, வறுமை விலகும்.

Image Courtesy

டிப்ஸ் #11

டிப்ஸ் #11

நம்மை கொலுவிற்கு அழைத்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது, நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய பொம்மையை ஆவது பரிசாக வாங்கி சென்று கொடுக்கலாம். இதனால் அவர்களது மனமும் மகிழ்ச்சியடையும், நமக்கும் அம்பிகையின் அருள் கிடைக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Smart tips for navarathri golu

Smart tips for navarathri golu
Story first published: Wednesday, September 13, 2017, 12:14 [IST]
Subscribe Newsletter