For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொடக்கு எடுப்பது சரியா? தவறா? இதனால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்ன?

இங்கு சொடக்கு எடுப்பதால் உங்கள் உடலில் என்னென்ன ஏற்படும் என்பது பற்றிய அறிவியல் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

|

ஒவ்வொரு முறையும் சொடக்கு எடுத்தால் ஏன் சத்தம் வருகிறது என உங்களுக்கு தெரியுமா? சொடக்கு எடுப்பது சிலர் தவறு என கூறுவார்கள் அது ஏன்? இது நிஜமாகவே உடல் நலத்திற்கு அபாயமானதா? இதனால் மூட்டு பிரச்சனைகள் ஏற்படுமா?

சொடக்கு எடுப்பது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது என பார்க்கலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட்டுறைப்பாய திரவம்!

மூட்டுறைப்பாய திரவம்!

மூட்டுறைப்பாய திரவம் (synovial fluid) இடத்தில் இருக்கும் குழியில் கேஸ் நிறைவதால் தான் சொடக்கு எடுக்கும் போது சப்தம் ஏற்படுகிறது. இந்த மூட்டுறைப்பாய திரவம் தான் மூட்டுகள் உராய்வு இல்லாமல் இயங்க உதவுகிறது.

ஆராய்ச்சியாளர்கள்!

ஆராய்ச்சியாளர்கள்!

ஒரு ஆராய்ச்சி குழு, எம்.ஆர்.ஐ மூலமாக ஒரு நபர்விரல்களை இழுக்கும் போதும், சொடக்கு எடுக்கும் போதும் என்னென்ன நடக்கிறது என ரெகார்ட் செய்ய ஆரம்பித்தனர்.

ஆய்வு!

ஆய்வு!

"Pull My Finger" என்ற பெயரில் கேர்க் எனும் முதன்மை ஆய்வாளர் இந்த ஆய்வை தொடர்ந்தார். விரல்களை இழுக்கும் போது மூட்டுறைப்பாய திரவம் பகுதியில் இருக்கும் குழி போன்ற இடத்தில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் தாக்கம் தான் நாம் சொடக்கு எடக்கும் போது கேட்கும் சப்தம்.

மூட நம்பிக்கை!

மூட நம்பிக்கை!

பொத்தாம்பொதுவாக சொடக்கு எடுப்பது தவறு, இது உடல் நலத்திற்கு அபாயம் விளைவிக்கும் என கூறுவதை நாமே கேட்டிருப்போம்.

வட அமெரிக்க ஆய்வு!

வட அமெரிக்க ஆய்வு!

வட அமெரிக்காவில் ரேடியோலாஜி துறை சேர்ந்தவர்கள் அல்ட்ராசவுண்ட் மூலம் நாற்பது பேரை வைத்து நடத்திய ஆய்வில், யாருக்கும் சொடக்கு எடுப்பதால் கைகளுக்கு பக்கவிளைவுகள் அல்லது தீய தாக்கம் உண்டாவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இலகுவான உணர்வு!

இலகுவான உணர்வு!

ஆய்வில் கலந்து கொண்டவர்கள் என்று மட்டுமில்லாமல், பொதுவாகவே பலரும், சொடக்கு எடுப்பதால் இலகுவாக உணர்கிறோம் என்று தான் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scientists Have Discovered What Happens When You Crack Your Knuckles

Scientists Have Discovered What Happens When You Crack Your Knuckles
Story first published: Friday, January 20, 2017, 10:09 [IST]
Desktop Bottom Promotion