ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்பவர்கள், இதையும் தெரிஞ்சுக்கிட்டு பேசுனா கொஞ்சம் நல்லா இருக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

ஏறுதழுவுதல் எனும் இயற்பெயர் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக இளைய தலைமுறை ஆண்கள் சமூக தளங்கள் மூலமாக பெரும் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

சென்ற வாரம் மெரீனாவில் பெரும் கூட்டமாக திரண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, மதுரை, கோவை போன்ற இடங்களிலும் ஆதரவு கூட்டங்கள் தொடரும் என இளைஞர்கள் அறிவிப்புகள் பதிவு செய்தவண்ணம் இருக்கின்றனர்.

மிருக வதை என கூறி தடை செய்யப்பட்ட ஏறுதழுவுதல் விளையாட்டின் உண்மை விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாடிவாசல்!

வாடிவாசல்!

ஏறுதழுவுதல் காளைகளை வாடிவாசல் வழியாக மட்டும் தான் காலத்தினுள் அனுப்ப வேண்டும் / அனுப்பப்படும்!

திமில்!

திமில்!

வீரர்கள் காளையின் திமிலில் மட்டுமே தொங்க வேண்டும். ஒரே சமயத்தில் இருவர் காளையின் திமிலை பிடித்து தொங்க கூடாது.

எல்லைக் கோடு!

எல்லைக் கோடு!

காளையின் திமிலை பிடித்து தொங்கியப்படி வரையறுக்கப்பட்ட எல்லை கோடு வரை செல்ல வேண்டும். இந்த தூரம் ஏறத்தாழ ஐம்பது மீட்டர் வரை இருக்கும்.

காளை வெற்றி!

காளை வெற்றி!

வீரர்களை காளை தூக்கி எறிந்தாலோ, யாராலும் காளையை பிடிக்க முடியாமல் போனாலோ அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வீரர் வெற்றி!

வீரர் வெற்றி!

களத்தில் ஓடும் காளையின் திமிலை பிடித்து குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் வீரர் வெற்றியாளர் என அறிவிக்கட்டப்படுவார்கள்.

விதிகள்!

விதிகள்!

  • திமிலை ஒருவருக்கு மேல் ஒரே நேரத்தில் பிடித்து தொங்க கூடாது.
  • திமிலை தவிர காளையின் வால் அல்லது கழுத்து பகுதியை பிடித்து தொங்க கொடாது.
  • திமிலை தவிர காளையை வேறு இடத்தில் பிடித்து தொங்கினால் அந்த வீரர் நீக்கப்படுவார்.
  • காளையை வீரர்கள் சீண்டவோ, அடிக்கவோ கூடாது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rules and Regulations of Jallikattu

Rules and Regulations of Jallikattu
Story first published: Tuesday, January 10, 2017, 12:30 [IST]
Subscribe Newsletter