For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியன்று ஏன் அதிகமாக விளக்கு ஏற்றப்படுகிறது தெரியுமா?

தீபாவளி கொண்டாட்டத்தின் போது வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படும். அதற்குரிய காரணம் தெரியுமா?

|

தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொரு வருடம் கார்த்திகை மாதம் அமாவசையன்று தீபாவளி கொண்டாடப்படும். இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 18 தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் எல்லாரும் ஏராளமான வண்ண விளக்குகளை ஏற்றுவர். தீபாவளி கொண்டாட்டங்களில் முக்கிய இடமாக வீடுகளில் விளக்குகளை ஏற்றுவர்.

விதவிதமான விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. அதற்கான காரணங்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புராணம் :

புராணம் :

ராமர் தருமத்திற்காக போராடி ராவணனை வீழ்த்தினார். அதே போல கிருஷ்ணர் நரகாசுரனை வென்றார் அதாவது கெட்ட சக்திகள் அழிந்ததை கொண்டாடும் விதத்தில் நரகாசுரன் இறந்ததை கொண்டாடும் தினம் தான் தீபாவளி.

இனி கெட்ட சக்திகள் இல்லை அதனால் நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பும் என்று மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Image Courtesy

வரவேற்பு :

வரவேற்பு :

அந்த தினத்தில் கிருஷ்ணரையும், ராமரையும் தங்கள் வீடுகளுக்கு வரவேற்கும் பொருட்டு வீடுகளில் விளக்குகள் வைப்பர். அதே தினத்தில் செல்வத்தை அளிக்கும் லட்சுமியையும் வணங்குவர். ஒவ்வொரு விளக்கும் உங்களுக்கு தேவையான செல்வத்தை அளிக்கும் என்று நம்பப்பபடுகிறது.

லட்சுமி வருகை :

லட்சுமி வருகை :

முதல் நாள் இரவன்றே தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் துவங்கிடும். முதல் நாள் லட்சுமி வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் தீபாவளிக்கு முந்தைய தினமே வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தி, பலகாரங்கள் செய்து விளக்கேற்றி வழிபடுவர்.

லட்சுமி தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மறு நாள் லட்சுமி குபேர பூஜை செய்யப்படும். இதனால் எப்போதும் தங்கள் வீட்டில் செல்வ வளம் நிலைத்திருக்கும் என்று நம்புகிறார்கள்.

அறிவியல் காரணம் :

அறிவியல் காரணம் :

இது ஆன்மீக ரீதியல் மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் விளக்கேற்றவது நல்லது என்று சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகை குளிர் காலத்தில் கொண்டாடப்படுகிறது. அப்போது காற்றில் நுண்ணிய பாக்டீரியாக்கள் பரவியிருக்கும்.

இதனால் நோய்த்தொற்று ஏற்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர்க்க, வீடுகள் தோறும் விளக்கினை ஏற்றி வைத்தால் சின்ன சின்ன பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிந்திடும். இதனால் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

மனதுக்கு :

மனதுக்கு :

வெளியில் நாம் என்ன தான் சாமாதானம் சொல்லிக்கொண்டாலும் நம் மனமும் நம்ப வேண்டுமல்லவா? அதற்காகவும் தீபாவளியன்று விளக்கு ஏற்றப்படுகிறது. கெட்ட சக்திகள் அழித்தாகிவிட்டது.இங்கே கெட்ட சக்திகள் என்பது நம்முள் இருக்கும் தீய பழக்கங்கள்.

செல்வம் தரும் லட்சுமியை வரவேற்றுவிட்டோம் இனி நாம் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறோம், முன்னேறப்போகிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டாய் அமாவாசையன்று வருகின்ற தீபாவளி அன்று விளக்குகளால் வெளிச்சம் ஏற்றுகிறோம். இதே போல நம்முடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons for why do we light diyas during Diwali festival

Reasons for why do we light diyas during Diwali festival
Story first published: Tuesday, October 10, 2017, 13:18 [IST]
Desktop Bottom Promotion