For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவசாய நிலத்தில் புதைந்திருந்த 700 ஆண்டு பழைய மர்ம குகை கண்டுபிடிப்பு!

இது 12ம் நூற்றாண்டுகளில் நைட்ஸ் டெம்ப்ளர் குழுவினர் இரகசியமாக சந்தித்துக் கொள்ள உருவாக்கப்பட்ட குகை என கூறப்படுகிறது...

|

ஒரு புகைப்பட கலைஞர் கண்டுபிடித்த ஒரு அசாதாரண இடம். ராபிட் ஹோல் எனப்படும் முயல் தங்கும் ஓட்டையை தேடி சென்ற புகைப்பட கலைஞர்-க்கு விவசாய நிலத்தின் அடியே புதைந்திருக்கும் மர்ம குகைக் தென்பட்டது.

ராஜா காலங்களில் அரண்மனை, கோவில் மற்றும் மண்டபங்களில் இருந்து ஊருக்கு வெளிப்புறமாக ஒரு பாதாள வழி உருவாக்கி ஒரு குகையை அடையும்படி அல்லது ஊருக்கு வெளியே போர் காலங்களில் தப்பித்து செல்ல மர்மமான இடங்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள்.

இதுவும் அப்படியான ஒன்றாக இருக்காலம். இது 12ம் நூற்றாண்டுகளில் நைட்ஸ் டெம்ப்ளர் குழுவினர் இரகசியமாக சந்தித்துக் கொள்ள உருவாக்கப்பட்ட குகை என கூறப்படுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர்ம குகை!

மர்ம குகை!

மைக்கல் ஸ்காட் என்பவர் பர்மிங்காம் பகுதியை சேர்ந்தவர். இவர் இங்கிலாந்தின் ஸ்ரோப்ஷைர் எனுமிடத்தில் 700 ஆண்டுகள் பழைய மர்ம குகையை கண்டுபிடித்துள்ளார். இது ஒரு விவசாய நிலத்தின் அடியே புதைந்திருந்தது. ஒரு முயல் ஓட்டை மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது.

Image Source

பண்டைய காலத்து...

பண்டைய காலத்து...

ஸ்ரோப்ஷைர்-ல் இருக்கும் இந்த குகை பண்டையக் காலத்து குகை என அறியப்படுகிறது. இது தரைநிலத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு சிறிய சாதாரண குழி போன்று தான் இருக்கிறது. ஆனால், இதன் அடி பகுதி உலகின் அழகான குகைகளில் ஒன்றை தன்னுள் அடக்கி வைத்துள்ளது.

Image Source

நைட்ஸ் டெம்ப்ளர்!

நைட்ஸ் டெம்ப்ளர்!

டெம்ப்ளர் மெம்பர்களுக்கு இங்கே தான் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என கூறப்படுகிறது. இங்கே தான் அவர்களுக்கான இரகசிய சந்திப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் நடந்தன என்றும் அறியப்படுகிறது.

Image Source

விவசாய நிலத்தின் கீழே!

விவசாய நிலத்தின் கீழே!

விவசாய நிலத்தின் கீழே அமைந்திருக்கும் இந்த குகையை கண்டுபிடித்த புகைப்பட கலைஞர் மைக்கல் இந்த குகை மிகவும் சிறியது என்றும். ஆறடிக்கு மேல் இருப்பவர்கள் குனிந்து தான் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Image Source

தொடப்படாமல்...

தொடப்படாமல்...

அந்த முயல் ஓட்டையை பின்தொடர்ந்து போனால், ஒரு வழிப்பாதை தென்படுகிறது. அந்த வழியில் தொடர்ந்து சென்றால் இந்த குகையை அடைந்து விடலாம். இந்த குகை யாராலும் தொடப்படாமல் மிகவும் அழகாக, ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Image Source

வீடியோ!

வீடியோ!

மைக்கல் ஒரு வீடியோவை கண்ட பிறகு தான் இந்த குகையை தேடி சென்றுள்ளார். இந்த குகை மிகவும் பழமையானதாக இருக்கிறது. ஒரு சிறிய ஓட்டைக்கு கீழே இவ்வளவு பெரிய குகையை எப்படி அமைத்தனர் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் போட்டோஷூட் எடுக்கும் முன்னர் மைக்கல் இந்த குகைக்குள்ளே விளக்குகள் வைத்து ஒளி நிரம்ப செய்துள்ளார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Rabbit Hole Lead To Mysterious Cave!

A Rabbit Hole Lead To Mysterious Cave!
Desktop Bottom Promotion