ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து தப்பித்து வந்த நபர் கூறும் திகில் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

காரைக்குடியை சொந்த ஊராக கொண்டவர் அலக்சாண்டர். இவர் சென்னையில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தனது நண்பரிடம் இருந்து வாட்ஸ்-அப் மூலமாக ப்ளூ வேல் லிங்க் பெற்று இவர் விளையாட துவங்கியுள்ளார்.

ப்ளூ வேல் அட்மின் கொடுத்த டாஸ்க்குகளை முடிக்க பல இடங்களுக்கு இவர் தனியே சென்று வந்துள்ளார். இவர் மீது சந்தேகம் எழுந்து, போலீசில் புகார் அளித்து, அலக்சாண்டரை காப்பாற்றியுள்ளார், இவரது அண்ணன்  நிரவி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாட்ஸ்-அப் லிங்க்!

வாட்ஸ்-அப் லிங்க்!

அலக்ஸாண்டர் எனும் 25 வயது நபர், தனது நண்பரிடம் இருந்து ப்ளூ வேல் லிங்கை வாட்ஸ்-அப் மூலமாக பெற்றுள்ளார். விடுமுறைக்கு ஊருக்கு சென்ற அலக்சாண்டர் ப்ளூ வேல் விளையாட்டை மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.

அலக்சாண்டரின் போக்கை கண்டு சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் நிரவி, போலீஸில் புகார் அளித்து, பின்தொடர்ந்த போது தான், அலக்சாண்டர் ப்ளூ வேல் விளையாட்டை ஆடிவருவது தெரியவந்தது.

அடிமை!

அடிமை!

விளையாட துவங்கிய சில நாளிலேயே அலக்சாண்டர் ப்ளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். ப்ளூ வேல் கேம் என்பது ஒரு செயலி அல்லது ஒரு லிங்க் ஆனது அல்ல.

ஒவ்வொரு தனி நபருக்கும் ஒவ்வொரு தனி லிங்க் அவர்கள் உருவாக்குகிறார்கள். இதை அந்த ப்ளூ வேல் கேம் அட்மின் தான் உருவாக்குகிறார் என அலக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு இரண்டு மணி!

நள்ளிரவு இரண்டு மணி!

நள்ளிரவு இரண்டு மணியளவில் தான் தினமும், அந்த நாளுக்கான டாஸ்க் ப்ளூ வேல் அட்மினால் தரப்படுகிறது. ஆரம்பத்தில் சில நாட்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது என்றும், போக, போக மனதில் அச்சம் அதிகரிக்கும் படியான டாஸ்க்குகள் தரப்பட்டன என்றும் அலக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

சுடுகாடு!

சுடுகாடு!

அதிகாலை பேய்படம் பார்ப்பது, நள்ளிரவு சுடுகாடு சென்று புடைப்படம் எடுத்து பதிவு செய்வது என டாஸ்க்குகள் தரப்பட்டுள்ளன. இதனால் தான் மனரீதியாக மிகவும் துன்பமுற்று போனதாக அலக்சாண்டர் கூறியுள்ளார்.

ப்ளூ வேல் கேம் விளையாட துவங்கிய சில நாட்களில், மீண்டும் சென்னைக்கு வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளார் அலக்சாண்டர். வீட்டில் பெற்றோருடன் கூட பேசாது, தனி அறையில் இருந்து ப்ளூ வேல் கேம் விளையாடி வந்துள்ளார்.

கவுன்சிலிங் தீர்வு!

கவுன்சிலிங் தீர்வு!

கடைசியில் அலக்ஸாண்டரின் அண்ணன் நிரவி போலீஸில் அளித்த புகாரின் பேரில் அலக்சாண்டர் காப்பாற்றப்பட்டு அவருக்கு கவுன்சிலிங் அளித்து, இப்போது அலக்சாண்டர் மெல்ல, மெல்ல அந்த அச்சத்தில் இருந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், இந்த விளையாட்டை சாதாரணமாக நினைத்து விளையாட முயற்சிக்க வேண்டாம். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என பொது மக்களுக்கு அலக்சாண்டர் அறிவுரை கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Person Who Rescued From Blue Whale Suicide Game Reveals About Its Thrill Experience!

Person Who Rescued From Blue Whale Suicide Game Reveals About Its Thrill Experience!
Subscribe Newsletter