செய்திகளில் பரப்பரப்பாகி இந்தியர்களை பீதியடைய செய்த 5 மர்ம நிகழ்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

இது ஏலியன் பறக்கும் தட்டில் பறந்து வந்த கதையோ, சித்தர்கள், சுப்பர் நேச்சுரல் பவர் கொண்ட மனிதர்களை கொண்ட கதைகளோ இல்லை. நமது ஊர் தெருக்களில் நடந்த சில மர்மமான சம்பவங்கள்.

ஒருமுறை தலையில்லா முண்டமாக ஒரு மனிதன் இரவில் உலா வருகிறான் என்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. அதே போல ஒருவன் நிர்வாணமாக இரவு நேரத்தில் வீடுகளுக்குள் வந்து செல்கிறான் என்ற புகாரும் எழுந்தன.

கடைசியில் அது ஒரு திருடனின் பலே உக்தியென கண்டறியப்பட்டது. தன்னை யாரும் பிடித்துவிட கூடாது என்பதற்காக அந்த திருடன் நிர்வாணமாக வீடு புகுந்து தன் கைவரிசையை காட்டி வந்திருந்தான்.

இது போல அதிர்ச்சி மற்றும் மர்மமான முறையில் இந்தியாவின் பொது இடங்களில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பை தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்களின் கூந்தல் அறுப்பு!

பெண்களின் கூந்தல் அறுப்பு!

சமீபத்தில் ஹரியானா மற்றும் டெல்லியில் இடங்களில் மர்மமான முறையில் பொது இடங்களில், பொது போக்குவரத்தில் பயணித்து வந்த பெண்களின் ஜடை கூந்தல் மொத்தமாக அறுக்கப்பட்ட நிகழ்வுகள் அதிர்ச்சியை உண்டாக்கின.

இந்த செய்தி இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஆனால், இந்த சம்பவம் ஏன்? எதற்காக? யாரால் நடத்தப்பட்டதும், ஒரு நபரா? அல்லது ஏதேனும் குழுவினர் இதில் ஈடுபட்டனரா? என்ற கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை.

மயங்கி விழுந்த பெண்கள்!

மயங்கி விழுந்த பெண்கள்!

இப்படி கூந்தல் அறுக்கப்பட்ட பெண்கள் மத்தியில் ஒரு பொதுவான விஷயம் இருந்தது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் மத்தியில் திடீர் தலைவலி, மயக்கம் உண்டானது என ஒரு தகவல் அறியப்பட்டது.

மர்ம மனிதன்!

மர்ம மனிதன்!

அசோக் விஹார் -3 பகுதியை சேர்ந்த சுனிதா தேவி என்றவர், திடீரென ஒரு மர்ம நபர் தோன்றி மறைந்ததாகவும், அவர் மீண்டும் மர்மமாக தன் முன் தோன்றியதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு மயங்கி விழுந்த அவர், எழுந்து பார்த்த போது கூந்தல் அறுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கருங்குரங்கு!

கருங்குரங்கு!

கடந்த மே 2001ல் டெல்லியில் நான்கு அடி உயரத்தில் ஒரு கருங்குரங்கு இரும்பு ஹெல்மட், கைகளில் இரும்பு நகங்கள் கொண்டு மனிதர்களை தாக்க முயன்ற சம்பவமும் இந்தியாவில் பீதியை கிளப்பியது.

மக்கள் பதட்டம்!

மக்கள் பதட்டம்!

இந்த பீதியால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் அச்சத்துடன் அலைந்து வந்தனர். சிலர் அந்த குரங்கால் தாக்கப்பட்டதாக கூறினும், அப்படி எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இரத்தக்காட்டேரி!

இரத்தக்காட்டேரி!

தமிழ்நாட்டின் குண்டலப்பட்டி எனும் கிராமத்தில் மக்கள் 6 மணிக்கு மேல் மாலை வெளிவர அச்சம் கொண்டிருந்தனர். அங்கே இரத்தக்காட்டேரி உலாவி வருவதாக ஒரு செய்தி பரவி இருந்தது.

பசு மாடுகள் சிலவன இரத்தக்காட்டேரியால் தாக்கப்பட்டு இறந்தன என்ற செய்திகளும் வெளியாகின. ஆனால், அப்படி ஒரு உருவத்தை யாரும் பார்க்கவே இல்லை.

வாரணாசி!

வாரணாசி!

கடந்த ஜூலை, 2012ல் வாரணாசியில் "Muhnochwa" எனும் மர்மமான பறக்கும் பொருள் கண்டதாகவும், அது சிவப்பு, பச்சை ஒளியுடன் காணப்பட்டதாகவும் ஒரு செய்தி பரவியது.

இந்த அச்சத்தால் இரண்டு குழந்தைகள் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

பால் குடித்த சிலை!

பால் குடித்த சிலை!

இதுபற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. டெல்லியில் விநாயகர் சிலை பால் குடிக்கிறது என ஒரு செய்தி வெளியானது. பலரும் அந்த சிலைக்கு பாலூற்ற சென்றனர். இது ஒரு தேசிய செய்தியாக பெரும் உருவெடுத்தது. இந்த சம்பவம் செப்டம்பர் 21, 1995ல் நடந்தது.

இதை தொடர்ந்து பல சாமியார்கள் இது போன்ற சிலை செய்ய முயற்சித்தனர் ஆனால் அது சோபிக்கவில்லை. கடைசியில் சில நிபுணர்கள் அது பித்தலாட்டம் என் நிரூபித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mysterious Incidents Happened in India's Public Places!

Mysterious Incidents Happened in India's Public Places!
Subscribe Newsletter