இமாலயத்தில் வாழ்ந்து பிரம்மாண்ட பனிமனிதன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சில பல கார்டூன்களில், ஒருசில ஆங்கில படங்களில்... பற்பல காமிக் புத்தங்களில் எட்டி போன்ற கதாபாத்திரம் நாம் கண்டிருப்போம். ஆனால், அதை வெறும் குரங்காக மட்டுமே நாம் எண்ணி படித்திருப்போம்.

எட்டி என்பது இமாலயத்தில் வாழ்ந்து வரும் ஒரு பனிமனித மிருகம் என பலராலும் நம்பப்படும் ஒரு உயிரினம். இது உண்மையாகவே இருக்கிறதா? இல்லையா? என்பது ஒரு பெரிய விவாதத்திற்குரிய கேள்வி.

ஆனால், இதை சுற்றி உலா வந்துக் கொண்டிருக்கும் சில உண்மைகளும் (உண்மை என கூறப்படும்) விஷயங்களும் சில இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ரஷ்ய பகுதியை சேர்ந்த சைபீரியாவில் இருக்கும் மலைகள் தான் எட்டியின் வீடு என சிலர் கூறுகின்றனர். கரடி போல உடல் முழுக்க முடியும், குரங்கை போன்ற தோற்றமும், மனிதனை போல நடக்கும் தன்மையும் கொண்டதாக இந்த எட்டி காணப்படுகிறது.

#2

#2

எட்டி (YETI) எனும் இந்த உயிரினம் நேபாளம், இந்தியா மற்றும் திபெத் சார்ந்த இமாலய பகுதிகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது பார்க்க மனித குரங்கு போல காட்சியளிக்கும்.

#3

#3

நேபாள மக்கள் எட்டி எனும் இந்த பனிமனித உயிரினம் இரவு நேரங்களில் நடமாடும் உயிரினம் என நம்புகின்றனர். மேலும், இது இரவு நேரங்களில் விசில் மற்றும் உறுமும் சப்தங்கள் எழுப்பும் என்றும் கூறுகின்றனர். இது ஒரே அடியில் ஆளை கொல்லும் திறன் கொண்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

#4

#4

முதன் முதலில் எட்டியை பார்த்ததாக 1925-ல் ஒரு ஜெர்மன் புகைப்பட கலைஞர் பதிவு செய்திருந்தார். ஆனால், இதற்கு முன்னரே நேபாள மக்கள் பலர் எட்டியை பார்த்ததாக கூறியுள்ளனர்.

#5

#5

1953-ல் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே இமாலயத்தில் மாபெரும் பாதசுவடுகள் கண்டதாகவும், அது எட்டியின் கால் தடமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

#6

#6

2011-ல் பீஸ்ட் ப்ரம் தி ஈஸ்ட் என அழைக்கப்படும் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் நிகோலாய் வால்யூ எட்டியை டிராக் செய்கிறேன் என முயற்சித்து தோல்வியுற்றார்.

#7

#7

எட்டி பார்க்க குரங்கு மற்றும் பனிக்கரடியின் கலவையில் இருக்கலாம் என எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதை பார்த்ததாக கூறுபவர்களும் இப்படி ஒரு உருவை தான் கூறியிருக்கின்றனர்.

#8

#8

008-ல் ஜப்பானிய சாகசப்பயணிகள் ஒரு கால்தடத்தை கண்டதாகவும், அது எட்டியின் கால்தடமாக இருக்கலாம் என்றும் கூறினார். அந்த கால்தடத்தின் அளவு மட்டுமே எட்டு இன்ச் நீளத்திற்கு மேலாக இருந்தது என கூறியிருந்தனர். இது ஏறத்தாழ ஒரு மனிதனின் கால் தடத்தின் அளவு ஆகும்.

#9

#9

2010-ல் மத்திய சீனாவில் எட்டியின் குரல் போன்ற ஒரு மிருகத்தின் ஒலி பதிவானதாகவும். சரும முடிகள் இல்லாமல் அந்த மிருகம் காணப்பட்டது, அதை கரடி என எண்ணி வேட்டையாட வேட்டையர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள் என ஒரு தகவல் கூறப்பட்டது.

#10

#10

எட்டியை மங்கோலியாவில் அல்மாஸ் என்றும், வியட்நாமில் படுடுட் என்றும், வட அமெரிக்காவில் பிக் ஃபூட் என்றும், ஆஸ்திரேலியாவில் யோவி என்றும், ஸ்காட்லாந்தில் பியர் லியாத் என்றும் அழைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is YETI Real or Fake? Things to Know About Himalayas Giant Creature Snowman!

Is YETI Real or Fake? Things to Know About Himalayas Giant Creature Snowman!
Story first published: Tuesday, June 27, 2017, 15:20 [IST]