ஏன் மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

நம்ம தமிழ் நாட்டுல மீசைக்கு தனி மதிப்பு உண்டு. பொதுவாக தென்னிந்திய ஆண்கள் மீசைக்கு தனி மதிப்பு கொடுப்பார்கள். சிலருக்கு ஒரு ஆண் மகனோட அடையாளம்னா அது மீசை தான் என்ற ஒரு கருதும் இருக்கு . அது ஒரு கம்பீரத்தின் குறியீடா பார்க்கப்படுது.

Interesting Facts about Mustache

மீசைக்கு உலகத்தில் பல சொற்றோடர்கள் உள்ளன. பெரும்பாலானவை உணவு, பானங்கள் மற்றும் பாலினத்தை தொடர்பு படுத்தி வருகின்றன. அவை,

 பெஸ்ட் பிரென்ட்

பிரோ-மோ

குக்கி டஸ்ட்டர்

கிரேம்ப் காட்சர்

ஃபேஸ்-லேஸ்

கிராஸ் கிரின்

லிப் ஷாடோ

மானோ மீட்டர்

மவுத் ப்ரொ

மோஸ்

மிஸ்டர் .டிக்ளர்

டீ ஸ்ட்ரைனர்

அப்பர் லிப் ஹோல்ஸ்டரி

விஸ்கர்ஸ், விங்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீசையின் காந்த சக்தி:

மீசையின் காந்த சக்தி:

மீசைக்கு ஒரு காந்த சக்தி இருக்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை. பொதுவாக மீசை வைத்திருக்கும் ஒரு சராசரி மனிதன் தினமும் தனது மீசையை குறைந்தது 760 முறை தொடுகிறார் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

பெரிய மீசைக்கு பெரிய சம்பளம்:

பெரிய மீசைக்கு பெரிய சம்பளம்:

சில இந்திய நகரங்களில் மீசை வைத்திருக்கும் காவலர்களுக்கு சில சமயம் போனஸ் கொடுத்த நிகழ்வுகளும் நடந்தேறி இருக்கின்றன. இந்திய மாநிலங்களின் காவல்துறை மீசையை அதிகாரம் மற்றும் சக்தியின் அடையாள சின்னமாகவே கருதுகிறார்கள்.

முடி வளர்ச்சி:

முடி வளர்ச்சி:

சராசரி மனித முடி ஒரு நாளைக்கு 0.014 அங்குலங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு 5 அல்லது 6 அங்குலங்கள் வரை வளர்கிறது. சில வகை மீசைகள் மற்றவைகளை விட அதிகம் விரும்பத்தக்கவை. பர்ட் ரெனால்ட்ஸின் சின்னமான மீசை கிட்டத்தட்ட 4,000 பேஸ்புக் ரசிகர்களைக் கொண்டுள்ளது.

மீசையின் வளர்ச்சி பல் வேறு காலங்களுக்கு ஏற்றார் போல் மாறுபடும். வேறெந்த மனித உடல் முடியையும் விட மீசையின் முடி வேகமாக வளரும்.

இது இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தை விட வசந்த காலம் மற்றும் கோடை காலங்களில் அதிகமாக வளரக் கூடியது. ஒரு மீசை அதன் சொந்த எடையில் 20 சதவிகிதம் திரவத்தில் உறிஞ்சும் திறன் கொண்டது.

 நுண்துளைகள் :

நுண்துளைகள் :

சராசரியாக மனித ஆணின் தோல் சுமார் ஐந்து மில்லியன் நுண்குமிழிகளைக் கொண்டிருக்கிறது. இது கொரில்லாவைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஆகும், ஆனால் சிம்பன்ஸி விட குறைவு.

ஷேவிங்:

ஷேவிங்:

தொண்ணூறு சதவிகித ஆண்கள் ஒரு நாளுக்கு ஒருமுறை ஷேவ் செய்துவிடுகிறார்கள். ஷேவிங் 14 வயதில் தொடங்குகையில், ஒரு மனிதனின் வாழ்க்கையின் மொத்த ஐந்து மாதங்கள் வரை ஷேவிங் செய்வதிலேயே நேரம் செலவிடப் படுகிறது. உலகிலேயே முடிதிருத்தும் வணிகம் மிகவும் செழிப்பான வணிகமாகும். ரேசர்கள் மற்றும் கத்திகளின் வர்த்தகம் மட்டுமே 1.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

 மீசை என்றதும் நினைவுக்கு வரும் பிரபலங்கள்:

மீசை என்றதும் நினைவுக்கு வரும் பிரபலங்கள்:

பல்வேறு துறையில் மீசை என்றவுடன் பல்வேறு வகையான பிரபலங்களின் நினைவுக்கு வருவார்கள். அவர்களின் விவரங்கள் இதோ.

கவிஞர்களில் பாரதியின் மீசையை பற்றி சொல்லாமல் நாம் கடந்து சென்று விட முடியாது.

அரசியலில் மேல் உதட்டை மறைக்கும் அளவுக்கு இருக்கும் மா. போ. சி அவர்களின் மீசை.

சார்லி சாப்ளின் மற்றும் அடால்ப் ஹிட்லர் அவர்களின் மீசை ஒரு வகை.

காவல் துறையின் திரு. "வால்டர்" தேவாரம் மற்றும் திரு. நட்ராஜ் அவர்களின் மீசை ஒரு வித கம்பீரத்தை காட்டும்.

வீரப்பனின் மீசை அவரிடம் இருக்கும் ஒரு வித தைரியத்தை பறைசாற்றும்.

டாக்டர். மார்டின் லூதர் கிங் ஐ, ஜூனியர் "அமெரிக்க முஷ்டாக் இன்ஸ்டிடியூட்ஸின்" நினைவு கூறலில் "வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க மீசை வைத்த அமெரிக்கர்களில் முதன்மையானவர்" என குறிப்பிட்டு இருந்தார்கள்.

தமிழ் திரைத்துறையில் கூட மீசை ஆதிக்கத்தை செய்யத் தவறவில்லை. "தில்லு முள்ளு" எனும் சூப்பர் ஹிட் திரைப்படம் மீசையை மையமாகவே வைத்து எடுக்கப் பட்ட ஒரு நகைச்சுவை திரைப்படமாகும்.

"தேவர் மகன்" திரைப்படத்தில் திரு. கமலஹாசன் அவர்களின் மீசையை 30 வருடங்கள் நெருங்கும் வேளையிலும் மறக்க முடியாது.

"சிங்கம்" திரைப்படத்தில் திரு. சூர்யா அவர்களின் மீசையும் பெருவாரியான மக்களிடம் சென்று அடைந்து இருப்பதை பார்க்கிறோம்.

 மீசைக்காரர்கள், ரொம்ப நல்ல மனசு காரர்கள்:

மீசைக்காரர்கள், ரொம்ப நல்ல மனசு காரர்கள்:

பிரிட்டிஷ் பத்திரிகையான "தி கார்டியனின்" 2008 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில், 61 சதவிகிதத்தினர் மீசையுடன் மிகவும் மென்மையானவர்களாகவும், அதிநவீனமாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர், அதே நேரத்தில் 39 சதவிகிதத்தினர் அது முட்டாள்கள் மற்றும் நயவஞ்சகர்கள் மட்டுமே வைத்திருப்பதாக நம்பினர்.

எது எப்படியோ பதின் பருவத்தில் மீசை முளைக்க ஆரம்பித்தவுடன் ஒரு ஆண் மகனின் மனதில் எழும் ஒரு பெருமிதத்திற்கு அளவே இல்லை . இந்த மனநிலையை கடக்காத ஆண் மகன் இருக்கவே முடியாது.

என்ன இப்போ மீசைய முறுக்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts about Mustache

Interesting Facts about Mustache
Story first published: Monday, August 21, 2017, 17:53 [IST]
Subscribe Newsletter