For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை குலைநடுங்க வைத்த புகைப்படங்களின் தொகுப்பு!

உலகை குலைநடுங்க வைத்த புகைப்படங்களின் தொகுப்பு!

|

வார்த்தைகளில் வெளிப்படும் உணர்வுகள் அதை படிக்கும் நபர் மற்றும் படிக்கும் விதத்தை பொருத்தும் வேறுபடலாம். ஆனால், புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளில் பதிவாகும் காட்சிகளில் உணர்வுகள் வேறுபட வாய்ப்புகள் மிகவும் குறைவு.

புகைப்படத்தை ஒளியின் விளையாட்டு என்பார்கள். அதே போல, ஆயிரம் வார்த்தைகள் கூற வரும் செய்தியை ஒரே ஒரு புகைப்படம் மிக தெளிவாக கூறிவிடும் என்பதும் ஊடகத்தில் கூறப்படும் ஒரு பழமொழி.

உலகின் பல கொடூரமான விபத்துகள், போர்கள், போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில புகைப்படங்கள் அந்த காலத்திலேயே உலகளவில் வைரலானது மட்டுமின்றி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படங்களின் தொகுப்பு தான் இது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போபால் விஷவாயுத் தாக்கம் - 1984

போபால் விஷவாயுத் தாக்கம் - 1984

1984ல் போபாலில் நடந்த கொடூரமான விஷவாயு தாக்கத்தால் பெரும் உயிர் சேதம் நடந்தது. அந்த தாக்கத்தின் வெளிபாடு இன்று வரையும் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களிடம் தென்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய இந்த சம்பவத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது மண்ணில் புதைந்திருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட இந்த சிறு குழந்தையின் புகைப்படம்.

டாக்கா கார்டன் தொழிற்சாலை விபத்து - 2013

டாக்கா கார்டன் தொழிற்சாலை விபத்து - 2013

கடந்த ஏப்ரல் 25, 2013 அன்று நூற்றுக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது டாக்கா கார்டன் தொழிற்சாலை விபத்து. இந்த விபத்தின் போது ஒரு தம்பதி உயிர் போகும் அந்த கடைசி தருணத்திலும் அன்பை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவரி கட்டியணைத்தப்படி இருந்த பாகம் ஒன்று இன்று வரையிலும் சக்தி வாய்ந்த புகைப்படமாக கருதப்பட்டு வருகிறது.

ஆப்கான் பெண் - 1985

ஆப்கான் பெண் - 1985

1984ல் பச்சை நிற கண்கள் கொண்ட ஒரு ஆப்கான் பெண்ணின் புகைப்படம் நேஷனல் ஜியாகிரபியின் ஜூன் மாத அட்டைப்படத்தில் வெளியானது. இதை ஸ்டீவ் மெக்கரி என்பவை எடுத்திருந்தார். இந்த படத்திற்கு முதல் உலகின் மூன்றாவது உலக மோனலிசா என பெயர் வைத்தனர். ("the First World's Third World Mona Lisa".)

Image Credit: Steve McCurry

அலெப்போ சிறுவன் ஒம்ரான்

அலெப்போ சிறுவன் ஒம்ரான்

சிரியாவில் நடந்த போரில் ஐந்து வயதுமிக்க சிரியா சிறுவன் ஒம்ரானின் படம் ஒன்று வெளியானது. அதில் அவன் போர் தூசு மற்றும் இரத்தக்கறைகளுடன் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பு இடத்தில் இராணுவ வீரர்களால் சேர்க்கப்பட்ட நிலையில், பிரம்மையில் உறைந்துபோய் அமர்ந்திருந்தான். இது உலக அளவில் வைரலானது.

மூழ்கி கரையொதுங்கிய ஆலன் குர்டி!

மூழ்கி கரையொதுங்கிய ஆலன் குர்டி!

ஒட்டுமொத்த உலகின் தலைப்பு செய்தியாய் மாறினான் குழந்தை ஆலன் குர்டி. வெறும் மூன்று வயதே ஆன இந்த சிரியாவின் குழந்தையை துருக்கியை சேர்ந்த டெமிர் எனும் புகைப்பட கலைஞர் படம் எடுத்தார். ஆலன் கடலில் மூழ்கி கரையொதுங்கிய நிலையில் படம் எடுக்கப்பட்டிருந்தான்.

Image Credti: Nilüfer Demir, Turkish photographer.

சிரியாவின் சிறுமி - 2015

சிரியாவின் சிறுமி - 2015

சிரியாவை சேர்ந்த அகதிகளில் ஒரு சிறுமியின் படம் இது. அகதிகள் முகாமில் இருந்த இந்த சிறுமியை துருக்கியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் படம் எடுக்க சென்றார். புகைப்பட கேமராவை கண்ட அந்த சிறுமி துப்பாக்கி என நினைத்து தனது கைகளை தூக்கிக் கொண்டார். இந்த சம்பவம், சிரியாவில் எந்தளவிற்கு குழந்தைகள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டியது.

Image Credit: Osman Sagirli

ஓமியரே சான்செஸ், கொலம்பியா - 1985

ஓமியரே சான்செஸ், கொலம்பியா - 1985

கொலம்பியாவின் அர்மேரோ என்ற கிராமத்தில் 1985ல் ஓர் எரிமலை சிதறல் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் அந்த கிராமமே அழிந்தது. இந்த கொடூர விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 வயது சிறுமி ஓமியரே சான்செஸ் (படத்தில் உள்ளவர்). எரிமலை சாம்பல், சேறு, நீரில் தனது சொந்த வீட்டிலேயே மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார் ஓமியரே சான்செஸ். ஏறத்தாழ உயிருடன் மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நகர முடியாத சூழலில் சிக்கி தவித்துள்ளார் ஓமியரே சான்செஸ். கடைசியாக இவர் நான்காம் நாள் இறந்து போனார். இவரை பிரான்க் ஃபோர்நியர் என்பவர் படம் எடுத்திருந்தார். இந்த படத்திற்கு உலக பிரஸ் போட்டோ விருது கிடைத்தது.

Image Credit: Frank Fournier

குதுபுதின் அன்சாரி, குஜராத் கலவரம் - 2002

குதுபுதின் அன்சாரி, குஜராத் கலவரம் - 2002

2002ல் குஜராத்தில் ஓர் பெரும் கலவரம் வெடித்தது. ஒரு கும்பல் ரயிலில் ஏறி நூற்றுக்கணக்கான மக்களை அடித்து கொன்றனர். அதில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். இந்த கவரத்தின் வீடு திரும்பும் போது குதுபுதின் அன்சாரி என்பவர் தன்னை எரித்துக் கொல்ல சூழ்ந்த அந்த கொடூர கூட்டத்திடம் தன்னை விட்டுவிடுமாறு கையெடுத்து கும்பிட்டுக் கேட்டு கெஞ்சும் படமாக இது அமைந்திருந்தது. இது அங்கே எந்த அளவிற்கு கலவரம் ஏற்பட்டது என்பதை எடுத்துரைக்கும் படமாக திகழந்தது.

Image Credit: Arko Datta

திக் குவாங் டுக் - 1963

திக் குவாங் டுக் - 1963

வியட்நாமை சேர்ந்த புத்தமத துறவிகள் சைகோன் சாலையில் போராட்டம் நடத்தினார்கள். அதில் ஒரு துறவி தனக்கு தானே தீ வைத்துக் கொள்ளும் படமாக அமைந்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான். எப். கென்னடி இந்த படத்தை கண்டு, "இந்த உலகில் எந்த ஒரு புகைப்படமும் இந்த அளவிற்கு ஒரு பெரும் மனக்கிளர்ச்சியை தூண்டியது இல்லை" என தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

கழுகும், சிறுமியும் - 1993

கழுகும், சிறுமியும் - 1993

ஊட்டச்சத்து குறைப்பாடு கொண்டிருந்த சூடான் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையும் படம் இது. இதை கெவின் கார்டர் என்பவர் எடுத்திருந்தார். இந்த படம் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூடான் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த படம் விளக்கியிருந்தது.

Image Credit: Kevin Carter

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Images That Describes The Another Face of The World!

Images That Describes The Another Face of The World!
Story first published: Tuesday, November 14, 2017, 10:33 [IST]
Desktop Bottom Promotion