பாம்புகள் மட்டுமே வாழும் மர்ம தீவு - மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை!

Posted By:
Subscribe to Boldsky

லைப் ஆப் பை என்ற படத்தில், அந்த கதாநாயகன் தனியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு தீவுக்குள் மாட்டிக் கொள்வது போன்ற ஒரு காட்சி இருக்கும்.

இது எல்லாம் கற்பனையில் தான் பார்க்க முடியும் என்று நினைத்தால், நீங்கள் தான் பிரேசில் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பாம்புகள் தீவு பற்றி முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடம்!

இடம்!

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்திலிருந்து ஏறத்தாழ 33 கி.மீ. தொலைவில், 4,30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது இந்த பாம்புகள் தீவு!

இல்ஹா தா குய்மதா கிராண்டே!

இல்ஹா தா குய்மதா கிராண்டே!

இந்த பாம்புகள் தீவின் உண்மை பெயரி "Ilha da Queimada Grande" ஆகும். இந்த தீவில் எண்ணிலடங்காத அளவில் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காரணத்தினால் தான், உண்மை பெயரை மறந்து பாம்புகள் தீவு என பெயர் பெற்றது இந்த இடம்.

சுற்றுலா இடமா?

சுற்றுலா இடமா?

உலக மக்கள் உலகெங்கிலும் இருக்கும் பிரபல இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். சில ஆபத்தான இடங்களுக்கு தடை விதிக்கப்படிருக்கும். பாம்புகள் வாழும் இந்த அபாயகரமான இடம் உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் இந்தத் தீவும் ஒன்றாகும்.

நான்கடிக்கு ஒரு பாம்பு!

நான்கடிக்கு ஒரு பாம்பு!

இந்தத் தீவில் நீங்கள் கால் வைக்கும் ஒவ்வொரு நான்கடிக்கும் ஒரு பாம்பு இருக்கும். அதிலும் கோல்டன் பிட் வைப்பர் என்ற பாம்பு வகையே இங்கு அதிகளவில் இருக்கிறது என அறியபடுகிறது.

பாதுகாப்பு!

பாதுகாப்பு!

இந்தத் தீவில் உள்ள பாம்புகளை அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காகவே இந்த பாம்புகள் தீவு தடைசெய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது. மனிதர்களால் பாம்புகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என அனுமதிக்க மறுக்கின்றனர் பிரேசில் கப்பற்படையினர்.

சிறப்பு அனுமதி!

சிறப்பு அனுமதி!

ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவுக்குள் நுழைய வேண்டும் என்றால் கூட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ilha da Queimada Grande, The Snake Island!

Ilha da Queimada Grande, also known as Snake Island, is an island off the coast of Brazil in the Atlantic Ocean. It is administered as part of the municipality of Itanhaém in the State of São Paulo.
Subscribe Newsletter