அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்?

Written By:
Subscribe to Boldsky

வீட்டில் பணம் மட்டும் இருந்தால் அனைத்தும் கிடைத்துவிடாது. தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம். இவை அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்கண்டு

கல்கண்டு

இனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். எனவே கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

மஞ்சள், குங்குமம்

மஞ்சள், குங்குமம்

மஞ்சள் குங்குமம் என்றாலே லட்சுமி கடாட்சம் தான் நினைவில் வரும். இவை மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

கல் உப்பு

கல் உப்பு

பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.

வில்வ இலை

வில்வ இலை

வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு 'லட்சுமி வாசம்' என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

சுத்தம்

சுத்தம்

வீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல் போன்றவையாவும், மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும். காலையில் தலைவாயிலைத் துய்மை படுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத் துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தினசரி செய்து வந்தால் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாகும்.

வாஸ்து விதி 1

வாஸ்து விதி 1

கஷ்டப்பட்டு சம்பாதித்தால் மட்டும் போதாது. அதை பாதுகாக்கவும், பல்கிப்பெருக செய்யவும் வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் தங்குவதே இல்லை என்று சிலர் புலம்புவார்கள். வீட்டில் காசு தங்குவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில வழிமுறைகளை கூறுகிறது.

வாஸ்து விதி 2

வாஸ்து விதி 2

பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால், அது எப்போதும் காலியாத்தான் இருக்குமாம். அதில் வைத்து எடுக்கிற அளவுக்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வடகிழக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைத்தால் வரவுக்கு மீறிய செலவு வரும்.

வாஸ்து விதி 3

வாஸ்து விதி 3

தென் கிழக்கில் பணப்பெட்டியை வைத்தால் அக்னியில் போட்ட மாதிரி உடனே கரையும். வீட்டு பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும், செலவும் சரியாக இருக்கும்.

வாஸ்து விதி 4

வாஸ்து விதி 4

சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்தீர்களானால் பணம் வருவதும், போவதுமாக இருக்கும். பணப்பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு என்பது வாஸ்து அறிந்தவர்களின் வாக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to invite lakshmi to our home

How to invite lakshmi to our home