பில்லி, சூனியம் வைக்க பெண் குழந்தை உடலில் ஊசிகளை புகுத்திய கொடூரன்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றளவும் இந்தியாவில் பில்லி, சூனியம் வைக்கும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. இதை அவ்வப்போது நாமும் செய்திகளில் கண்டுதான் வருகிறோம்.

ஆனால், இது போன்ற சம்பவங்களுக்கு பின்னணியல் பலர் உயிரிழந்து வருகிறார்கள் என்பதை நாம் பெரிதாக கவனித்ததில்லை.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவின் ஒரு மருத்துவமனையில் உள்ளுறுப்புகளில் பல காயங்களுடன் 3 வயது குழந்தை அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தையின் உடலில் பெரியளவிலான ஊசிகள் குத்தப்பட்டிருந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் அனுமதி!

அதிக காய்ச்சல் என்ற ரீதியில் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தாய், தனது முதலாளி துன்புறுத்திய காரணத்தால் தான் காய்ச்சல் வந்தது என எண்ணினார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஊசிகள்!

ஊசிகள்!

ஆனால், சோதனையின் போது குழந்தையின் உடலில் நான்கு அங்குல அளவிலான ஏழு ஊசிகள் சொருகப்பட்திருந்ததை அறிந்தனர். கல்லீரல் மற்றும் சிறுநீர் பையில் இரண்டு ஊசிகள், சிறுநீரகம், பெண்ணுறுப்பு, வயிற்றின் அடிபகுதியில் ஒவ்வொரு ஊசிகள் இருந்ததை பரிசோதனையில் கண்டறிந்தனர்.

மரணம்!

மரணம்!

அந்த ஊசிகளை மருத்துவர்களால் அகற்ற முடியவில்லை. அகற்றுவதன் காரணமாக மேலும், இன்பெக்ஷன் அல்லது பிரச்சனை அதிகரிக்குமோ என அஞ்சினர்.

மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அந்த ஊசிகளை மருத்துவர்கள் அகற்றினர். பிறகு இன்பெக்ஷன் பரவாமல் தடுக்க மருந்துகள் கொடுத்து பரிசோதனை செய்து வந்தனர்.

ஆனால், பரிதாபத்திற்குரிய குழந்தை, நோய் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் மடிந்து போனது. அந்த ஊசிகளின் காரணத்தால் உடல் முழுவதும் இன்பெக்ஷன் பரவியதன் காரணமாக அந்த குழந்தை இறந்ததாக காரணம் கூறப்பட்டது.

அந்நபர்!

அந்நபர்!

குழந்தையின் தாய் வேலை செய்து வந்த இடத்தின் உரிமையாளர் தான் இது போன்ற பில்லி, சூனிய வேலைகள் செய்து வந்தவர். ஊசிகளை குத்தி கொடுமைப்படுத்திய அந்த நபருக்கான தண்டனை ஏதும் கிடைக்கவில்லை. இந்தியாவில் இதை எதிர்பார்ப்பது கடினம் தான்.

எத்தனை வழக்கள்!

எத்தனை வழக்கள்!

தொழில்நுட்பங்கள் அதிகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், முட்டாள்தனமான காரியங்களில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு எத்தனையோ பேர் பரிதாபமாக உயிரிழந்தும் வருகிறார்கள். இதற்கான முடிவு தான் என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Needles Were Found Inside A Girl’s Body After Horrific 'Black Magic' Abuse.

Needles Were Found Inside A Girl’s Body After Horrific 'Black Magic' Abuse.