மக்களை அடிமுட்டாளாக்கிய இன்டர்நெட் வைரல் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்" என்ற கூற்றை நாம் அறிந்திருப்போம். இதில் கண்ணால் காண்பது பொய் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்டர்நெட் பதிவுகள் தான். நீங்கள் பார்க்கும் முக்கால்வாசி வைரல், ட்ரென்ட்டிங் விஷயங்கள் போலியானவை தான்.

Fake Images of Mahatma Gandhi That Went Viral on Internet!

ஐந்து பாம்பு நாகம், நீரில் நடக்கும் மனிதன், ஆகாயத்தில் தோன்றிய கிருஷ்ணர், ஜீசஸ் என இந்த பட்டியல் மிகப்பெரியது. இதில், காந்தியை பற்றி போலியாக வைரலான சில படங்கள் மற்றும் கருத்துக்கள் பற்றி இங்கே, இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்தி நடனம்!

காந்தி நடனம்!

காந்தி ஒரு அயல்நாட்டு பெண்ணுடன் நடனம் ஆடுவது போல ஒரு படம் இன்டர்நெட்டில் அடிக்கடி வைரலாகும். ஆனால், அது ஒரு ஆஸ்திரேலிய நடிகர் காந்தியை போல வேடமிட்டு ஆடிய போது எடுத்த படமாகும்.

கோட்சே சுடுவதற்கு முன்!

கோட்சே சுடுவதற்கு முன்!

மிகவும் அரிய படம் என பகிரப்படும். கோட்சே காந்தியை சுடுவதற்கு சில நொடிகளுக்கு எடுக்கப்பட்ட படம் என பகிரப்பட்ட இந்த படம், ஜெர்மன் நடிகர் ஹோர்ஸ்ட் பச்சோலஸ் கோட்சேவாக நடித்த நைன் ஹவர்ஸ் டூ ராமா (Nine Hours to Rama) என்ற திரைப்படத்தில் வரும் காட்சி ஆகும்.

நெருக்கம்!

நெருக்கம்!

நேருவுடன் காந்தி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் படத்தை தான் போட்டோஷாப்பில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காந்தி சிரித்து பேசுவது போல எடிட் செய்துள்ளனர்.

புகைப்படங்கள் மட்டுமல்ல, காந்தி கூறியது என ஓரிரு கருத்துக்களும் கூட போலியாக பரப்பட்டுள்ளது.

கருத்து!

கருத்து!

போலி 1: "First they ignore you, then they laugh at you, then they fight you, then you win"

இப்படி ஒரு கருத்தை காந்தி கூறியதாக கூறப்படும் கூற்று பொய். இதை 1918 அமெரிக்க வர்த்தக யூனியனில் பேசும் போது நிகோலஸ் க்ளீன் என்பவர் கூறியதாக அறியப்படுகிறது.

கேள்வி!

கேள்வி!

பத்திரிக்கையாளர்: "What do you think of Western Civilization?"

காந்தி: "I think it would be a good idea."

ஒரு பேட்டியில் காந்தி இப்படி பதில் கூறியதாக உலாவும் பதிவும் போலியானது. இந்த பதிவு அவர் இறந்து 20 வருடங்கள் கழித்து பரவ ஆரம்பித்தது. முதன் முதலில் இந்த செய்தி அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் வெளிவந்து அதன் பிறகே வைரலானது என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fake Images of Mahatma Gandhi That Went Viral on Internet!

Fake Images of Mahatma Gandhi That Went Viral on Internet.
Subscribe Newsletter