For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாமுராய் பற்றிய திகைக்க வைக்கும் இரகசியங்கள் மற்றும் உண்மைகள்!

சாமுராய் பற்றிய திகைக்க வைக்கும் இரகசியங்கள் மற்றும் உண்மைகள்!

|

ஜப்பான் தொழில் மயமாவதற்கு முன் இருந்து ஒரு படை வீரர் இனம். இவர்கள் கிபி 7 - 19ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்ததாக பல வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. இவர்கள் சில சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தவர்கள். முக்கியமாக புஷிடோ எனப்படும் சட்டம் தான் ஒரு சாமுராய் எப்படி வாழ வேண்டும் என வழிவகுக்கும் தொகுப்பாகும். இவர்களுக்கென ஒழுக்கமுறைகள் என்னென்ன என்றும் அந்த சட்டத்திட்ட தொகுப்பில் கூறப்பட்டிருந்தது.

சாமுராய்களின் காலங்கள்...

0794 - 1185 : ஹியான் காலம்

1192 - 1333 : கமாகுரா காலம்

1333 - 1573 : முரோமச்சி காலம்

1573 - 1603 : அழுசி-மோமோயாமா காலம்

1603 - 1868 : இடோ காலம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சட்டத்திட்டம்!

சட்டத்திட்டம்!

சாமுராய்கள் புஷிடோ (Bushido) எனும் சட்டம் (Code) பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள். இதன் பொருள், "மாவீரனின் வழி" என்பதாகும். இந்த சட்டத் தொகுப்பை பின்பற்றாமல் எந்த ஒரு சாமுராயாலும் வாழ முடியாது.

மரணம்!

மரணம்!

புஷிடோ என்பது போலவே சாமுராய்கள் Seppuku எனும் மற்றுமொரு சட்டத் தொகுப்பையும் பின்பற்ற வேண்டும். ஒருவேளை தங்கள் வாழ்க்கை சட்டத் தொகுப்பை பின்பற்ற முடியவில்லை என்றாலோ, அல்லது எதிரிகளின் கையில் மாட்டிக் கொண்டாலோ சாமுராய்கள் தங்களை தற்கொலை செய்துக் கொள்வார்கள் இல்லையேல், வேறு ஒரு சாமுராய் வாளின் மூலம் தங்கள் மரணத்தை உறுதி செய்துக் கொள்வார்கள்.

இதை குறிக்கும் சட்டத் தொகுப்பு தான் செப்புக்கு (Seppuku) என்கிறார்கள். இதை மிகவும் கௌரவமாக கருதுகிறார்கள் சாமுராய்கள்.

எண்ணிக்கை!

எண்ணிக்கை!

பெரும்பாலும் உலகளவில் சமுராய் என்பவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருந்த சமூகத்தினர் என கருதப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சிறந்த மாவீர சமூகத்தினர் அன்றைய ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒருவராக இருந்தனர் என அறியப்படுகிறது.

ஃபேஷன்!

ஃபேஷன்!

சாமுராய்கள் ஃபேஷனுக்கு பெயர் போனவர்கள். அன்றைய காலத்தில் இவர்கள் தான் ஃபேஷன் பிரியர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் உடுத்தும் உடையில் இருந்து பயன்படுத்தும் கத்தி வரை அனைத்தும் சற்று வித்தியாசமாக இருக்கும்.

இவர்கள் எப்போதும் ஹகமா எனும் அகலமணா ட்ரவுசர் மற்றும் கிமோனோ அல்லது ஹிடடரே எனும் கத்தியை வைத்து உடுத்தக் கூடிய மேலாடை உடுத்தும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்களது மேலாடையில் கத்தி வைத்திருப்பது சாதாரணமாக கண்டால் தெரியாது.

கண்ணிமைக்கும் நொடியில் கத்தியெடுத்து வீசி தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் சமுராய்க்கள்.

சிகை அலங்காரம்!

சிகை அலங்காரம்!

இன்று ஆண்கள் மத்தியில் பிரபலமாக கருதப்படும் டாப்நாட் (Top Knot) எனும் சிகை அலங்காரம் சமுராய்களின் சிகை அலங்கார வகை ஆகும். இது அவர்களின் தனித்துவமான விஷயங்களில் ஒன்றாக இருந்தது. அதே போல, சாமுராய்கள் முழுமையாக தாடியோ, ஷேவிங் செய்யும் பழக்கமோ அல்லாமல், ஓரளவு மட்டும் ஷேவ் செய்து காணப்படுவார்கள்.

பெண் சாமுராய்!

பெண் சாமுராய்!

சாமுராய் என்றாலே அது ஆண் பாலினம் தான். சமுராய்களில் பெண்கள் அறவேயில்லை என்று தான் அறியப்படுகிறது. ஆனால், ஒன்னா புகிஷா (Onna-Bugeisha) என அழைக்கப்பட்ட பெண்களும் சமுராய் பயிற்சி பெற்றிருந்தார்கள். இந்த பெண் போர் வீராங்கனைகள், ஆண் சமுராய்களுடன் சேர்ந்து போரிலும் பங்குபெறுவார்கள்.

கருவி!

கருவி!

பெண் சமுராய்களான ஒன்னா புகிஷாக்களுக்கு என தனி போர் கருவிகள் இருந்தன. இவர்கள் பயன்படுத்தும் கத்தியின் பெயர் நகினடா (naginata) இது கொஞ்சம் வளைந்து காணப்படும் கத்தி, இதை சுழற்றுவது கொஞ்சம் எளிது. இது எடை அளவிலும் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.

ஆய்வு!

ஆய்வு!

வரலாற்று ஆய்வுகளில் பெண் சாமுராய்கள் பற்றி மிக அரிதாக தான் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், ஜப்பானிய போரில் பெண் போராளிகள் குறைவாக தான் பங்கெடுத்துள்ளனர். 1580 நடந்த சேபன் மாட்சுபரு என்ற போரில் கிடைத்த 105 சடலங்களில் 35 சடலங்கள் பெண்களுடையது ஆகும். இதர போர்களின் ஆய்வு தகவல்களிலும், இதே விகித எண்ணிக்கையில் தான் பெண் சடலங்கள் கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது.

முகமுடி!

முகமுடி!

சாமுராய்களின் முகமுடி இரண்டு வகையில் பயன்பட்டது. இன்று அவர்களை பாதுகாக்கும், எதிரிகளை அச்சுறுத்தும். மற்றொன்று, தன்னை தாக்க வரும் நபர் எப்படி இருப்பான் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மாட்டிக் கொண்டு தப்பித்தலும் கூட எதிரிகளிடம் முகத்தை காண்பிக்க மாட்டார்கள் சாமுராய்கள்.

உயரம் குறைவு!

உயரம் குறைவு!

சாமுராய்கள் பறந்து, பறந்து தாக்குவார்கள். மறைந்து, மறைந்து வருவார்கள். அவர்கள் எங்கிருந்து தாக்குகிறார்கள் என்பதை அறிய முடியாது என பொதுவான கருத்துக்கள் நிலவின. ஆனால், உண்மையில் சாமுராய்கள் உயரத்தில் குறைவானவர்கள். 16 நூற்றாண்டில் வாழ்ந்த சாமுராய்க்களின் உயரம் சராசரியாக 5'3 - 5'5 அடி உயரம் தான் இருந்திருக்கிறது.

கத்தி!

கத்தி!

சாமுராய்கள் பயன்படுத்தும் கத்தியின் பெயர் சோகுடோ (Chokuto). இது மிகவும் மெல்லிய கத்தி. மிக நேராக,கூறாக இருக்கும். இது போன்ற கத்திகளை இடைகால ஐரோப்பிய வீரர்கள் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. கத்தி உருவாக்கத்தில் சாமுராய்கள் மிகவும் தொன்மையானவர்களாக காணப்படுகிறார்கள். இவர்களது கத்தி உலகளவில் புகழ் பெற்றிருந்தது. இவர்களது கத்தி கொஞ்சம் வளைந்து தான் காணப்படும். பிரபலமாக காணப்பட்ட சாமுராய்க்களின் கத்தி கத்தானா (katana)

புத்திக் கூர்மை!

புத்திக் கூர்மை!

என்னதான் போர் களத்தில் தங்களது புகழ்பெற்ற கத்தானாவை கொண்டு சண்டையிட்டாலும். கத்தியின் கூர்மையை காட்டிலும், சாமுராய்க்களின் புத்திக் கூர்மை அதிகமாக இருக்கும். மிக சாதூர்யமாக சண்டையிடுவார்கள். யாரை, எப்படி, எப்போது சரியாக, கட்சிதமாக கொல்லவேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள் சாமுராய்க்கள்.

ஓரினச் சேர்க்கை!

ஓரினச் சேர்க்கை!

ஸ்பார்டன்ஸ் போலவே சாமுராய்களும் ஓரினச் சேர்க்கையை வரவேற்ப்பவர்களாக இருந்தனர் என்றும். அதை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டனர் என்றும் கருதப்படுகிறது. பயற்சி காலங்களில் ஒரு பயிற்சி அளிக்கும் சாமுராய் மற்றும் பயிற்சி பெரும் இளம் சாமுராய் மத்தியில் உறவு உண்டாவது சகஜமாக இருந்தது என கூறப்படுகிறது.

கல்வி!

கல்வி!

சாமுராய்களின் சிறந்த ஆயுதம் கல்வி. பெரும்பாலான சாமுராய்கள் மிகுந்த கல்வி ஆற்றல் பெற்றிருந்தனர். அவர்களது கல்வி அறிவு மற்றும் கணித திறன் மேலோங்கிக் காணப்பட்டது. ஐரோப்பியர்களை காட்டிலும் கல்வியில் சிறந்து காணப்பட்டனர் சாமுராய்கள்.

கல்வியிலும், போர் குணத்திலும் மட்டுமல்ல, சாமுராய்கள், கலைகளிலும் மேம்பட்டு இருந்தனர். தோட்டம், சிற்ப கலை, ஓவியம், மலர் அடுக்குதல் என எதையும் அழகாக காணும் திறன் பெற்றிருந்தனர் சாமுராய்கள்.

திருமணம்!

திருமணம்!

சாமுராய்க்களின் திருமணம் பெரும்பாலும் நிச்சயம் செய்தவையாக தான் இருந்தன. சாமுராயில் உயர் பதவியில் இருப்பவர்கள் சாமுராய் பெண்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். கீழ் தகுதியில் இருப்பவர்கள் வெளியாட்களையும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என சட்டங்கள் இருந்தன. இவர்களில் பெண்கள் டவுரி எடுத்து வரும் பழக்கமும் இருந்துள்ளது.

சாமுராய்கள் மத்தியிலும் விவாகரத்து பழக்கம் இருந்துள்ளது. ஆனால், மிக அரிதாக தான் விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்து பெற்றால், அந்த பெண் எடுத்து வந்த டவுரியை திரும்பி தர வேண்டும் என்ற நிபந்தனை இருந்துள்ளது.

சாமுராய் அழிவு!

சாமுராய் அழிவு!

கடைசியாக சாமுராய் மேற்கொண்ட போர் 1877ல் நடந்தது. அந்த போரின் பெயர் ஷிரோயமா போர் ஆகும். இதன் பிறகு புதிய அரசு நிறுவப்பட்டது. புதிய அரசு சாமுராய் சமூகத்தை எலிமினேட் செய்தது. இதன் பிறகு பெரும்பாலான சாமுராய்க்கள் கத்தியை கீழே போட்டுவிட்டு, பேனாவை கையில் எடுத்தனர். எழுத்தாளர், ஊடகவியலாளர் வேலைகளில் அதிகமாக சேர்ந்தனர். கத்தியை விட பேனா கூர்மையானது என்பதை அவர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள் போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Samurai!

Facts About Samurai!
Story first published: Monday, December 11, 2017, 15:49 [IST]
Desktop Bottom Promotion