நாசிப் படையினரின் வெறிச் செயலை வெளிச்சமிட்டுக் காட்டும் புகைப்படத் தொகுப்பு! - #WorldWarII

Posted By:
Subscribe to Boldsky
நாசிப் படையினரின் வெறிச் செயலை வெளிச்சமிட்டுக் காட்டும் புகைப்படத் தொகுப்பு! -

1939 -களில் , ஹென்றிக் ரோஸ் எனும் ஃப்ரீலான்சர் புகைப்படக் கலைஞர் ஒருவர் போலாந்தின் லோட்ஸ் க்ஹீத்தோ எனும் இடத்தில் நாசிப் படையினர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கிருந்த மக்களை கொத்துக் கொத்தாக கொன்றுக் குவித்த சம்பவங்களை, அங்கே ஏழை மக்கள் எப்படி வாழ்ந்தனர், சண்டையின் போதும், அதன் பிறகும் வெளிப்பட்ட அம்மக்களின் உணர்ச்சிகளை பதிவு செய்த புகைப்படங்கள்.

1944 வரை ஹென்றிக் மிக இரகசியமாக இந்த புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார். இவர் நாசிப் படையின் அட்டூழிய செயல்களை, அவர்களுக்கு தெரியுமால் எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை எல்லாம் ஹென்றிக் யாருக்கும் தெரியாத இடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு பிறகு இந்த புகைப்படங்கள் வெளியே சிக்கியுள்ளன. இந்த புகைப்படங்கள் நாசிப் படையின் வெறி செயலை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

All Image Credit: Henryk_Ross / nytimes

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தம்பதி!

தம்பதி!

1940 - 1944 இடைப்பட்ட காலத்தில். நாசிப் படையினர் போலாந்தின் லோட்ஸ் க்ஹீத்தோ பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த போது எடுக்கப்பட்ட தம்பதி இருவரின் புகைப்படம்.

உணவைத் தேடி!

உணவைத் தேடி!

1940-1944: நாசிப்படையின் ஆக்கிரமிப்பின் போது. ஒரு சிறுவன் பூமியில் உருளைக்கிழங்கு போன்ற ஏதாவது உணவுக் கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பாத்திரப் பண்டங்கள்!

பாத்திரப் பண்டங்கள்!

1944: லோட்ஸ் க்ஹீத்தோவில் நாசிப் படையின் ஆக்கிரமிப்புப் பகுதியில் மக்களை விரட்டியடித்த பின்னர், அவர்களுடைய பாத்திரப் பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடக்கும் இடத்தின் புகைப்படம்.

அம்மா, குழந்தை!

அம்மா, குழந்தை!

1940 - 1942: இளம் தாய் தனது பச்சிளம் குழந்தையை ஆரத்தழுவி முத்தமிடுவது போன்ற புகைப்படம். இவர்கள் லோட்ஸ் க்ஹீத்தோ பகுதின் காவலரின் குடும்பமாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

சிறுமி!

சிறுமி!

1940 - 1944: நாசிப் படையினர் போலாந்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த போது மக்களை கொத்துக் கொத்தாக கொன்றுக் குவித்துள்ளனர். இதில் இவர்கள் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு ஏதும் பார்கவில்லை. நாசியின் வேட்டைக்கு பலியாகப் போவதை அறியாமல் க்ஹீத்தோவில் பரிதாபமாக நின்றுக் கொண்டிருக்கும் சிறுமி.

யூத வரவேற்பு தூண்!

யூத வரவேற்பு தூண்!

க்ஹீத்தோவில் வருவோரை வரவேற்கும் தூண். இதில் யூதர் நேசமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இலட்சினையாக திகழும் இந்த தூணை தாண்டி உள்ளே வர நாசிப் படையினர் தடை விதித்திருந்தனர். ஒருவேளை உள்ள என்ன கொடுமை நடக்கிறது என்பதை யாரும் அறியாமல் இருக்க கூட இவ்வாறு சிதிருக்கலாம்.

இரகசியம்!

இரகசியம்!

1945: நண்பர்கள் கூட்டத்துடன் லோட்ஸ் க்ஹீத்தோவிற்கு வந்து ஹென்றிக் , பல படங்களின் நெகட்டிவ் மற்றும் இரகசிய கோப்புகளை மறைத்து வைத்தப் படம் என கருதப்படுவது.

பாதுகாப்பு இடம்!

பாதுகாப்பு இடம்!

1940-1944: பனிப்பொழிவுடனான குளிர்காலத்தில் போலாந்து நாட்டை சேர்ந்த ஆண், பெண்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு இடத்திற்கு கூட்டம், கூட்டமாக சென்றுக் கொண்டிருப்பதை காடும் புகைப்படம்.

கொலை!

கொலை!

1942: பாதுகாப்பு இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, சிறுவர்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு கொலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லும் புகைப்படம். ஈவிரக்கமற்ற சம்பவங்கள் பலவன அந்நாளில் நடந்துள்ளது.

நம்பிக்கையில்!

நம்பிக்கையில்!

1940-1944: இரண்டாம் உலகப் போரின் காரணத்தால் ஏற்பட்ட அழிவிற்கு பிறகு நம்பிக்கையுடன் வோல்போர்கா சாலையில், தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராவது உயிருடன் இருப்பார்களா என தேடிக் கொண்டிருக்கும் மக்கள்.

போட்டோ!

போட்டோ!

1940: கணக்கியல் துறைக்கு ஐடெண்டிபிகேஷனுக்கு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர் ஹென்றிக்.

எலும்பு குவியல்!

எலும்பு குவியல்!

1944: லோட்ஸ் க்ஹீத்தோவின் மைதானம் ஒன்றில், உலகப் போரின் போது கொன்றுக் குவிக்கப்பட்ட நம்பர்களின் மண்டையோடும், எலும்பு கூடுகளின் குவியலும்.

சிம்பல்!

சிம்பல்!

பழையக் கிழிந்த கோர்ட்டு ஒன்று. அதை காகங்களை விரட்ட பயன்படுத்தும் பொம்மை போல உருவாக்கியுள்ளனர். இதில், டேவிடின் மஞ்சள் ஸ்டார் மார்க் இருக்கிறது. இதை அவர்கள் இழந்த அனுபவத்தை அனுசரிக்கும் குறியாக உருவாக்கி வைத்துள்ளனர்.

முடிவு!

முடிவு!

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறிய பிறகு, தங்கள் இடத்திற்கு மீண்டும் திரும்பும் மக்கள். இருந்த செல்வதை எல்லாம் அழித்தப் பிறகு, உறவுகளை எல்லாம் கொன்ற பிறகு... நம்பிக்கையின்றி வாழ சென்றுக் கொண்டிருக்கும் காட்சி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Extremely Rare Yet Evocative Pictures That Even The Nazis Found Hard To Find!

Extremely Rare Yet Evocative Pictures That Even The Nazis Found Hard To Find!