பெண்ணுறுப்பை மாவில் சீல் செய்யும் வழக்கம் - இந்தியாவின் 7 வசித்திர மரண சடங்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மதம், இனம், பிரிவை சார்ந்த மக்கள் மத்தியிலும் பல கலாச்சார வேறுபாடுகள் காணப்படும். இது பிறப்பில் இருந்து இறப்பு வரை நாம் காணலாம்.

இறப்பு என்பது ஒரு முடிவு அல்ல, அந்த உயிருக்கு மறுபிறவி இருக்கிறது என்பதை வலுவாக நம்பும் மக்களில் இந்தியர்கள் மிகையனவர்கள்.

எப்போது, எப்படி, எந்த நிலையில் மரணம் அடைந்தால், அவருக்கான இறுதி சடங்கு எப்படி நடத்த வேண்டும் என்பதில் இருந்து இந்தியாவில் பல இறப்பு சடங்குகள் கடைபிடித்து வரப்படுகின்றன.

இவற்றில் கொஞ்சம் விசித்திரமாக காணப்படும் 7 சடங்குகள் பற்றி தான் நாம் இங்கே காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடுத்த பிறப்பு!

அடுத்த பிறப்பு!

இறுதி சண்டங்குகள் மற்றும் தகனம் முடிந்த பிறகு, ஒரு தட்டில் மணல் நிரப்பி அதை வீட்டின் முன் வைத்து விடுவார்கள். இதன் மூலமாக இறந்த ஆவியின் / உயிரின் அடுத்த பிறவிக்கான குறிகள் பற்றி அறிந்துக்கொள்ளலாம் என ஒரு சடங்கு முறை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதே குடும்பத்தில்!

அதே குடும்பத்தில்!

இறந்த நபர் அதே குடும்பத்தில் மீண்டும் பிறப்பார் என்ற ஒரு நம்பிக்கையும் இந்தியாவில் இருக்கிறது. அடுத்து அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு, இறந்த அந்த நபரின் உடலில் இருந்த மச்சம், குறிகள் அல்லது அந்த குழந்தை அவரை போன்ற குணாதிசயங்கள் கொண்டிருந்தால், அவரே மீண்டும் பிறந்திருக்கிறார் என நம்புகிறார்கள்.

அஸ்தி!

அஸ்தி!

தீமூட்டி தகனம் செய்யப்பட இறந்த நபரின் அஸ்தியை ஆற்றில் கரைப்பதால், அந்த நபரின் உயிர் விடுவிக்கப்படுகிறது என கருதப்படுகிறது. இதன் காரணத்தால் தான் சிலர் அஸ்தியை புனித ஆறுகளில் கரைக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள்.

பாம்பு கடி!

பாம்பு கடி!

இந்து மதத்தில் பாம்பு கடித்து இறப்பது அபசகுனமாக காணப்படுகிறது. இப்படி இறக்கும் நபரிகளின் உடலை தகனம் செய்வதில்லை. புதைக்காமல், தீமூட்டாமல், கட்டைகளில் கட்டி ஓடும் ஆற்றில் மிதக்கவிட்டுவிடுகிறார்கள். இதனால், ஆற்று உயிரினங்களால் அந்த உடல் உண்ணப்பட்டுவிடும்.

கர்ப்பகாலத்தில் மரணம்!

கர்ப்பகாலத்தில் மரணம்!

குழந்தை பெற்றெடுக்காமல் கர்ப்பகாலத்தில் ஒரு பெண் மரணம் அடைந்தால், வயிற்றில் இருக்கும் கருவை, தாயை புதைக்கும் முன்னர், தனியாக எடுத்து புதைத்து விடுகிறார்கள். பிறக்காமல் இறந்த எந்த ஒரு உயிராக இருந்தாலும், அந்த உடலை தீமூட்ட கூடாது, புதைக்க தான் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மாதவிடாய்!

மாதவிடாய்!

மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் இறந்துவிட்டால், அவரது பிறப்புறுப்பை தீமூட்டும் முன்னரே தனியாக மாவில் சீல் செய்து விடும் வழக்கம் ஒன்று பின்பற்றப்படுகிறதாம்.

இல்லையேல், அந்த பெண்ணை இறப்பிற்கு பிறகு தீய சக்திகள் கற்பழிக்கும் என்றும் கருதுகிறார்கள்.பெண்ணுறுப்பு மீது மாவு வைத்து அதன் மீது காசு வைத்து அதன் பிறகே தீமூட்டும் வழக்கமும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

சுத்திகரிப்பு!

சுத்திகரிப்பு!

ஒருவர் இறந்தால், அவரது ஆன்மா சுத்திகரிப்பாக ஆன்மீக புத்தகங்கள் படிப்பது, காரமான மற்றும் இனிப்பு உணவுகள் உண்பது மற்றும் பரிசுகள் பரிமாறிக் கொள்வது போன்றவை தடை செய்யப்படுகிறது.

இதற்கு காரணம் இந்த நேரத்தில் துக்கத்தை அனுசரிக்கும் விதமாக கருதப்படுகிறது. இது ஒரு நபர் இறந்ததில் இருந்து 13 நாட்கள் வரை கடைப்பிடிக்கபடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Death Customs in India That Will Stun you!

Death Customs in India That Will Stun you!
Subscribe Newsletter