மனிதர்களை விட மிருகங்கள் சிறந்தது என நிரூபிக்க இது போதாதா?

Written By:
Subscribe to Boldsky

நாம் சில மிருங்கள் சில மிருங்களுக்கு கடுமையான எதிரியாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் நாம் சில இடங்களில் எதிரியான மிருகங்கள், ஒன்றை ஒன்று பார்த்தாலே வேட்டையாடும் பயங்கரமான மிருகங்கள் கூட நட்பு பாராட்டுவதை கண்டிருப்போம்.

அது போன்று, மிருக காட்சி சாலைகள், வீடுகள், தெருக்கள் என நட்பு பாராட்டும் சில மிருங்களின் புகைப்படங்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மாடு மற்றும் பூனை

1. மாடு மற்றும் பூனை

பாலுக்காக மாட்டு பண்ணையில் காத்திருக்கும் பூனை, அங்குள்ள கறவை மாடுகளுடன் கொஞ்சும் காட்சி..!

2. எலி, பூனை!

2. எலி, பூனை!

யாரவது சண்டை போட்டுக்கொண்டிருந்தாலே ஏன் எலியும், பூனையுமாய் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்போம்..! ஆனால் இங்கு எலியும் பூனையும் கொஞ்சிக் கொண்டிருக்கின்றன.

3. பாலூட்டும் தாய்

3. பாலூட்டும் தாய்

பெண் நாய் ஒன்று பிறந்து பத்து நாட்களே ஆன புலிக்குட்டிக்கும், தனது குட்டி நாய்க்கும் பாலூட்டும் காட்சியை இதில் காணலாம்...! இது தான் தாயுள்ளம் என்பது!

4. குரங்கு மற்றும் புலி, சிங்கம்

4. குரங்கு மற்றும் புலி, சிங்கம்

யாரோ துரத்துராங்க போல இருக்கு..! சிங்க குட்டிக்கு பின்னால் வந்து ஒளிந்து கொண்ட குரங்கு குட்டி..! பார்க்கில் குரங்கு குட்டி, சிங்க குட்டி மற்றும் புலிக்குட்டி சேர்ந்து விளையாடும் காட்சி!

5. எருமை மீது அமந்த நாய்

5. எருமை மீது அமந்த நாய்

எத்தனை வேலைகளை செய்து முடித்ததோ தெரியவில்லை இந்த நாய். எருமை மீது ஒய்யாரமாய் அமர்ந்து லாகூர், ரவி நதிக்கரையில் ஒய்வெடுக்கிறது.

6. முதலை மற்றும் ஆமை

6. முதலை மற்றும் ஆமை

தண்ணீரில் இருக்கும் போது முதலை என்று விளையாட்டாக சொன்னாலே துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிவிடுவோம்..! இங்கு முதலை மீது சொகுசாக சவாரி செய்கிறது இந்த ஆமை!

7. நாயும் பூனையும்

7. நாயும் பூனையும்

நாயும் பூனையும் எதிரிகள் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் இவை எவ்வளவு அன்புடன் இணைந்திருக்கிறது என்பதை பாருங்கள்.. இவர்களின் தாய் கார் விபத்தில் இறந்து விட்டது என்பது சோகத்திற்குரியது.

8. நாயும் புலியும்

8. நாயும் புலியும்

ஒரே வயதே ஆன வெள்ளை புலியும் நான்கு வயதான நாயும் விளையாடிக்கொள்ளும் அழகான காட்சி..!

9. பாலூட்டும் நாய்

9. பாலூட்டும் நாய்

நாய்கள் எப்போதும் நன்றியுள்ளவை..! மற்றும் பாசத்திற்குரிவை..! இங்கு ஒரு நாய் பசியில் உள்ள பன்றி குட்டிக்கு பாலூட்டும் காட்சி..!

10. நாயும் குரங்கும்!

10. நாயும் குரங்கும்!

நாயும் குரங்கும் ஒன்றை ஒன்று அரவணித்து படுத்து சுகமாக உறங்கும் காட்சியை இந்த புகைப்படத்தில் நீங்கள் காணலாம்.

11. இரைக்கு இரை போடும் பறவை

11. இரைக்கு இரை போடும் பறவை

பறவைகளுக்கு மீன்கள் இரை போடுவதை பார்த்திருப்பீர்கள்! ஆனால் மீனுக்கு இரை போடும் பறவையை பார்த்திருக்கிறீர்களா?

12. வெள்ளத்தில் காப்பாற்றும் நண்பன்

12. வெள்ளத்தில் காப்பாற்றும் நண்பன்

தனது நண்பன் எலியை ஒரு தவளை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற தன்மீது ஏற்றி செல்லும் காட்சி!

13. குரங்கும் பறவையும்

13. குரங்கும் பறவையும்

இந்த பறவைக்கு பேன் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த குரங்கு..!

14. புலிக்கு தாயான நாய்

14. புலிக்கு தாயான நாய்

அழகான இந்த புலிக்குட்டிகளை தன் குழந்தைகள் போன்று எண்ணி தனது நாவால் தன் பாச மழையை பொழிய வைக்கும் தாயான நாய்..!

15. புலிக்கு பாலூட்டும் நாய்

15. புலிக்கு பாலூட்டும் நாய்

புதிதாக பிறந்த புலிக்குட்டிகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து, அந்த அழகிய புலிக்குட்டிகள் உயிர்வாழ வழி செய்கிறது இந்த நாய்..!

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

amazing love between animals

amazing love between animals
Story first published: Wednesday, July 26, 2017, 9:00 [IST]