லண்டன் நகரை பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

லண்டன், உலகின் முதன்மை நகரங்களில் ஒன்று. வர்த்தகம், சுற்றுலா, பணக்காரர்கள், தங்கம் அதிகமாக சுரங்கங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் பகுதி என பல வகைகளில் உலகின் முதன்மை இடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது லண்டன்.

Amazing Facts About London City!

Cover Image Credit: Pixbay

பல்வேறு உலக நாடுகளில் வசித்து வரும் சுற்றுலா விரும்பிகளின் வாழ்நாள் கனவில் ஒன்றாக இருப்பது லண்டன். மரங்கள் அதிகம், மாசு அதிகம், ட்ராபிக் அதிகம், சுரங்க பாதைகள் அதிகம், ஒரு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் லண்டனில் அதிகமாக தான் இருந்தது.

ரோமர்கள் நிறுவிய இடமாக இருந்து, இன்று உலகின் சக்திவாய்ந்த நகராக உருமாறியிருக்கும் லண்டன் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மை துளிகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் தொழில்!

பாலியல் தொழில்!

1- 1700-களில் லண்டனில் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்த பெண்களில் 20% பேர் பாலியல் தொழில் செய்து வந்தவர்கள் என அறியப்படுகிறது.

2- 16ம் நூற்றாண்டில் இரவு 9 மணிக்கு மேல் மனைவிகளை அடிக்கக் கூடாது என லண்டனில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் பெண்கள் மீதான அக்கறையில் இல்லை. இரவு சரியாக உறங்க முடிவதில்லை என குற்றச்சாட்டுகள் அதிகரித்த காரணத்தால் இந்த சட்டம் கொண்டுவந்துள்ளனர்.

பிக் பென் டவர்

பிக் பென் டவர்

3- லண்டனின் பிக் பென் எனும் டவர் மிகவும் பிரபலமான ஒன்று. லண்டன் என்றாலே இந்த டவரின் கடிகாரம் தான் நினைவிற்கு வரும். உண்மையில் இது டவர் இல்லை. இந்த கட்டிடத்தின் உள்ளே பெல் மட்டும் தான் இருக்கிறது.

சுற்றலா பயணிகள்

சுற்றலா பயணிகள்

4- உலக மக்களால் அதிகமாக விரும்பி காணப்படும் நகரம் லண்டன் தான். ஒரு வருடத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் விசிட் செய்யும் வெளிநாட்டு நகரங்களில் முதல் இடத்தில் இருக்கிறது லண்டன். வருடத்திற்கு 1.6 கோடி லண்டனுக்கு வந்து செல்கிறார்கள்.

5- கடந்த 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி காண்கையில், உலகின் விலையுயர்ந்த, மதிப்புமிக்க ஆடம்பர நகரங்களில் லண்டன் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

குதிரை வண்டி

குதிரை வண்டி

6- லண்டன் ரோம நாட்டவர்களால் நிறுவப்பட்ட ஒரு நகரமாகும். அப்போது அவர்கள் இந்த பகுதிக்கு லண்டினியம் என பெயர் வைத்திருந்தனர். காலப்போக்கில் லண்டினியம் லண்டனாக பெயர் மாற்றம் கொண்டது. உலகின் முக்கிய நகரங்களில் ஒரு நகராக இப்போது திகழ்கிறது லண்டன்.

7- லண்டனின் ட்ராபிக் காரணமாக வாகனம் நகரும் வேகமானது, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதே சாலையில் குதிரை வண்டி எப்படி நகர்ந்ததோ, அதே வேகம் தான் என்கிறார்கள்.

ஈபில் டவர் போல...

ஈபில் டவர் போல...

8- 1891ல் ஈபில் டவர் போலவே ஒரு கட்டிடத்தை கட்ட லண்டனில் முயற்சித்தனர். ஆனால், அந்த வடிவம் நிலையானதாக இல்லை. எப்படியும் இடிந்து விழுந்துவிடும் என அறியப்பட்டதால், 1907ல் அவர்களே இடித்துவிட்டனர்.

9- லண்டனில், பார்லிமெண்டில் ஒருவர் மரணம் அடைவதை இல்லீகலாக காண்கிறார்கள்.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

10 - லண்டனில் அதிகமான பில்லியனர்கள் வாழ்கிறார்கள். இந்த நகரில் மட்டுமே 72 பில்லியனர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகளவில் ஒரு நகரில் வாழும் அதிக பணக்காரர்கள் பட்டியலில், இந்த எண்ணிக்கை மூலம் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது.

11- லண்டனில் 300 வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு மொழிகள் கொண்டு இயங்கும் உலகின் முதன்மை நகர்களிலும் லண்டன் முக்கிய இடம் பெற்றுள்ளது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

11 - 1952ல் லண்டனில் கிரேட் ஸ்மோக் எனப்படும் பெரியளவிலான காற்று மாசு உருவானது. இந்த காரணத்தால் ஒருசில நாட்களில் 4000 - 12000 வரையிலான எண்ணிக்கையில் மக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்தனர்.

12- இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முக்கியமாக மக்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னாள் இருந்த மக்கள் எண்ணிக்கையை கடந்த 2015ம் ஆண்டில் தான் மீண்டும் எட்டியது லண்டன்.

13- லண்டனின் அண்டர்கிரவுண்ட்-ல் மட்டுமே ஐம்பது இலட்சம் எலிகள் வாழ்ந்து வருகின்றன.

பிளேக் டாக்ஸி

பிளேக் டாக்ஸி

14- லண்டனில் பிளேக் டாக்ஸி டிரைவர்கள் என சிலர் இருக்கிறார்கள். இந்த பிளேக் டாக்ஸி ஓட்ட சாதரணமாக அனுமதி வாங்கிவிட முடியாது. தி க்நாலேட்ஜ் எனும் தேர்வு எழுத வேண்டும். கிட்டத்தட்ட 25,000 - 50,000 சாலைகள் வரை இவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

விலங்குகள் பூங்கா

விலங்குகள் பூங்கா

15- 18ம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் விலங்குகள் பூங்காவிற்கு செல்ல வேண்டும் என்றால், நுழைவு சீட்டு பெற ஒரு நபர் பூனை, நாய் போன்ற ஏதனும் விலங்கை சிங்கத்திற்கு உணவாக அளிக்க கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததாம்.

உச்சரிப்பு!

உச்சரிப்பு!

16- ஆரம்பக் காலத்தில் பிரிட்டிஷ் உச்சரிப்பும், அமெரிக்க உச்சரிப்பும் ஒரே மாதிரியாக தான் இருந்ததாம். அமெரிக்க புரட்சி ஏற்பட்ட காலத்தில் தான், பிரிட்டிஷ் உயர்தட்டு மக்கள் இப்போதைய பிரிட்டிஷ் உச்சரிப்பை பேச துவங்கினார்கள் என கூறப்படுகிறது.

தங்கம்!

தங்கம்!

17- உலக அரசுகள் தன்வசம் கொண்டிருக்கும் தங்கத்தில் ஐந்தில் ஒரு பங்கு லண்டன் நகர் சாலைகளின் சுரங்கங்களில் தான் இருக்கிறதாம். இத மதிப்பு 248 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

18- 2014ல் ஒரு கார் பார்க் செய்யும் இடம் நான்கு இலட்சம் யூரோவிற்கு விற்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு மூன்று கோடியே ஏழு இலட்சம் ரூபாய் ஆகும்.

உணவகங்கள்!

உணவகங்கள்!

19- இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் இருக்கும் இந்திய உணவகங்களை விட, லண்டனில் அதிக இந்திய உணவகம் இருக்கிறது.

20- மிக குறைந்த காலத்தில் வைத்து நீக்கப்பட்ட ட்ராபிக் சிக்னல் சம்பவம் லண்டனில் தான் நடந்தது. 1868ல் லண்டனில் வைக்கப்பட்ட ஒரு ட்ராபிக் சிக்னல் போலீஸ்காரர் மற்றும் ட்ராபிக் ஆப்ரேட்டார் தாக்கப்பட்டதால் நீக்கப்பட்டது.

வாடகை!

வாடகை!

21- 1211ல் லீசுக்கு ராணியிடம் இருந்து வாங்கிய இடம் ஒன்றுக்கு இன்று வரை லண்டன் ராஜ குடும்பத்திற்கு வாடகை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாடகையானது இந்த இடம் போக, குதிரை லாடம், 61 ஆணி, ஒரு கோடரி மற்றும் அறுவாள் போன்றவைக்கும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

காடு!

காடு!

22- இங்கிலாந்தில் இருக்கும் 70% தொடர் வண்டிகளின் பயணம் ஒன்று லண்டனில் துவங்குகிறது. அல்லது லண்டனில் முடிவடைகிறது.

23- லண்டனில் அதிகப்படியான மரங்கள் இருக்கின்றன. ஐ.நா-வின் வரம்பின் படி பார்த்தல் லண்டனை ஒரு காடு என குறிப்பிடலாம்.

24- லண்டனில் வசிக்கும் இளம் மக்கள் தங்கள் ஒரு மாத வருவாயில் 60% வீட்டின் வாடகைக்கே செலவிடுகிறார்கள்.

மாசு!

மாசு!

25- லண்டன் பல்கலைகழகம் நடத்திய ஆய்வொன்றில், லண்டனின் அண்டர்கிரவுண்ட் பாதையில் 40 நிமிடம் பயணிப்பது இரண்டு சிகரட் பிடிப்பதற்கு சமம் என கூறப்பட்டுள்ளது.

அந்தளவிற்கு லண்டனின் அண்டர்கிரவுண்ட் பாதையில் தூசு இருக்கிறதாம். மேலும், இருபது நிமிடங்கள் பயணித்தாலே அந்நபரின் நுரையீரல் சிகரட் பிடிப்பதற்கு இணையான பாதிப்படைகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Facts About London City!

Amazing Facts About London City!