ஸ்னேப்சாட் மோகம்: மகளை ஆத்திரத்தில் நாய் கூண்டில் அடைத்த தந்தை!

Posted By:
Subscribe to Boldsky

இன்டர்நெட்டில் அடிக்கடி ஏதனும் செய்தி வைரல் ஆகும். நம் நாட்டில் பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் தான் இப்படி வைரல் ஆவார்கள். ஆனால், வெளி நாடுகளில் சாமானிய மக்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் பெரியளவில் வைரலாகும்.

அடடே, அப்படியா, அச்சச்சோ சொல்ல வைக்கும் அளவிற்கு பல செய்திகள் காட்டுத்தீ போல இன்டர்நெட்டில் பரவும். ஆனால், அவற்றில் பெரும்பாலான செய்திகளும், பதிவுகளும் போலியாக தான் இருக்கும்.

அப்படி சமீபத்தில் ஸ்னேப்சாட்டை அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்பட்டு ஆத்திரத்தில் மகளை நாய் கூண்டில் தந்தை அடைத்தார் என ஒரு செய்தி வைரலானது. அதை பற்றி இங்கு காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்னேப்சாட் மோகம்!

ஸ்னேப்சாட் மோகம்!

ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்றது தான் இந்த ஸ்னேப்சாட்டும். என்ன இதில் ப்ரைவசி கொஞ்சம் அதிகம். படங்களை திருட முடியாது. ஸ்க்ரீன்ஷாட் எடுத்தாலும் காண்பித்து கொடுத்துவிடுமாம். இது இளைஞர்கள் மத்தியில் தான் அதிகமாக பயன்பாட்டில் இருக்கிறது.

ஸ்னேப்சாட் பெண்!

ஸ்னேப்சாட் பெண்!

வாஷிங்க்டனை சேர்ந்த மோனிகா க்ரூஸ் என்ற 17 வயது பெண் அதிகமாக ஸ்னேப்சாட்ட்டில் நாய் ஃபில்டர் பயன்படுத்தி படங்களை பதிவு செய்துக் கொண்டிருந்த காரணத்தால் அவரது தந்தை ஆத்ரியாமடைந்து, அவரை நாய் கூண்டில் அடைத்தாக செய்திகள் பரவின.

நாய் கூண்டில் மகள்!

நாய் கூண்டில் மகள்!

மோனிகாவின் பாட்டி ஒருநாள் மாலை தொடர்ந்து கால் செய்து மோனிகா எடுக்கவில்லை என வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மூன்று நாட்கள்!

மூன்று நாட்கள்!

மூன்று நாட்கள் நாய் கூண்டில் அடைத்து வைக்கப்படிருந்த மோனிகா குளிக்க கூட வெளிவிடப்பட வில்லை. அவருக்கு வெறும் நீர் மட்டுமே உணவாக அளிக்கப்பட்டிருந்தது என செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

நண்பர்களிடம் கேட்டறிந்த மிஸ்டர். க்ரூஸ்!

நண்பர்களிடம் கேட்டறிந்த மிஸ்டர். க்ரூஸ்!

தனது மகளின் நாய் போன்ற முகம் கொண்ட படத்தை கண்டு நண்பர்களிடம் கேட்ட போது. அவர்கள் ஸ்னேப்சாட் பற்றியும். அதன் ஃபில்டர்கள் பற்றியும் கூறியுள்ளனர். இதை அவரது தந்தை விரும்பவில்லை.

முழு சோற்றில் பூசணிக்காய்!

முழு சோற்றில் பூசணிக்காய்!

இதை ஒழுக்கமான பழக்கமாக அவர் கருதவில்லை என்பது மட்டும் தான் உண்மை. மற்றபடி மோனிகாவை அவர் கூண்டில் அடைத்தார் என்பது,, அதை சுற்றிய சம்பவங்கள், படங்கள் எல்லாம் போலி.

இதுவே முதல் முறை அல்ல...

இதுவே முதல் முறை அல்ல...

இந்த செய்தி இன்டர்நெட்டில் வைரலவது இதுவே முதல் முறை அல்ல. உண்மையில் முதன் முதலாக கடந்த ஜூலை 2016-ல் இந்த செய்தி இதே படத்துடன் பரவியது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவைகளில் பரவும் பதிவுகள் செய்திகளாக உருமாறுகின்றன. இதனால் தான் இதுபோன்ற போலி செய்திகள் அதிகம் வைரல் ஆகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A man locked his daughter in a cage because she used Snapchat's "dog filter" too frequently.

A man locked his daughter in a cage because she used Snapchat's "dog filter" too frequently.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter