Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
டெல்லியின் 600 வருட பழைய திகில் மாளிகை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இங்கு பேய்கள் நடமாடும் டெல்லியின் 600 வருட பழைய திகில் மாளிகை கூறப்பட்டுள்ளது.
மல்ச்சா மஹால் என அழைக்கப்படும் இந்த திகில் மாளிகை டெல்லியில் அமைந்திருக்கிறது. இதை விளயாட் மஹால் என்றும் அழைக்கின்றனர். துக்ளக் சாம்ராஜியத்தின் போது தங்குமிடமாக இருந்துள்ளது இந்த மாளிகை.
பேய் கதைகளில் வருவது போலவே அடர்ந்து காட்டுக்கு நடுவே அமைந்திருக்கிறது இந்த மல்ச்சா மஹால். இந்த மாளிகை பற்றி அறிந்துக் கொள்ள சென்றவர்கள் பலர் அலறியடித்து தான் வெளிவந்துள்ளனர். சிலர் மாயமாகி போனதாகவும் கூறப்படுகிறது.

பேகம்!
பேகம் என்ற பெண்ணின் இரக்கமற்ற கொடூரமான மரணத்திற்கு பிறகு தான் இது பேய் மாளிகையாக ஆனது என கூறப்படுகிறது.

மர்மம்!
பேகம் ஒரு விசித்திரமான பெண் என்றும் இவரது அணுகுமுறை வினோதமாக இருக்கும் எனவும், மர்மம் விலகாத காரணத்தால் இவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

திருடப்பட்ட கல்லறை...
மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்ட பேகத்தின் கல்லறையில் இருந்து உடல் ஒருமுறை திருடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பேகத்தின் பிள்ளைகள் இவரது உடலை தகனம் செய்து அந்த சாம்பலை ஒரு கண்ணாடி குவளையில் அடைத்து வைத்தனர்.

தனிமையில் வாழ்ந்த பேகத்தின் பிள்ளைகள்...
பேகத்தின் பிள்ளைகளே குறைந்த செலவில், தனிமையில் தான் வாழ்கின்றனர் என கூறப்படுகிறது. இது போன்ற பல காரணத்தால் மால்ச்சல் மஹால் மெல்ல, மெல்ல பேய் மாளிகையாக உருமாற துவங்கியது. ஒரு காலத்தில் இந்த மால்ச்சல் மாளிகை பல மன்னர்களின் உடமையாக இருந்தது.

துக்ளக் ராஜ்ஜியம்!
துக்ளக் ராஜ்ஜியம் தான் முதன் முதலில் இங்கு வாழ்ந்தனர். மால்ச்சல் கிராமத்தில் இது ஒரு சமூக இடமாக இருந்தது. 600 வருட வரலாறு கொண்டுள்ளது மால்ச்சல் மஹால்.

பேகத்தின் மரணத்திற்கு பிறகு....
பேகத்தின் மரணத்திற்கு பிறகு சமூக விரோதிகள் அந்த மாளிகையில் செவங்கள் இருக்கின்றன என எண்ணி, தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.

துப்பாக்கியும், நாய்களும்!
தொடர்ந்து தாக்குதல், சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்ததால் அரசு இவர்களுக்கு துப்பாக்கி மற்றும் நாய்களை பாதுகாப்பிற்கு அளித்தது. பாதுகாப்பிற்கு உள்ள நாய்களுக்கு இறைச்சி வாங்க இளவரசர் சைக்களில் சென்று வருகிறார் என்றும் சில செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது.



Click it and Unblock the Notifications